திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; 4 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வக நுட்புநர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 12,480 Lab Technician Grade-II காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: Diploma in Medical laboratory Technology (DMLT) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 15,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: The Dean, Government Medical College, Block-1, Master Plan Complex Perumbakkam Village Thiruvallur- 602001 விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk