காமொடி ரொமான்ஸ் முதல் ஆக்ஷன் த்ரில்லர் வரை: புத்தகத்தில் இருந்து சினிமாவாக உருவான 6 திரைப்படங்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
காமொடி ரொமான்ஸ் முதல் ஆக்ஷன் த்ரில்லர் வரை: புத்தகத்தில் இருந்து சினிமாவாக உருவான 6 திரைப்படங்கள்

புத்தகங்களை அடிப்படையாக வைத்து வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். இந்திய சினிமா தொடங்கிய காலத்தின் முதலில் புராணங்களை அடிப்படையாக வைத்து திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்கள், பின்னாளில் தாங்களே, கதை திரைக்கதை எழுதி படங்களை இயக்கினார்கள். அதில் சில இயக்குனர்கள், மற்ற கதாசிரியர்களின் கதைகளை வாங்கி திரைக்கதை அமைத்து இயக்கிய நிலையில், டிஜிட்டல் சினிமா யுகத்தில் வெளிநாட்டு படங்களில் இருந்து இன்ஸ்பேர் ஆகி படங்கள் எடுப்பது அதிகமாவிட்டது. இந்த டிஜிட்டல் காலத்திலும், சில இயக்குனர்கள் புத்தகங்களில் இருக்கும் கதைகளை படமாக்கி வருகின்றனர். அந்த வரிசையில், புத்தகங்களை அடிப்படையாக வைத்து வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் - ’சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி’ நாவலின் தழுவல் கடந்த 2000-ம் ஆண்டு இயக்குனர் ராஜீவ் மேனன், இயக்கத்தில் வெளியான படம் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்'. மம்முட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், ஜேன் ஆஸ்டனின் ’சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி’ (Sense and Sensibility) நாவலை அடிப்படையாக கொண்டது. 2 சகோதரிகளின் காதல், குடும்பம் மற்றும் உறவுமுறைகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. ஆளவந்தான் - 'தாயம்' நாவலின் தழுவல் கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடங்கில் நடித்த படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படம் கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரட்டைச் சகோதரர்களின் சிக்கலான உறவையும் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் ரவீனா டன்டன், மனிஷா கொய்ராலா, அணு ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நான் கடவுள் - 'ஏழாம் உலகம்' நாவலின் தழுவல் பாலா இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் நான் கடவுள். ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது. பிச்சைக்காரர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களின் கடினமான வாழ்க்கைக்குள் அழைத்து செல்லும் வகையில் இந்த நாவல் அமைந்திருக்கும். அசுரன் - பூமணி எழுதிய 'வெக்கை' நாவலின் தழுவல் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது. கிராமப்புறங்களின் வேளாண்மை வாழ்க்கை, சாதியப் பாகுபாடு மற்றும் வன்முறையை அடிப்படையாக கொண்ட இந்த நாவலை தழுவி இயக்கப்பட்ட அசுரன் படத்தில், தனுஷ், மஞ்சுவாரியார், கென் கருணாஸ், டி.ஜே.அருணாச்சலம், பிரகாஷ்ராஜ், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூரரைப் போற்று - 'சிம்ப்ளி ஃபிலை: ஏ டெக்கான் ஒடிசி' நூலின் தழுவல் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. ஓ.டி.டி தளத்தில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், 'சிம்ப்ளி ஃபிலை: ஏ டெக்கான் ஒடிசி' என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது. ஏர் டெக்கான் (Air Deccan) நிறுவனத்தைத் தொடங்கிய தொழில்முனைவோரான கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் பயணத்தை இந்த நூல் விவரிக்கும். பொன்னியின் செல்வன்: I & II - கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலின் தழுவல் மணிரத்னம் இயக்கத்தில் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்கள். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா கிருஷ்ணன், சோபிதா துலிபாலா மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ் இலக்கியத்தின் மிகவும் கொண்டாடப்படும் வரலாற்று படைப்புகளில் ஒன்று தான் பொன்னியின் செல்வன் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை