Tamil Nadu Latest News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்! பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜெம் வீரமணி தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு சோதனை ‘ஜெம்’ கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் அலுவலகம், வீடு உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது செல்போன்கள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஜெம் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் விற்பனை செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். மின் விநியோகம் குறித்து மின்வாரிய தலைமையகத்தில் விஜய் ஆய்வு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், முதலமைச்சர் விஜய் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்துக்கு நேரில் சென்று மின் விநியோகம் மற்றும் மின் கட்டுப்பாடு தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார். மாநிலத்தின் தற்போதைய மின் தேவை, உற்பத்தி, விநியோக வலையமைப்பு, மின்மாற்றி செயலிழப்பு உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, தேவையான துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின்மாற்றிகளை நிறுவுதல், மின்வாரியத்தில் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரம்; தேர்தல் ஆணையம் விளக்கம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தாராபுரத்தில் நாதக வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டு, இடைத்தேர்தலை மாற்றத்திற்கான களமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் அமைச்சர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதனிடையே, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக எழுந்த சர்ச்சைக்கு, முடிவெடுக்கும் முன் வெவ்வேறு கருத்துகள் தெரிவிப்பது இயல்பான நடைமுறை என்றும், எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட முக்கிய சீர்திருத்த முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
Chennai News Live Updates: “இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல்; தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்” – சிபிஎம் சண்முகம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk