இந்திய அணியும் நட்சத்திர மற்றும் முன்னாள் கேப்டன்களுமான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். இருந்தாலும் அவ்வப்போது அவர்களுடைய ஓய்வு குறித்து அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ அதில் தலையிட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், விராட் கோலி தாம் ஓய்வு பெறுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகியவை இணைந்து நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரே தனது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்” என அதில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இந்தியாவிற்காக தாம் விளையாடும் கடைசி உலகக்கோப்பை இதுதான். எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி கோப்பையைக் கைப்பற்றுவதே எனது ஒரே இலக்கு. வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடுவது பெரும் சவாலானது; அதற்காகத் தீவிரமாகத் தயாராகி வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 314 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 14941 ரன்களை எடுத்துள்ளார். இதில் 54 சதங்களும், 79 அரைசதங்களும் அடக்கம். மேலும் தற்போது நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
’அதுவே என் கடைசிப் போட்டியாக இருக்கும்..’ - எமோஷனலாகப் பேசிய விராட் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk