\"போய் சாவுங்க\".. பஸ் எரியுதுனு சொன்னாலும் நிறுத்தாமல் சிரித்த டிரைவர்.. 9 பேர் கருகி பலி.. சோகம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
\"போய் சாவுங்க\".. பஸ் எரியுதுனு சொன்னாலும் நிறுத்தாமல் சிரித்த டிரைவர்.. 9 பேர் கருகி பலி.. சோகம்

லக்னோ: டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த ஏசி பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் 9 பயணிகள் உடல் கருகி இறந்தனர். இந்நிலையில் தான் பஸ்சில் கருகிய 'ஸ்மெல்' வருதுனு பயணிகள் எச்சரித்தும், ''போய் சாவுங்க'' என்று கூறி டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டி சென்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோக சம்பவம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலத்தின் மாகோபா என்ற இடத்துக்கு தனியாருக்கு சொந்தமான ஏசி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ் யமுனா எக்ஸ்பிரஸ் ரோட்டில் வேகமாக சென்று கொண்டிருந்தது. உத்த பிரதேசத்தின் ஜீவர் விமான நிலையத்தின் அருகே சென்றபோது இரவு 11 மணி அளவில் திடீரென்று பஸ் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். அடுத்த சில நிமிடங்களில் தீ வேகமாக பரவியது. பஸ் முழுவதும் பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தண்ணீரை பீய்ச்சியடித்து போராடி தீயை அணைத்தனர். இதில் ஒரு பெண், 8 ஆண்கள் என்று மொத்தம் 9 பேர் உடல் கருகி பலியாகினர். இந்நிலையில் தான் டிரைவரின் அலட்சியத்தால் தான் இந்த தீவிபத்தில் 9 பயணிகள் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: ''பஸ்சில் மொத்தம் 30-35 பயணிகள் இருந்தனர். பஸ் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பஸ்சில் கருகிய ஸ்மெல் வந்துள்ளது. இதுபற்றி பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவரிடம் கூறினர். ஆனால் பஸ் டிரைவர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. 'போய் சாவுங்க'.. இப்படியான 'ஸ்மெல்' வருவது வழக்கமான ஒன்று தான் என்று சிரித்தபடி கூறியுள்ளார். சிகரெட் புகைத்துள்ளார். பஸ்சை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார். இருப்பினும் பயணிகள் தொடர்ந்து அலர்ட் செய்தனர். இதற்கிடையே பஸ்சில் டிரைவரின் இருக்கையின் அருகே தீப்பிடித்தது. இதனால் பஸ்சில் இருந்த 2 டிரைவர்கள், ஒரு கண்டக்டர் உடனடியாக கீழே குதித்துள்ளனர். பயணிகளும் வேகவேகமாக கீழே குதித்த நிலையில் 9 பேர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் டிரைவர்கள், பவன் குமார், யோகேஷ் தீக்சித் மற்ம் கண்டக்டர் ரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கான்பூரை சேர்ந்தவர்கள். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை