இடைத்தேர்தல்: மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
இடைத்தேர்தல்: மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால், அதற்கான எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளில் தொகுதி மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. "மக்களுக்காக வேலை செய்வார் என்பதால் கடந்த தேர்தலில் மரகதம் குமரவேலுக்கு ஓட்டு போட்டோம். அவர் கட்சி மாறியதில் எங்களுக்கு வருத்தம் தான்" என்கிறார், மதுராந்தகம் தொகுதியில் வசிக்கும் கண்ணம்மாள். அங்கே ஆளும்கட்சியான த.வெ.கவும் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பரப்புரையில் கூடுதல் வேகம் காட்டி வருகின்றன. இடைத்தேர்தல் தொடர்பாக மதுராந்தகம் தொகுதி மக்களின் மனநிலை என்ன? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன என்பதை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இத்தொகுதியில் விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன. மதுராந்தகம் நகராட்சி மற்றும் அச்சிரப்பாக்கம், கருங்குழி என இரண்டு பேரூராட்சிகளையும் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கிய தொகுதியாக மதுராந்தகம் உள்ளது. மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் தொடர்பான எந்தவித தாக்கத்தையும் மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை. 'தேர்தலுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்பதைப் போல தங்களின் அன்றாட பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தி வருவதைக் காண முடிந்தது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், அடுத்து வந்த நாட்களில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைந்தார். End of அதிகம் படிக்கப்பட்டது மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், த.வெ.க வேட்பாளராக அவர் களமிறங்கியுள்ளார். தி.மு.க சார்பில் பரந்தாமனும் அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத்தும் மா.கம்யூனிஸ்ட் வேட்பாளராக சுகந்தியும் நாம் தமிழர் சார்பில் ஜானகிராமனும் போட்டியிடுகின்றனர். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் நான்கு மாத இடைவெளியில் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. "தேர்தலை தவிர்த்திருக்கலாம்" என்ற மனநிலையில் மக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. "தேர்தலில் வெற்றி பெற்று சில நாட்களுக்குள் வேறு கட்சிக்கு மரகதம் குமரவேல் மாறிவிட்டார். இது தேவையற்றது" என்றார், மதுராந்தகம் நகரத்தில் பிபிசி தமிழிடம் பேசிய குலசேகரன். "பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி வெற்றி பெறும் என்ற மனநிலை உள்ளது. ஆனால், இங்கு வேட்பாளர் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அதேநேரத்தில், முதலமைச்சர் விஜய் மீதான ஆர்வத்தில் மக்கள் தவெகவுக்கு வாக்களிக்கலாம்" எனக் கூறுகிறார், மதுராந்தகத்தில் பூ வியாபாரம் செய்து வரும் ஹரிகுமார். மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் மாறிமாறி வெற்றி பெற்று வந்துள்ளன. "ஆனாலும், போதிய அளவு தொகுதி வளர்ச்சியடையவில்லை" எனக் கூறுகிறார் ஹரிகுமார். "மதுராந்தகத்தில் காய், கனி, பூ ஆகியவற்றுக்கு என தனியாக வணிக வளாகம் இல்லை" என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "தனது தந்தை காலத்தில் இருந்தே இதே நிலை தான் நீடிக்கிறது. தனியாக வணிக வளாகம் கட்டிக் கொடுத்தால் அடுத்து வரும் தலைமுறைக்கு உதவியாக இருக்கும்" என்கிறார். மதுராந்தகம் நகரத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனால், 'இங்கு போதிய வசதிகள் இல்லை' குற்றச்சாட்டைப் பரவலாக கேட்க முடிந்தது. "இது பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது. போதிய வசதிகள் இல்லை." எனக் கூறுகிறார், சமாதானம். "பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்பட்டால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும். மதுராந்தகத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் செங்கல்பட்டு உள்ளது" என ஆதங்கத்துடன் கூறுகிறார், ஹரிகுமார். அங்கிருந்து கிராமப்புற பகுதிகளுக்கு பிபிசி தமிழ் சென்றது. தென்னம்பட்டு கிராமத்தில் 125 நாள் வேலைத் திட்டத்தில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். தங்கள் கிராமத்தில் போதிய குடிநீர் வசதி, பேருந்து வசதியில்லாமல் தவித்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய ருத்ரா, "குடிநீர் சரியாக வருவதில்லை. பேருந்து வசதியும் முறையாக இல்லை. தினமும் இரண்டு முறை மினி பஸ் வருகிறது. பள்ளி குழந்தைகளுக்காக மட்டுமே அது ஓடுகிறது" என்கிறார். "யார் வெற்றி பெற்று வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களின் ஊர் பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் போதும்" எனக் கூறுகிறார் ருத்ரா. தங்கள் கிராமத்தில் மின்வெட்டு பிரச்னை நீடிப்பதாகக் கூறுகிறார், புளியரணங்கோட்டை கிராமத்தில் வசிக்கும் ராசாத்தி. " எப்போதும் மின்வெட்டு ஏற்படும் எனத் தெரியாது. எங்கள் கிராமத்தில் பலரும் குடிசைகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அரசு வீடுகள் கட்டிக் கொடுத்தால் நல்லது" என்கிறார் அவர். இடைத்தேர்தல் தொடர்பான ஆர்வம் மக்கள் மத்தியில் பரவலாக தென்படாவிட்டாலும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருவதைப் பார்க்க முடிந்தது. த.வெ.க வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேல் கட்சி மாறியதை முன்வைத்து தி.மு.க, அ.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். "அ.தி.மு.கவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு த.வெ.க பக்கம் சென்றதால் மரகதம் குமரவேல் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளர் மீதான பார்வையும் இது தான்" என்கிறார் பரந்தாமன். அ.தி.மு.கவுக்கு மறுபடியும் வாக்களித்தால் என்ன ஆகும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அவர் கூறினார். வெள்ளிக்கிழமை மதுராந்தகத்துக்கு பிபிசி தமிழ் சென்றபோது கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். விலைவாசி, மின்வெட்டு, தவெக தேர்தல் வாக்குறுதிகளின் நிலை ஆகிய மூன்று விஷயங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் அவர் பேசினார். கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் த.வெ.க இரண்டாம் பிடித்தது. தி.மு.க மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. "தற்போது த.வெ.க வேட்பாளராக மரகதம் குமரவேல் களமிறங்கும் நிலையில் தி.மு.கவின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?" என பரந்தாமனிடம் பிபிசி தமிழ் கேட்டது. " அந்தந்த நேரத்தில் யார் சரியாக இருப்பார்கள் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கின்றனர். தற்போது த.வெ.க. வேட்பாளர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று அவர் கூறினார். இதே கருத்தை முன்வைக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுகந்தி. "கட்சியைத் தொடங்கி குறுகிய காலத்தில் த.வெ.க ஆட்சியைப் பிடித்தது. மாற்றம் வரும் என எதிர்பார்த்த ஏக்கத்துடன் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது" என்கிறார் அவர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அ.தி.மு.க வேட்பாளரை விலைக்கு வாங்கி வேட்பாளராக நிறுத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் வேலையாக பார்க்கிறோம். இதன் காரணமாகவே ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் தேர்தலில் த.வெ.கவை ஆதரிக்க முடியாத நிலையில் நிற்கிறோம்" எனக் கூறுகிறார். இங்கு அ.தி.மு.க வேட்பாளராக கணிதா சம்பத் போட்டியிடுகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கணிதா சம்பத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இது திணிக்கப்பட்ட தேர்தலாக உள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்" எனப் பேசினார். அ.தி.மு.கவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் ஒன்றாக மதுராந்தகம் உள்ளது. அந்தவகையில், 'இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும்' என்ற முனைப்பில் அ.தி.மு.க தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனது வழக்கமான பாணியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. " மக்களுக்காக பணியைச் செய்வதில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க என மூன்று கட்சிகளும் தோற்றுவிட்டன" எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமன். மதுராந்தம் தொகுதியில் மாற்று எனக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.கவுக்கும் மாற்று என்பதை முழக்கமாக முன்வைக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுவதாகவும் அவர் பேசி வருகிறார். பட மூலாதாரம், TVK/YT தான் த.வெ.கவிடம் விலை போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் விளக்கம் அளித்தார். வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) மதுராந்தகத்தில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர், "எங்கு பிரசாரம் நடந்தாலும் தி.மு.கவும் அதற்கு உடந்தையாக இருக்கும் அ.தி.மு.கவும் என் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டு இதுதான் " எனக் கூறினார். "தி.மு.க. உடன் சேர்ந்து அ.தி.மு.க ஆட்சியமைப்பது தொடர்பாக திட்டம் தீட்டியது தான் காரணம் நான் கட்சியை விட்டு விலக காரணம். தி.மு.கவை எதிர்த்து எதற்காக எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கினாரோ, அதற்கு மாறாக ஆட்சியமைக்க முற்பட்டனர். அதனால் தான் வெளியில் வந்தேன்" என விளக்கம் அளித்தார். தான் விலைபோய்விட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்த மரகதம் குமரவேல், "ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் மாபெரும் வெற்றியை த.வெ.க பெற்றது. எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்? நான் ஏன் பெட்டியை வாங்கப் போகிறேன்?" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை