ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி "வீடியோ ஷேடோவாக இருந்தது" என்று கூறியதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்ற தி.மு.க அரசு முயல்வதாகவும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு போல இந்த விவகாரத்தையும் தி.மு.க அரசு மூடி மறைக்க முயன்றதாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாகச் சாடினார். ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கின் வீடியோ ஆதாரத்தை 'ஷேடோவாக இருந்தது' எனக் கூறி வழக்கை மூட முயன்ற முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு போல இந்த விவகாரத்தையும் தி.மு.க அரசு மூடி மறைக்க முயன்றதாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடுமையாகச் சாடினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது: “ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் போதுமான ஆதாரமில்லை, ஆதாரம் வந்த பிறகு நாங்கள் விசாரணை தொடரும் என்று சொன்னோம். மூடவில்லை என்று சொன்னார். இவர் சட்டத்துறை அமைச்சராக எப்படி 5 வருஷம் இருந்தார் என்ற லட்சணம் இதிலேயே தெரிகிறது. 45 நாளுக்குள் ஒரு விசாரணை முடிக்க வேண்டும், முடிக்கவில்லை என்றால் இவர்கள் முடித்ததற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவர்கள் உண்மையில் என்ன பண்ணி இருக்க வேண்டும். அரசாங்கம் என்றால் நீதிமன்றத்திற்கு சென்று எங்களுக்கு மேலும் இரண்டு மாதம் விசாரணைக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்க வேண்டும். அதில் இவரே என்ன சொல்கிறார் என்றால் இவரே ஒரு முடிவுக்கு வருகிறார். வீடியோ ஷேடோவாக இருந்தது என்று சொல்கிறார். ஒரு விஷயத்துக்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி பதில் சொல்லியே ஆக வேண்டும். அந்த வீடியோ ஷேடோவாக இருந்தது என்று இவருக்கு எப்படி தெரியும், இவருக்கு யார் சொன்னது, இவர் என்ன சொல்ல வருகிறார், அந்த வீடியோ ஷேடோவாக இருந்தது என்று இவர் எப்படி சொன்னார். அந்த வழக்கை கையாண்டவர் யார், அவர்கள் இவரிடம் சொன்னார்களா, இந்த வீடியோ ஷேடோவாக இருந்தது என்று இவர் யாரிடம் கேட்டு வாங்கினார். நல்லவேளையாக இந்த ஆதாரம் அப்போதே பதிவானதால் தப்பித்தது, இல்லையென்றால் இவர்கள் இந்த ஆதாரத்தை அப்போதே அழித்து இருப்பார்கள் அதைத்தான் செய்திருப்பார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரன் முதல்நாள் விசாரித்துவிட்டு தி.மு.க காரர்களை எல்லாம் தப்பிக்க விட்டுவிட்டு பிறகு எல்லாரும் போராட்டம் செய்த பிறகுதான், அண்ணா பல்கலைகழக விஷயத்தில் ஒரு முடிவு வந்தது. இதற்கு அவ்வளவு பேர் போராடினார்கள், எல்லா கட்சிக்காரர்களும் போராடினார்கள், கண்டனம் தெரிவித்தார்கள். அதே நிகழ்வு தான் இங்கேயும் யாருக்கும் தெரியாததால் அதை அப்படியே மூடி மறைத்து வைத்து விட்டார்கள். மிகப்பெரிய ஒரு தொழில் அதிபர் இவருடைய அந்தஸ்து அளவுக்கு யாரை அணியியிருப்பார்கள் முதலமைச்சர அலுவலகமா அல்லது அந்த கட்சியினுடைய அமைச்சர்களா யாரை அணுகி இருப்பார்கள். ஏனென்றால், அவர் ஒரு பெரிய அதிகாரம் மையத்தை அணுகி இவை முடித்திருக்க முடியும். ஏனென்றால், இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட ஐந்து மாதம் கிடப்பிலேயே இருக்கிறது. எல்லாரையும் கூப்பிட்டு விசாரித்து இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள். அந்த இடத்தில் போய் பார்த்திருக்கிறார்கள். எங்க சிசிடிவி வீடியோ இருக்கிறது என்று எல்லாத்தையும் பார்த்து இருக்கிறார்கள் அதில் அவ்வளவு குழந்தைகள் இருந்திருக்கிறார்கள் எல்லா வீடியோவையும் பார்த்திருக்கிறார்கள். இந்த வழக்கு ஐந்து மாதம் கிடப்பில் இருந்தது. வீரமணி போன்ற ஒரு பெரிய தொழிலதிபரை போய் பார்த்து விசாரிக்கிற போது அவர் அணுகுகிற மிகப்பெரிய அதிகார மையம் யாராக இருக்கும், தி.மு.க-வுடைய மிகப்பெரிய அதிகாரம் மையமாக இருக்கும் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் மையமாக இருக்கும். அப்படியான ஒரு அதிகார மையத்தை அணுகி தான் அவர் இந்த விஷயத்தில் தப்பித்து இருக்க முடியும் அதற்கான விலை எவ்வளவு பெரிய விலை கொடுத்து இருந்தாலும் இது மாதிரியான குற்றம் வழக்குகளில் இருந்து தப்பிக்க விடுவது தி.மு.க மாதிரியான ஒரு கேடுகெட்ட கட்சியாக தான் இருக்க முடியும். வேறு எந்த கட்சியும் அவர்களை தப்பிக்க விடாது. தி.மு.க மாதிரியான கேடுகெட்ட கட்சி தான் இந்த மாதிரியான விஷயங்களில் குற்றவாளிகளை தப்பிக்க விடும். நேற்றிலிருந்து பாருங்கள் இவர்கள் மிக அதிகப்படியான எதிர்வினை ஆற்றும்போதே தெரிகிறது, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வீடியோ ஷேடோவாக இருந்தது என்று சொல்லி இருக்கிறார். யார் அவருக்கு வீடியோ ஷேடோவாக இருந்தது என்று சொன்னது, யாரைக் கேட்டு அவர் இந்த பதிலை அவர் சொல்லி இருக்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார்? முன்னாள் அமைச்சர் ரகுபதி இப்போதும் வீரமணியை காப்பாற்றும் விஷயத்தை தான் செய்திருக்கிறார். ரகுபதியின் பேட்டியை பார்த்தீர்கள் என்றால், வீடியோ ஷேடோவாக இருக்கிறது, ஆதாரம் இல்லை என்று கூறுகிறார். அவர் இப்போதும் வீரமணியை காப்பாற்றும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் செய்த தவறுகளால் தான் மக்கள் உங்களை வெளியேற்றி இருக்கிறார்கள். இப்போதும் நீங்கள் வீரமணியை காப்பாற்றும் வேலையை தான் செய்திருக்கிறீர்கள். வீரமணி மீதான வழக்கு விசாரணை முறையாக போய்க் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அவ்வளவு பேர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், நீதிமன்றத்தில் இந்த வழக்கின் முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்த பிறகு அங்கே இருக்கிற அதிகாரிக்கு வழக்கு விசாரணை உடனடியாக துரிதப்படுத்தப்பட்டு இன்றைக்கு அவ்வளவு பேர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அத்தனை பேர் தலைமறைவாக இருந்திருக்கிறார்கள். தலைமறைவாக இருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். யார் யாரெல்லாம் இதில் தொடர்பு பட்டிருக்கிறார்களோ அவர்கள் கைது செய்யப்பட வேண்டிய நடவடிக்கையில் இருக்கிறார்கள். சாட்சியம் விசாரணையும் மிகவும் துல்லியமாக தெளிவாக நடந்து கொண்டு இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் அந்த மாணவியை பற்றிய தனிப்பட்ட விவரங்களையும் வெளியிட்டார்கள் எஃப்.ஐ.ஆர்-ஐ வெளியிட்டார்கள், ஏன் அந்த விஷயம் வெளியே வந்தது. இவ்வளவு அழுத்தம் வந்ததற்கான காரணமான அந்த மாணவியை மிகக் கேவலமாக மறைமுகமாக தண்டிக்கத்தானே செய்தார்கள். ஏன் அந்த எஃப்.ஐ.ஆர் வெளியே வந்தது, அந்த பெண்ணை அமைதிப்படுத்துவதற்காக தானே. அந்த எஃப்.ஐ.ஆர் நகல் வெளியே விட்டதற்கு காரணம் அந்த பெண்ணை அமைதிப்படுத்துவதற்காகத்தான் என்பது எங்களுடைய குற்றச்சாட்டு. வீரமணி வழக்கில் மிக துல்லியமாக ஒவ்வொரு விஷயமும் தெளிவாக நடந்து கொண்டு இருக்கிறது. எந்த விதத்திலும் எந்த குற்றவாளியும் இதிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு முதலமைச்சரின் தனி கவனத்தில் இருக்கிறது. எந்த விதத்திலும் எந்த வழக்கிலும் இதுபோன்ற பாலியல் குற்ற வழக்குகளில் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது. இதிலிருந்து அரசாங்கம் எந்த லட்சணத்தில் இயங்கி இருக்கிறது என்று தெரிகிறது. இதுபோல் அவர்கள் எத்தனை வழக்குகளை மூடி இருக்கிறார்கள், உங்களுடைய ஆட்சி காலத்தில் குற்ற சம்பவங்கள் குறைவு என்று சொல்வதற்கான லட்சணம் இதுதானா, எல்லாவற்றிலும் எஃப்.ஐ.ஆர் போட்டு விட்டு பேச வேண்டியவர்களிடம் பேசி, பேரம் பேசிவிட்டு முடிப்பது தான் உங்களுடைய வேலையா, நீங்கள் இன்னும் இந்த வீரமணியை காப்பாற்றும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வீடியோ ஷேடோவாக இருக்கிறது என்று சொன்ன ரகுபதி விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும். எதற்காக வீடியோ ஷேடோவாக இருக்கிறது என்று சொல்கிறார், அந்த வீடியோவை யார் பார்த்தார், இவர் பார்த்தாரா, இல்லை வேறு யார் பார்த்தார்கள் அல்லது பார்த்தவர்கள் இவரை சொல்ல சொன்னார்களா, இது ஒன்றுக்கு மட்டும் அவர் பதில் சொல்லட்டும். இதற்கு பதில் சொல்லாமல் அவர் வேறு எதையும் சந்திக்கக் கூடாது” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தி.மு.க என்றால் அவர்கள் ஓவர் ரியாக்ஷன் செய்வார்கள்., கச்சத்தீவு என்றால் ஓவர் ரியாக்சன் செய்வார்கள். காவிரி விவகாரம் என்றால் ஓவர் ரியாக்ஷன் செய்வார்கள், சர்க்காரியா கமிஷன் என்றால் அவர்கள் ஓவர் ரியாக்ஷன் செய்வார்கள், எப்போதெல்லாம் அவர்கள் மீது நீங்கள் தவறு சொல்கிறீர்களோ அவர்கள் உடனே ஓவர் ரியாக்ட் செய்வார்கள். அவர்கள் காலரில் உள்ள அழுக்கெல்லாம் அவர்கள் மீது உள்ள தவறு எல்லாம் அவர்கள் செய்த துரோகம் எல்லாம் தெரிந்து விடும் என்று அவர்கள் ஓவர் ரியாக்ட் செய்வார்கள். இந்த இரண்டு நாளில் அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு இந்த அளவுக்கு ஓவர் ரியாக் செய்திருக்கிறார்களா காலையிலிருந்து மாலை வரை அப்படியே தி.மு.க வெடித்து இருக்கிறது நீங்கள் இந்த அளவுக்கு செய்தியாளர்களை சந்தித்து இதை உடனே கட்டுப்படுத்துங்கள் என்று சொன்னது யார்? ஒரே விஷயத்தை தி.மு.க தலைவர்கள் எல்லாரும் சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே ஏன், இவர்கள் ஓவர் ரியாக்ட் பண்ணுகிறார்கள் என்றால் உங்கள் மீது என்ன தப்பு இருக்கிறது. எதை மூடி மறைக்க எதை அமைதிப்படுத்த திரும்பவும் நீங்கள் இந்த யுக்தியை கையாள்கிறீர்கள், முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிந்தும் தெரியாமலும் அவர் ஒரு சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். அவர் அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெம் வீரமணி வீடியோ ஷேடோவாக இருந்ததா? இந்த ஒரு வார்த்தைக்கு ரகுபதி பதில் சொல்லியே ஆக வேண்டும்: நிர்மல் குமார் பேட்டி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk