ஒரே இடத்தில் 23 ஆயிரம் பேரை கழுவேற்றி ஒட்டோமான் படையை விரட்டிய நிஜ ’டிராகுலா’ கதை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
ஒரே இடத்தில் 23 ஆயிரம் பேரை கழுவேற்றி ஒட்டோமான் படையை விரட்டிய நிஜ ’டிராகுலா’ கதை

பட மூலாதாரம், Getty Images பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா நாவல் உலகம் முழுவதும் வாம்பயர்கள் பற்றிய ஆர்வத்தை உருவாக்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அடர்ந்த மீசையைக் கொண்ட ஓர் இளவரசர் ஒட்டோமான் படையெடுப்புகளைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் பயங்கரமான புகழைப் பெற்றிருந்தார். அவருடைய பெயர் விளாட் III டிராகுலா (ரோமானிய மொழியில் Draculea). அக்காலத்தில் அந்தப் பெயர் எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரது தந்தை தான் அந்தப் பெயரை அவருக்குச் சூட்டியிருந்தார். அவர், புனித சிலுவையைப் பாதுகாக்கவும் கத்தோலிக்க திருச்சபையின் எதிரிகளுக்கு எதிராகப் போராடவும் 1408 இல் நிறுவப்பட்ட, இளவரசர்கள் மற்றும் பிரபுக்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கக்கூடிய 'ஆர்டர் ஆஃப் தி டிராகன்' என்ற அரச குதிரைப்படை அமைப்பில் உறுப்பினராக இருந்தார். டிராகுலா என்பதற்கு எளிமையான அர்த்தம் "டிராகனின் மகன்" என்பதுதான். ஆனால், அவரது மரணத்திற்குப் பின் அவருக்குக் கிடைத்த 'விளாட் தி இம்பேலர்' (கழுவேற்றுபவன்) என்ற புனைப்பெயர்தான், ஐரோப்பிய வரலாற்றில் மிகச் சிலரே பெற்றிருக்கக்கூடிய கொடூரமான பழிவாங்கலின் கதையையும், வலாக்கியா (தற்போதைய ரோமேனியா) இளவரசரின் காட்டுமிராண்டித்தனத்தையும் இன்றும் நினைவுபடுத்துகிறது. தன் கைதிகளைக் கொல்வதற்காக டிராகுலா கையாண்ட பல்வேறு வகையான மரணதண்டனை முறைகளால் அவர் ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டார். கைதிகளின் தலைகளைத் துண்டிப்பது, அவர்களை உயிருடன் கொதிக்க வைப்பது அல்லது உயிருடன் புதைப்பது எனப் பல வழிகளை அவர் கையாண்டார். இருப்பினும், அவருக்கு அந்தப் புனைப்பெயர் வரக் காரணமாக இருந்தது, அவர் மிகவும் விரும்பிக் கையாண்ட மரண தண்டனை முறையான 'கழுவேற்றம்' ஆகும். இந்த முறையில், ஒரு மரக்கட்டை கூர்மையாக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபரின் பிட்டத்தின் வழியாகக் கவனமாகச் செலுத்தப்பட்டு, அது தோள்களுக்குக் கீழே வெளியேறும் வரை உடலினுள் ஏற்றித் தைக்கப்படும். End of அதிகம் படிக்கப்பட்டது இந்தக் கொடூரமான மரணதண்டனை முறையானது, உடலின் முக்கிய உறுப்புகள் எதற்கும் சேதம் விளைவிக்காதவாறு செய்யப்படும். இதனால், கழுமரத்தில் ஏற்றப்பட்ட நபர் இறப்பதற்கு முன், சொல்லொணாத் துயரத்துடன் குறைந்தது 48 மணி நேரமாவது உயிருடன் துடிதுடித்துக் கொண்டிருப்பார். பட மூலாதாரம், Getty Images உண்மையைச் சொல்வதானால், தோற்கடிக்கப்பட்ட எதிரிகளைக் கம்பிகளில் குத்திக் கழுவேற்றும் இந்த வழக்கம் இடைக்கால ஐரோப்பாவில் ஒன்றும் புதியது அல்ல. உதாரணமாக, விளாடின் நெருங்கிய உறவினரான 'மகா எஸ்தேபான்' என்பவர், 1473 இல் 2.300 துருக்கிய கைதிகளை "தொப்புள் வழியாக, குறுக்காக, ஒருவருக்கு மேல் ஒருவராகக்" கழுவேற்றினார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், அவர் இறந்த சில காலத்திலேயே புனிதராக வழிபடப்பட்டு, 1992 இல் ருமேனிய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையால் புனிதராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், இந்த எஸ்தேபானின் படுகொலைக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே, டிராகுலா திட்டமிட்டு நடத்திய மாபெரும் படுகொலையின் அளவு, அந்த காலத்து அளவீடுகளுடன் ஒப்பிடும்போது கூட மிகவும் பிரம்மாண்டமானதாக இருந்தது. இதுவே வரலாற்றில் அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கக் காரணமாக அமைந்தது. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பின்நாட்களில் 'விளாட் தி இம்பேலர்' என்று அழைக்கப்படவிருந்த அந்த மனிதர், 1431 இல் ருமேனியாவின் டிரான்சில்வேனியா பிராந்தியத்தின் மையப்பகுதியில், பிரபு விளாட் II டிராகுலின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவர் வன்முறையும் நிலையற்ற தன்மையும் நிறைந்த ஒரு சூழலில் வளர்ந்தார். குறிப்பாக 1453 இல் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சிக்குப் பிறகு, கத்தோலிக்க ஐரோப்பாவின் அந்தப் பகுதி தொடர்ந்து ஒட்டோமான் படையெடுப்பின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. அவருக்கு 11 வயதாக இருந்தபோது, வலாக்கியாவின் ஆட்சியாளராக இருந்த அவரது தந்தையின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, அவரும் அவரது சகோதரர் ராவும் ஒட்டோமான் பேரரசால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். 1447 இல், டிரான்சில்வேனியாவின் ஆட்சியாளரும், ஹங்கேரியின் முக்கிய ராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஜான் ஹுன்யாடியின் உத்தரவின் பேரில் விளாடின் தந்தை படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில், விளாடின் மூத்த சகோதரரான மிர்சியா II உயிருடன் புதைத்துக் கொல்லப்பட்டார். இந்தச் சூழ்நிலையிலும் டிராகுலா உயிர் தப்பினார். அவர் 1448 இலையுதிர்காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு வலாக்கியாவை ஆட்சி செய்தார்; பின்னர் மீண்டும் ஏப்ரல் 1456 முதல் ஜூலை 1462 வரையிலும்; இறுதியாக 1476 இல் அவர் இறக்கும் வரையிலும் ஆட்சி புரிந்தார். பட மூலாதாரம், Getty Images ஒட்டோமன் பேரரசுக்கு எதிராகப் போராடிய கொடூரமான வீரராக டிராகுலாவின் புகழ் 1462-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உறுதியானது. தன்னை எதிர்க்கும் இந்த இளவரசரை அடக்குவதில் தொடர்ந்து பலமுறை தோல்வியுற்றதால் பொறுமையிழந்த சுல்தான் இரண்டாம் மெஹ்மத், 90,000 வீரர்கள் கொண்ட ஒரு மாபெரும் படையைத் திரட்டி, வலாக்கியாவிற்குத் தானே நேரில் தலைமை தாங்கிச் சென்றார். ஆனால், அந்தப் பிரமாண்டமான படையெடுப்பின் வீரியமும் வீரர்களின் மனவலிமையும் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. துருக்கிய ராணுவம் 'தர்கோவிஸ்தே' நகரத்தை நெருங்கியபோது, அங்கு கண்ட நரகக் காட்சியால் அவர்கள் மூச்சடைத்துப் போயினர். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவில், மெஹ்மத்தின் முந்தைய ஒட்டோமான் படையைச் சேர்ந்த 23,844 கைதிகள் ஒரு அரைவட்ட வடிவில் கழுவேற்றப்பட்டுக் கிடந்தனர். கோடைக்கால வெயிலில், அந்த மரண நெடி தாங்க முடியாததாக இருந்தது. உயிருடன் இருப்பவர்களையும் இறந்தவர்களையும் தின்று தீர்த்த, பழைய மண்டையோடுகளிலும் உடல்களிலும் கூடுகட்டி வாழ்ந்த வேட்டைப் பறவைகளுக்கு மட்டுமே அது உகந்த இடமாக இருந்தது. இந்தக் கொடூரமான மனித உடல்களின் காடு, மெஹ்மத்தின் படைகளை முற்றிலும் மனச்சோர்வடையச் செய்தது. டிராகுலாவின் ஆட்கள் மாறுவேடமிட்டும், கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டும் பல மாதங்களாக ஒட்டோமான் படைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தனர். இறுதியில், எஞ்சியிருந்த துருக்கிய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். பட மூலாதாரம், Getty Images இன்றைக்கு, அவரது பல கொடூரமான செயல்களை நன்கு இயங்கும் ஒரு சமூக விரோதியின் செயல்களாக எளிதாக வரையறுக்கலாம். ஏற்கெனவே விவரிக்கப்பட்டவை தவிர, எதிரிகளுக்குப் போக்குவரத்து மற்றும் உணவு கிடைக்காமல் இருக்க அவர் விலங்குகளைப் பலியிட்டார்; மேலும் தொழுநோய், சிபிலிஸ், காசநோய் மற்றும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களை "துருக்கியரை போல் உடையணிந்து கொண்டு எதிரி வீரர்களுடன் கலந்து கொள்ளுமாறு" ஊக்குவித்து உயிரியல் போரையும் பயன்படுத்தினார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த மற்ற சம்பவங்கள், முற்றிலும் வக்கிரமான மற்றும் தீங்கான எண்ணம் கொண்டவையாக இருந்தன. ஒரு சந்தர்ப்பத்தில், தன் முன்னிலையில் இத்தாலியத் தூதுவர்கள் தங்கள் தொப்பிகளைக் கழற்றாமல் அணிந்திருந்ததை தனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகக் கருதி ஆத்திரமடைந்த அவர், அந்தத் தொப்பிகளை அவர்களின் தலைகளிலேயே ஆணிகளை கொண்டு அடித்துத் தைத்தார். மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில், தர்கோவிஸ்தே நகரின் உணவுக்கூடம் ஒன்றில் முதியவர்கள், நோயாளிகள், ஏழைகள், ஊனமுற்றோர் மற்றும் பார்வையற்றோர் அடங்கிய பெரும் கூட்டத்திற்கு ஒரு பிரம்மாண்டமான விருந்துக்கு அழைப்பு விடுத்துவிட்டு, அவர்களை உள்ளே பூட்டி உயிருடன் எரித்தார். பின்னர் அவர் இந்தச் "சமூகத்தில் தாழ்ந்தவர்களின் அழிவை" எண்ணி மகிழ்ந்தார். ஆனால் அவர் ஒரு 'ரத்தக் காட்டேரியா'? அவர் ரத்தத்தைக் குடிப்பதை பழக்கமாக வைத்திருந்ததாக தெரியவில்லை (அவர் விரும்பியிருந்தால் அங்கு ரத்த ஆறு ஓடியிருக்க முடியும்). பட மூலாதாரம், Getty Images இருப்பினும், டிரான்சில்வேனியாவின் ஒரு முழுப் புறநகரையும் எரித்து, கைதிகளைக் கழுவேற்றிய பிறகு, தனது ஆட்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறுப்புகளைத் துண்டிப்பதைப் பார்த்துக் கொண்டே அவர் இரவு உணவு உட்கார்ந்து சாப்பிட்டதாக ஒரு கதை கூறுகிறது. அதில், "மனித ரத்தம் ஓடுவதைப் பார்ப்பது தனக்குத் தைரியத்தைத் தந்தது" என்பதால் அவர் "தனது அப்பத்தை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் தொட்டுச் சாப்பிட்டார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வரலாற்றைப் பரப்பிய துண்டுப்பிரசுரங்களின் பெருமளவிலான உற்பத்திக்கும் விற்பனைக்கும் இதைப் போன்ற உண்மையான விவரங்கள் காரணமாக அமைந்தன. நாவல் எழுதுவதற்கு முன்பு இந்த ருமேனிய இளவரசரைப் பற்றிப் படித்த பிராம் ஸ்டோக்கர், 1897 ஆம் ஆண்டு எழுதிய "டிராகுலா" நாவலின் முதன்மைக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் அடிப்படையாகக் கொண்டார் என்று அடிக்கடி கருதப்பட்டாலும், அந்தக் கூற்றை ஆதரிக்க எந்த ஆவணமும் இல்லை. புத்தகத்திற்கான எழுத்தாளரின் குறிப்புகளில் "டிராகுலா" பற்றிய குறிப்புகள் உள்ளன, இருப்பினும், அந்தக் குறிப்புகள் எடுக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் அந்தப் பெயரைக் மட்டுமே குறிப்பிடுகின்றனவே தவிர, அந்த பெயரைக் கொண்டவரின் புகழுக்கு காரணமான செயல்களைக் குறிப்பிடவில்லை. அவரது மூன்றாவது ஆட்சிக் காலம் தொடங்கிய சில காலத்திலேயே, அநேகமாக 1476 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், துருக்கியப் படைகள் மற்றும் அவரது ருமேனிய எதிரியான பாசராப் III லையோட்டா ஆகியோரின் படைகளுடன் ஏற்பட்ட ஒரு சிறு மோதலின் போது அவர் இறந்திருக்கலாம். அவரது ஊழியர்களில் ஒருவரைப் போல மாறுவேடமிட்டு நடிப்பதற்காக ஒரு துருக்கியர் பணியமர்த்தப்பட்டார், அவர் விளாடைப் பின்புறமிருந்து தாக்கியதாகத் தெரிகிறது. அவரது பாதுகாவலர்கள் அவரைத் தீவிரமாகப் பாதுகாத்த போதிலும், இறுதியில் அவர் கொல்லப்பட்டு, அவரது தலை துண்டிக்கப்பட்டது. துருக்கியர்கள் தங்களது இறுதிப் பழிவாங்கலின் அடையாளமாக, அவரது தலையைக் கான்ஸ்டான்டிநோபிளுக்குக் கொண்டு சென்று உயரத்தில் குத்தி வைத்தனர். பட மூலாதாரம், Getty Images உள்ளூர் துறவிகள் புக்கரெஸ்டுக்கு அருகிலுள்ள ஒரு காட்டில் அவரது உடற்பகுதியைக் கண்டெடுத்து, ஐரோப்பிய கத்தோலிக்கத்தின் பெரும் பாதுகாப்பாளர் (கிட்டத்தட்ட தனியாக நின்று பாதுகாத்தவர்) என்ற அவரது நற்பெயருக்கு மதிப்பளிக்கும் வகையில், ஸ்நாகோவ் தீவு மடாலயத்தில் உள்ள அவர்களது நிலவறையில் அடக்கம் செய்தனர். இருப்பினும், அக்கால ரஷ்யர்கள், அவர் ரோமன் கத்தோலிக்க மதத்திற்காக மரபுவழி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத்தை கைவிட்டதால் அவரை ஒரு சமய விரோதியாகக் கருதினர். இவை அனைத்தின் காரணமாகவும், அவர் தனது கல்லறையில் நிம்மதியாக ஓய்வெடுக்க மாட்டார் என்ற சந்தேகம் எழுந்தது, மேலும் ரத்தக் காட்டேரி என்ற புனைக்கதையின் ஆரம்பகால வடிவம் பிறந்தது. இதற்கு ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரான இரண்டு பிரிவுகள் உள்ளன: ரத்தவெறி பிடித்த கொடுங்கோலன் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில், டிராகுலாவின் கொடூரமான செயல்களைப் பற்றிய திகிலூட்டும் துண்டுப் பிரசுரங்கள் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களாக இருந்தன. நாவல்களின் காலம் தொடங்குவதற்கு முன்பே, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் ரகசியமாக ரசித்து வாசித்த ஒரு வகையான இருண்ட பொழுதுபோக்கு வகைக்கு, நிஜ வாழ்க்கை டிராகுலா ஒரு சுவாரசியமான உதாரணமாகத் திகழ்கிறார். 15 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில், ஐரோப்பிய கத்தோலிக்கத்தின் எந்தவொரு ஆட்சியாளரும் தங்களது மிகப்பெரிய அரசியல் மற்றும் மத எதிரிகளான முஸ்லிம் துருக்கியர்களுக்கு எதிராகப் போராடத் தயாராக இருக்கவில்லை. பலம் வாய்ந்த ஒட்டோமான் பேரரசு 1453 இல் கான்ஸ்டான்டிநோபிளின் பண்டைய புனித இடத்தை ஆக்கிரமித்ததுடன், 1529 இல் வியன்னாவின் வாசல்களையும் முற்றுகையிட்டது. இரண்டாம் மெஹ்மத்திற்கு எதிரான டிராகுலாவின் போர்த்தொடர்கள் ஓரளவிற்கு ருமேனியாவின் புவியியல் அமைவிடத்தின் விளைவாகவே இருந்தன. மேலும், பல துறவிகள் கொல்லப்பட்டது உட்பட, கத்தோலிக்கர்களுக்கு எதிராக அவர் செய்த போர்கள் மற்றும் அத்துமீறல்களைப் போலவே அவரது இந்த நடவடிக்கைகளும் நிச்சயமாக நடைமுறைச் சாத்தியமானதாகவே இருந்தன. ஆனால், ருமேனிய கத்தோலிக்கத்தின் இரட்சகராக அவரது அந்தஸ்து பிரமாண்டமானதாகவும் நீடித்ததாகவும் இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை