அப்பொழுது வீடியோ காட்சிகள் தெளிவாக இல்லை, போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக வழக்கை கைவிடுவதாக அர்த்தமல்ல. ஜெம் வீரமணிக்கும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: திமுக மீது தவெக அரசு வீண் பழி சுமத்துகிறது - முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி! சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: "திமுக ஆட்சிக்காலத்தில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது கடுமையான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், தவெக அரசு தற்போது எங்கள் மீது வீண் பழியைச் சுமத்தப் பார்க்கிறது. 'ஜெம் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை' என்று பொய் சொல்கிறார்கள்; அப்படியானால் அவர் மீது எப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது? இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம். அப்பொழுது வீடியோ காட்சிகள் தெளிவாக இல்லை, அதனால் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதற்காக வழக்கை நாங்கள் கைவிடுவதாக அர்த்தமல்ல. ஜெம் வீரமணிக்கும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போக்சோ சட்டம் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் எந்தத் தகவலையும் வெளிப்படையாகக் கசியவிடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இந்த வழக்கில் யார் தொடர்புடையவராக இருந்தாலும், சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில்தான் நேரடியாக குதிரை பேரம் நடந்துள்ளது. பொய்களைச் சொல்லியே ஆட்சியை ஓட்டிவிடலாம் எனத் தவெக அரசு தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. எது உண்மை, எது பொய் என்றே தெரியாமல் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த அரசு. ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களால் இன்று மக்களை நேரில் சென்று சந்திக்கக் கூட முடியவில்லை. தமிழ்நாட்டைப் பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. மக்கள் மீது தாங்க முடியாத பொருளாதாரச் சுமையை ஏற்படுத்திவிட்டு, 'இவர்களை ஏன் ஆட்சியில் அமர வைத்தோம்?' என்ற பெரும் வேதனையில் தமிழக மக்கள் உள்ளனர். தமிழகத்தில் இப்போது வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை; இது ஒரு 'ரீல்ஸ் ஆட்சி' மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த மக்கள் விரோத ரீல்ஸ் ஆட்சியைத் தூக்கியெறிய தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்" இவ்வாறு ரகுபதி ஆதங்கத்துடன் பேசினார். வழக்கின் பின்னணி கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி குழந்தை உரிமை ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகப் பிரிவில் ஒப்படைத்த பென் டிரைவில் இருந்த 2019-ம் ஆண்டு சிசிடிவி காட்சிகள் காவல்துறையினரை உலுக்கின. 13 வயது சிறுமியை கிரானைட் தொழிலதிபர் ஆர்.வீரமணி பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரக் காட்சி பதிவாகியிருந்தது. மாணவிகளுக்கு உதவுவது போல் அறக்கட்டளை நடத்தி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் தம்பதியினர் மூலம் சிறுமிகளுக்கு மதுபானம் கொடுத்து மிரட்டி வீரமணி மற்றும் அவரது நண்பர்களுக்கு விருந்தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் வலுவான ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல், 2026 பிப்ரவரியில் வழக்கை முடித்துவைக்க காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அதைக் கடுமையாக எதிர்த்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். ரூ.50 கோடிக்கும் மேல் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ள முகாந்திரம் உள்ளதால், அமலாக்கத்துறையும் விரைவில் களம் இறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெம் வீரமணி வழக்கு: த.வெ.க. அரசு வீண் பழி சுமத்துகிறது: ரகுபதி பேட்டி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk