தலையில் உள்ள மர்ம உறுப்பு மூலம் தன்னை விட பல மடங்கு பெரிய கப்பலையே மூழ்கடிக்கும் திமிங்கலம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
தலையில் உள்ள மர்ம உறுப்பு மூலம் தன்னை விட பல மடங்கு பெரிய கப்பலையே மூழ்கடிக்கும் திமிங்கலம்

பட மூலாதாரம், Alamy 'மொபி டிக்' (Moby Dick) நாவலுக்கு உத்வேகமாக அமைந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பிய ஒருவருக்கு, ஸ்பெர்ம் திமிங்கலம் (Sperm Whale) தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு அழிக்க முடியும் என்பது குறித்து ஒரு கோட்பாடு இருந்தது. 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அது உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20, 1820 அன்று காலையில், 15 வயதுடைய தாமஸ் நிக்கர்சன், திமிங்கலம் ஒன்று தனது படகின் பக்கவாட்டில் ஓட்டை போட்டதிலிருந்து அப்பொழுதுதான் தப்பியிருந்தார். படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், பிரதான திமிங்கல வேட்டைக் கப்பலை நோக்கி விரைவாகத் துடுப்பு போட்டுச் சென்ற நிக்கர்சனும் அவரது தோழர்களும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர். ஆனால், 'எசெக்ஸ்' (Essex) என்ற அந்த திமிங்கல வேட்டைக் கப்பலின் பாய்மரப் பகுதியைப் பார்த்த நிக்கர்சன், மற்றொரு மிகப் பெரிய திமிங்கலம் தங்களை நோக்கி நேராக வேகமாக வருவதைக் கண்டார். கப்பலின் முதன்மைத் துணை அதிகாரியான ஓவன் சேஸை எச்சரித்தவுடன், பணியாளர்கள் மத்தியில் கூச்சலும் பீதியும் ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து "ஒரு பயங்கரமான மோதல்" நிகழ்ந்ததாக நிக்கர்சன் 50 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதியுள்ளார். அந்தத் திமிங்கலம் 'எசெக்ஸ்' கப்பல் மீது எந்தளவுக்குப் பலமான தாக்குதலைத் தொடுத்தது என்றால், அங்கிருந்த அனைத்து மாலுமிகளும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். திமிங்கலம் படகிலிருந்து 900 அடி (270 மீட்டர்) தூரத்திற்கு அப்பால் நீந்திச் சென்று, திடீரென்று வேகமாகத் திரும்பி மீண்டும் தனது முழு வேகத்துடன் மோத வந்தது. அந்த இரண்டாவது மோதலில், அது கப்பலின் முன்பகுதியை முற்றிலுமாகத் சிதைத்துவிட்டது. 'எசெக்ஸ்' திமிங்கல வேட்டைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த 'எசெக்ஸ்' கப்பல் விபத்துதான் ஹெர்மன் மெல்வில்லின் 'மொபி டிக்' நாவலுக்கு வித்திட்டது. இன்று, அந்தப் புத்தகம் வெளியாகி 175 ஆண்டுகள் ஆன நிலையில், அந்தத் திமிங்கலம் தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு வீழ்த்த முடியும் என்ற மர்மத்தை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கான விடையை, 200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு யாருமல்ல, 'எசெக்ஸ்' கப்பலின் முதன்மை அதிகாரியான சேஸ் மிகச் சரியாகக் கணித்திருந்தார் என்பதுதான் உண்மை. வியப்புக்குரிய வகையில், திமிங்கலங்களின் இந்த அசாத்திய சக்தி, திமிங்கல வேட்டையாடுபவர்கள் தேடிச் சென்ற அதே மதிப்புமிக்க எண்ணெய் இருக்கும் இடத்தில்தான் மறைந்துள்ளது: அதாவது அதன் தலைக்குள்! பட மூலாதாரம், BBC/ Serenity Strull ஸ்பெர்ம் திமிங்கலங்கள் (Sperm Whales) மிகப் பெரிய தலையைக் கொண்டுள்ளன. உண்மையில், அவற்றின் மொத்த உடல் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு தலையே இடம்பெற்றிருக்கும். பூமியிலுள்ள அனைத்து விலங்குகளைக் காட்டிலும் மிகப்பெரிய மூளையை (சுமார் 9 கிலோகிராம்வரை) அவை கொண்டுள்ளன. நெற்றிப் பகுதிக்குள்ளே 'ஸ்பெர்மாசெட்டி' (Spermaceti) என்று அழைக்கப்படும் பெரிய கொழுப்பு நிறைந்த, மெத்தையான உறுப்பு உள்ளது – இந்த இனத்திற்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு இதுவாகும். இந்த உறுப்பு 'ஸ்பெர்மாசெட்டி' எனப்படும் எண்ணெய் போன்ற பொருளால் நிரம்பியுள்ளது. திமிங்கல வேட்டையாடுபவர்கள் இதனை விந்தணு (semen) என்று நினைத்ததால் இந்த திமிங்கலத்திற்குப் இப்பெயர் வந்தது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்த எண்ணெய் உயர்தர எரிபொருளாகப் பயன்பட்டதோடு, சோப்புகள் மற்றும் மெழுகுவர்த்திகள் போன்ற தயாரிப்புகளாக மாற்றப்படக் கூடியதாகவும் இருந்ததால், திமிங்கல வேட்டையாடுபவர்களால் ஸ்பெர்மாசெட்டி மிகவும் விரும்பப்பட்டது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் உலகளவில் சுமார் 3,00,000 திமிங்கலங்கள் கொல்லப்பட்டன. திமிங்கலங்களின் இந்த ஸ்பெர்மாசெட்டி அதிகளவில் சேகரிக்கப்பட்ட போதிலும், அதன் முழுமையான செயல்பாடு என்னவென்று இன்றுவரை நமக்கு முழுமையாகப் புரியவில்லை. ஸ்பெர்மாசெட்டியை ஒரு சண்டைக் கருவியாகக் கருதும் ஒரு கோட்பாடும் உள்ளது. "இது முதலில் எங்கள் கருத்து அல்ல, இது ஓவன் சேஸின் கருத்து" என்கிறார் ஓய்வுபெற்ற பரிணாம உயிரியலாளர் டேவ் கேரியர் . "நெற்றிப் பகுதி ஒரு ஆயுதம் என்று 18 ஆம் நூற்றாண்டு திமிங்கல வேட்டையாடுபவர் வாதிட்டார், நாங்கள் அதைச் சோதிக்கத் தொடங்கினோம்." கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, உயிரியலாளர்கள் சேஸின் கருத்துகளைப் பெரிதும் கண்டுகொள்ளவில்லை, ஆனால் கேரியரின் பார்வையில், "அந்தத் திமிங்கல வேட்டையாடுபவரின் உள்ளுணர்வும் அனுபவமும் ஒருவேளை சரியாக இருந்திருக்கலாம்". 2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அனைத்துப் பற்கள் கொண்ட திமிங்கலங்களின் நெற்றியில் அமைந்துள்ள கொழுப்பு உறுப்பான பெருக்கப்பட்ட மெலன் (melon), காப்பக விலங்கான நீர்யானையைப் போல ஒரு போட்டி விலங்குக்குத் மரணம் விளைவிக்கக்கூடிய இரும்புத் தடிகளாக (battering ram) பரிணமித்துள்ளதாக கேரியர் குறிப்பிட்டார். "திமிங்கலங்கள் பாலூட்டிகள், மான் மற்றும் செம்மறி ஆடுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை, அங்கு ஆண் விலங்குகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு சண்டையிடும் – எனவே இந்தப் பண்பு அவற்றின் மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம்." சமீபத்தில், ஹவாய் பல்கலைக்கழகத்தின் சூழலியல் உடலியல் நிபுணர் அலெக் பர்சுலம் , ஸ்பெர்ம் திமிங்கலங்கள் ஒன்றுக்கொன்று தலையால் முட்டிக்கொள்வதைக் கேமராவில் படம்பிடித்தார். பலியாரிக் தீவுகள் மற்றும் அசோரஸ் தீவுகளைச் சுற்றி நிகழ்ந்த இந்த நடவடிக்கையை அவர் படம்பிடித்தது "ஒரு தற்செயல் நிகழ்வு" என்று கூறுகிறார். திமிங்கலங்கள் தங்கள் தலையைப் பயன்படுத்திச் சண்டையிடுவது விசித்திரமாகத் தோன்றலாம் – எதிரியைத் தாக்கக்கூடிய மிக முக்கியமான உடல் உறுப்பை எதற்காக யாரும் ஆபத்தில் ஆழ்த்துவார்கள்? ஆனால் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்த உறுப்பு போதுமான அதிர்வுத் தாங்கும் தன்மையைக் (buffering) கொண்டுள்ளது, இதனால் திமிங்கலங்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் தங்கள் தலையை இரும்புத் தடியாகப் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறது. பட மூலாதாரம், Getty Images புர்சுலம் பல இளம் திமிங்கலங்கள் இந்தச் செயலில் ஈடுபடுவதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை உற்றுநோக்கினார். அவர் பதிவு செய்தவற்றில் மிகப்பெரிய பலம் கொண்ட மோதல், ஒரு இளம் ஆண் திமிங்கலத்தால் நிகழ்த்தப்பட்டது. அது மற்றொரு திமிங்கலத்தை நோக்கி வினாடிக்கு 15 அடி (4.5 மீட்டர்) வேகத்தில் பாய்ந்து சென்று, ஏறத்தாழ 460 கிலோநியூட்டன் (kN) விசையுடன் மோதித் தள்ளியது. அதே வேகத்தில் நெருங்கும் முழு வளர்ச்சியடைந்த ஒரு பெரிய ஸ்பெர்ம் திமிங்கலம் தோராயமாக 1,200 கிலோநியூட்டன் விசையுடன் மோதும் என்று புர்சுலம் கணக்கிடுகிறார். இது மணிக்கு 40 மைல் (65 கி.மீ) வேகத்தில் செல்லும் பேருந்து ஒன்று மோதிய உணர்வைத் தரும். ஒரு கப்பலை நோக்கி திசை திருப்பப்படும்போது, இது மிகக் கணிசமான ஒரு விசையாகும். "வரலாற்றில், திமிங்கலங்களால் தாக்கப்பட்ட மூன்று திமிங்கல வேட்டைக் கப்பல்கள் மட்டுமே பதிவாகியுள்ளன" என்கிறார் நான்டூகெட் (Nantucket) வரலாற்றுச் சமூகத்தின் தலைமைப் பொறுப்பாளர் மைக்கேல் ஹாரிசன். அசல் கப்பல் பதிவேடுகள் மற்றும் கலைப்பொருட்களின் ஈர்க்கக்கூடிய தொகுப்பைக் கொண்டுள்ள நிறுவனம் அதுவாகும். ஆனால், ஒரு திமிங்கலம் கண்ணில் பட்டதும் பிரதான கப்பலிலிருந்து கடலில் இறக்கப்படும் சிறிய, திறந்த படகுகள் மீது திமிங்கலங்கள் வழக்கமாகத் தாக்குதல் நடத்தும். "இந்தக் கப்பல் பதிவேடுகள் பெரும்பாலும் இதன் தீவிரமான தன்மையை வெளிப்படுத்துவதில்லை" என்கிறார் ஹாரிசன். திமிங்கலங்கள் தாய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய அந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே, தாக்குதல் நடத்தியது ஸ்பெர்ம் திமிங்கலமே ஆகும். 1851 ஆம் ஆண்டில், தெற்குப் பசிபிக் பெருங்கடலில், ஒரு திமிங்கலம் 'ஆன் அலெக்சாண்டர்' கப்பல் மீது பாய்ந்து அதை முழுமையாகச் சேதப்படுத்தியது. அதேபோல் 1902 ஆம் ஆண்டில், கலாபகோஸ் தீவுகள் அருகே சென்று கொண்டிருந்த 'கேத்லீன்' கப்பலையும் ஒரு திமிங்கலம் சிதைத்தது. இருப்பினும், கடல்சார் வரலாற்றில் மிகவும் மோசமான சோதனையாக மாறியது 'எசெக்ஸ்' கப்பலின் கதிதான். அன்றைய தினம், 20 பேர் மூழ்கிக் கொண்டிருந்த தாய்க் கப்பலை விட்டுவிட்டு, மூன்று திமிங்கல வேட்டைப் படகுகளில் ஏறித் தப்பினர். அவர்கள் கரையிலிருந்து 1,300 மைல் தொலைவில் இருந்தனர்; அதனைத் தொடர்ந்து நடந்தவை கடல்சார் வரலாற்றில் மிகவும் கொடூரமான கதைகளில் ஒன்றாகவும், மெல்வில்லின் 'மொபி-டிக்' நாவலுக்கான உத்வேகமாகவும் மாறின. இயற்கையில், எந்த ஆளில்லா விமானங்களும் கண்காணிக்காத வேளையில் திமிங்கலங்கள் எவ்வளவு அடிக்கடி தங்கள் தலைகளை இரும்புத் தடிகளாகப் பயன்படுத்துகின்றன என்பது நிச்சயமாக நமக்குத் தெரியாது என்று புர்சுலம் கூறுகிறார். அதேபோல், அவற்றின் தனித்துவமான மிகப்பெரிய மெலன் உறுப்பின் நோக்கத்தையும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஸ்பெர்மாசெட்டியின் பங்கு குறித்து வேறு சில கோட்பாடுகளும் உள்ளன, அதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்கள் இருக்கக்கூடும். திமிங்கலங்கள் தங்கள் மூக்கின் முன்பகுதியில் அமைந்துள்ள 'மங்கி லிப்ஸ்' (monkey lips) எனப்படும் ஒலி உதடுகள் மூலம் ஒலியை உருவாக்குகின்றன. இந்த ஒலி தண்ணீருக்குள்ளும் முன்னோக்கிச் செல்வதோடு, அவற்றின் தலைக்குப் பின்புறத்தில் உள்ள ஸ்பெர்மாசெட்டியின் இறுதிச் சுவரை நோக்கிப் பின்னோக்கியும் பயணிக்கிறது. இந்த இரண்டு ஒலிகளின் கலவையை ஒரு பெண் திமிங்கலம் கேட்கும் போது, ஆண் திமிங்கலத்தின் ஸ்பெர்மாசெட்டி எவ்வளவு பெரியது என்பதையும், அதுதான் இணை சேர விரும்பும் பெரிய திமிங்கலம்தானா என்பதையும் அதனால் மதிப்பிட முடியும் என்று புர்சுலம் கூறுகிறார். "இந்த விலங்குகளைப் பற்றி நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. அவற்றுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்கிறார் புர்சுலம். "இப்போதுதான் நாம் அவற்றைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளோம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை