உடல்நலம் சரியில்லாதபோதும் விடுப்பு எடுக்காமல் வேலைக்கு செல்கிறீர்களா? இந்த மனநிலை உணர்த்தும் விஷயங்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
உடல்நலம் சரியில்லாதபோதும் விடுப்பு எடுக்காமல் வேலைக்கு செல்கிறீர்களா? இந்த மனநிலை உணர்த்தும் விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images நீங்கள் காலையில் விழித்தெழும்போது உடல்நலம் சரியில்லை என தோன்றுகிறது. ஆனால் பணியிடத்தில் அன்றைய நாள் ஒரு முக்கிய நாளாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவேளை உங்கள் பதில் "வேலைக்குச் செல்வேன்" அல்லது ஆன்லைனில் லாக்-இன் செய்வேன் என்பதாக இருந்தால், இப்படிச் செய்யும் ஒரேயொரு நபர் நீங்கள் மட்டுமல்ல. பிரிட்டனில் மூன்றில் ஒரு பகுதியிலிருந்து பாதி பேர் வரை, உடல்நிலை சரியில்லாதபோதும் வேலை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை நிபுணர்கள் 'பிரசென்டீயிசம்' (presenteeism) என்று குறிப்பிடுகின்றனர். நோய்வாய்ப்பட்டிருக்கும்போது நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பது, ஒரு தனிநபராக உங்களைப் பற்றியும், நீங்கள் பணியாற்றும் பணியிடத்தைப் பற்றியும் பல விஷயங்களைச் சொல்கிறது. "இளம் தலைமுறையினருக்கு 'ஸ்னோஃப்ளேக்' அதாவது 'பனித்துளி' (மனதளவில் பலவீனமானவர்கள்) என்ற முத்திரை குத்தப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல" என்கிறார் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரும், பணியிட நலன் குறித்த உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவருமான சர் கேரி கூப்பர். இதை ஆதரிக்கும் வகையில், பிரிட்டனின் தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகளும் உள்ளன. கடந்த ஆண்டு, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட பணியாளர்கள் சராசரியாக 2.4 நாட்கள் மட்டுமே உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்துள்ளனர். அதேவேளையில், 50 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் சராசரியாக 6.2 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளனர். பிரிட்டன் அரசுக்கு இது தொடர்பான வேலைவாய்ப்புக் கொள்கைகளில் ஆலோசனைகளை வழங்கியுள்ள சர் கேரி, இதற்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார். End of அதிகம் படிக்கப்பட்டது இளம் வயதினர், வேலைப் பாதுகாப்பு குறைவாக இருக்கும் பணிகளில், குறிப்பாக 'ஜீரோ-ஹவர்ஸ்' (குறிப்பிட்ட வேலைநேர உத்தரவாதம் இல்லாத தற்காலிக ஒப்பந்தங்கள்) ஒப்பந்தங்கள் போன்ற வேலை முறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், நீண்டகால உடல்நலப் பிரச்னைகள் மற்றும் மூட்டு தொடர்பான பாதிப்புகள் இளம் வயதினருக்கு குறைவாக இருப்பதால், உடல்நலக்குறைவு காரணமாக அவர்கள் விடுப்பு எடுப்பதும் குறைவாக இருக்கிறது. பட மூலாதாரம், Getty Images இது குறித்தும் மேலும் விரிவாகப் பேசும் சர் கேரி, "முதலாளிகள் தங்களை எப்படி நடத்த வேண்டும் மற்றும் தங்களது நலனில் எப்படி அக்கறை காட்ட வேண்டும் என்பதில் இளைய தலைமுறையினருக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்". "மூத்தத் தலைமுறையினர் சில விஷயங்களைப் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருந்திருக்கலாம். ஆனால், அந்த அணுகுமுறை ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது". "விடுப்பு எடுப்பதைப் பொறுத்தவரை, இளம் வயதினர் மனநலனையும் ஒட்டுமொத்த உடல்நலத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க விரும்புகிறார்கள்; அதை அப்படியே புறந்தள்ளிவிட்டு வேலையைத் தொடர வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை." பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஒருவர் நோய்வாய்ப்படும்போது விடுப்பு எடுக்கும் அணுகுமுறையை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. சிலருக்கு, வேலை என்பது அவர்களின் தனிப்பட்ட அடையாளத்துடன் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். பணியிட உளவியலில் இதனை 'வேலை மையத்தன்மை' என்று குறிப்பிடுகின்றனர். இது பணியில் அதிக ஈடுபாடு, அர்ப்பணிப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தாண்டி கூடுதல் முயற்சி செய்யும் மனப்பான்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலை உங்கள் அடையாளத்தின் முக்கியமான பகுதியாக இருந்தால், பணிக்கு வராமல் இருப்பது என்பது, தற்காலிகமாக உங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியையே இழந்துவிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். "இத்தகைய மனிதர்கள் தொடர்ந்து வேலைக்கு வர வேண்டும் என்ற பலமான விருப்பத்தை உணர்கிறார்கள்," என்கிறார் பணியிட நலவாழ்வு குறித்து எழுதும் உளவியலாளர் ஆட்ரி டாங். மருத்துவம், செவிலியர் பணி, ஆசிரியர் பணி போன்ற அர்ப்பணிப்பு சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களிடம் இந்த மனப்போக்கு அதிகமாகக் காணப்படுகிறது என்று அவர் கூறுகிறார். "சாதாரணமாக ஒரு நாள் விடுப்பு எடுப்பதை விட, பணிக்கு வராமல் இருப்பதற்கு ஏதேனும் உடற்காயம் அல்லது விபத்து போன்ற காரணம் இருந்தால் பரவாயில்லை என்று அவர்கள் கூறுவதை அடிக்கடி கேட்கிறோம்." மற்றவர்கள் தங்களைப் பலவீனமானவர்களாகவோ அல்லது சோம்பேறிகளாகவோ மற்றவர்கள் கருதிவிடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இளம் வயதினர் இதுபோன்ற எண்ணங்களுக்கு குறிப்பாக ஆளாகக்கூடும் என்கிறார் டாங். "அவர்கள் தங்களது தொழில் வாழ்க்கையின் தொடக்கக் கட்டத்தில் இருக்க வாய்ப்புள்ளது, அதனால் ஒரு எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்புவதில்லை." பட மூலாதாரம், Getty Images பணியிடக் கலாசாரமும் மனிதர்களின் நடத்தைகளும், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தயங்குகிறார்களா என்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார், உளவியலாளர் தாரா க்வின்-சிரிலோ. பணிக் குழுக்களில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் வேலைப் பளு அதிகமாக இருக்கும்போதும், மாற்று ஏற்பாடுகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும்போதும், தங்களது விடுப்பு சக ஊழியர்களின் வேலைப் பளுவை அதிகரிக்கும் என்பதை ஊழியர்கள் உணர்கிறார்கள். "ஊழியர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைவிட உற்பத்தித்திறனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் ஆரோக்கியமற்ற பணியிடக் கலாசாரத்தில், குற்ற உணர்வும் அவமான உணர்வும் முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்கிறார் க்வின்-சிரிலோ. "சில பணியிடங்களில், 'ஓயாது உழைக்கும்' கலாசாரம் நிலவுகிறது. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்திலும் தொடர்ந்து பணியாற்றுமாறு அது மக்களைத் தூண்டுகிறது." இத்தகைய பணியிடக் கலாசாரங்கள், 'பிரசென்டீசத்தை' ஊக்குவிக்கின்றன. அதாவது, உடல்நிலை சரியில்லாதபோதும் வேலைக்கு வருவது அல்லது தொடர்ந்து பணியாற்றுவது. தங்களது உடல்நிலை எப்படி இருந்தாலும் வேலைக்கு வருவதற்காகத் தாங்கள் மதிக்கப்படுவதாக ஊழியர்கள் உணர்கிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்ட நேரத்திலும் வேலை செய்பவர்களை மேலாளர்கள் பாராட்டும்போது, அந்தச் செய்தியை பிற ஊழியர்களும் விரைவாக உள்வாங்கிக்கொள்கின்றனர். பட மூலாதாரம், Getty Images/Jacob Wackerhausen "ஆரோக்கியமான பணிச்சூழலில், ஊழியர்கள் தங்களது நல்வாழ்வு மற்றும் மருத்துவ விடுப்பு குறித்து வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச முடிய வேண்டும்" என்கிறார் க்வின்-சிரிலோ. இதில் நம்பிக்கையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவர் விடுப்பு எடுப்பது வழக்கமாக சந்தேகத்துடனோ அல்லது எதிர்மறையாகவோ பார்க்கப்பட்டால், பிறர் நம்மைத் தவறாக எடைபோட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில், நியாயமான காரணத்துக்காகக் கூட விடுப்பு எடுக்க ஊழியர்கள் தயங்குவார்கள். க்வின்-சிரிலோவின் கூற்றுப்படி, இதுபோன்ற சூழல் பணியிடத்தில் மிகப்பெரிய எச்சரிக்கை அறிகுறியாகும். நீங்கள் வேலை செய்ய முடியாத அளவுக்கு உடல்நலக் குறைவோடு இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிப்பது எப்போதும் எளிதான காரியம் அல்ல. உடல்நலக் குறைவைப் பொறுத்தவரை, சில பொதுவான வழிகாட்டுதல்கள் உள்ளன என்கிறார் டாங். "வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால், அறிகுறிகள் நீங்கிய பிறகு 48 மணி நேரம் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால், அது நீங்கிய பிறகு குறைந்தது 24 மணி நேரம் வீட்டில் இருப்பது நல்லது. அத்தகைய சூழ்நிலைகளில் உங்களால் எப்படியும் திறம்பட வேலை செய்ய முடியாது." இதைத் தாண்டி, முடிவெடுப்பது சற்று சிக்கலானதாகிவிடுகிறது என்கிறார் டாங். "இருமல் மற்றும் சளி போன்றவற்றில்தான் முடிவெடுப்பது சற்று குழப்பமானதாக இருக்கும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, பணியிடத்தில் இதுதொடர்பான அணுகுமுறையும் மாறியுள்ளது. பொதுவாக, உடல்நிலை சரியில்லாதபோது வீட்டிலிருந்தே வேலை செய்வது மரியாதையான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது." பட மூலாதாரம், Getty Images ஆனால், மனநலனையும் உடல் நலனைப் போலவே கருத வேண்டும் என்பது மிகவும் முக்கியம் என்கிறார் அவர். "நீங்கள் உடல்நிலை சரியில்லாமல், வேலை செய்ய முடியாத நிலையில் இருந்தால், அது உடல்நலப் பிரச்னையாகவே கருதப்பட வேண்டும். மனநலக் காரணமாக இருந்தாலும் இதே அணுகுமுறையே இருக்க வேண்டும்." க்வின்-சிரிலோ மேலும் கூறுகையில், "இறுதியில், ஒருவர் தனது பணியைச் செய்யும் திறன் கொண்டிருக்கிறாரா என்பதுதான் முக்கியம். அது உடல் நலத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும் சரி, மனநலத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும் சரி" என்கிறார். வேலை உங்கள் அடிப்படை சுயபராமரிப்பையே பாதிக்கத் தொடங்குவதும் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி என்கிறார் அவர். "உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளும் திறனில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? வேலையின் அழுத்தத்திலிருந்து உங்களால் முழுமையாக விடுபட முடிகிறதா? உங்கள் தூக்கம் சீராக இருக்கிறதா?" இந்தக் கேள்விகளுக்கான பதில் 'இல்லை' என்றால், உங்களுக்கு உண்மையில் தேவைப்படுவது வேலை செய்வதல்ல; போதுமான ஓய்வு மட்டுமே என்பதற்கான அறிகுறியாக அது இருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை