நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் திருமணம், துணை மற்றும் தத்தெடுப்பின் மூலம் தாய்மையடையும் விருப்பம் ஆகியவை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது 40-வது வயதில் அடியெடுத்து வைக்கும் நிலையிலும், திருமணம் குறித்த அவரது பார்வை மாறாமல் அப்படியே உள்ளது. புகழ்பெற்ற நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி, சட்டப்பூர்வமான ஒரு காகிதத்துடன் தனது அடையாளத்தை இணைத்துக் கொள்வது குறித்த பயத்தைப் பற்றியும், சுதந்திரமாக தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையைப் பற்றியும் பலமுறை வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: அந்த வரிசையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணத்திற்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்று வெளிப்படுத்தினார். மேலும், எதிர்காலத்தில் உயிரியல் ரீதியாகவோ (biological) அல்லது தத்தெடுப்பு மூலமாகவோ சொந்தமாக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பற்றியும் அவர் பேசினார். சோஹா அலிகானின் யூடியூப் சேனலில் நடைபெற்ற நேர்காணலின் போது, திருமணம் என்ற யோசனையின் மீதான ஸ்ருதிஹாசனின் தயக்கம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தான் இந்த கருத்தாக்கத்திற்கு எதிரானவர் அல்ல என்றும், ஆனால் அதை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தைத் தவிர்க்கவே விரும்புவதாகவும் தெளிவுபடுத்தினார். "எனக்கு ஒரு துணையுடன் வாழ்வது மிகவும் பிடிக்கும். ஆனால், எனது வாழ்நாள் முழுவதையும் ஒரே வரையறைக்குள் அடங்கிப்போகாமல் தான் வாழ்ந்திருக்கிறேன்," என்று அவர் விளக்கினார். அவர் தொடர்ந்து கூறுகையில், "விசித்திரமாக, நான் சில விஷயங்களில் மிகவும் பாரம்பரியமானவளாகவும், சில அணுகுமுறைகளில் மிகவும் கட்டுப்பாடானவளாகவும் இருக்கிறேன். ஆனால் அதற்கு யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை, நானாகவே அந்த முடிவுக்கு வந்தேன். திருமணத்திற்கான காகிதப் பணிகள், ஆடம்பரச் செலவுகள், ஆடம்பரம் காட்டுவது போன்றவற்றை பார்க்கும்போது 'யாருக்காக நாம் இதைச் செய்கிறோம்?' என்றுதான் எனக்குத் தோன்றுகிறது" என்றார். சட்டப்பூர்வ காகிதங்களுக்குக் கட்டுப்பட்டு, திருமணக் கொண்டாட்டங்களில் அதிக செலவு செய்வதை விட, தனது துணையின் தோழமையை அனுபவிக்கவே தான் விரும்புவதாக கூறிய ஸ்ருதி, "நானும் என் துணையும் தினமும் ஒருவரை ஒருவர் தேர்வு செய்து வாழ்வதை நான் விரும்புகிறேன், ஆனால் அது ஒரு காகிதத்திற்காக இருக்கக்கூடாது. அதுதான் என் பயம், மற்றபடி வேறொன்றும் இல்லை. நான் திருமணத்தின் எல்லை வரை சென்று வந்திருக்கிறேன்; உண்மையிலேயே அந்த நிலை வந்தபோது அது என்னை அந்தளவிற்கு பயமுறுத்தவில்லை. அதிக செலவு செய்பவர்களை நான் தவறாகச் சொல்லவில்லை, ஆனால் அது எப்போதும் என்னை யோசிக்க வைக்கும். அதற்குப் பதிலாக அந்தப் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கலாம்!" என்று அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த எண்ணங்களை சோஹா கேட்டபோது, ஸ்ருதி, தனது பெண் மருத்துவரிடம் பேசிய உரையாடலை நினைவுகூர்ந்தார். "நான் தத்தெடுக்கவும் தயார் என்பதை அவரிடம் கூறியுள்ளேன். ஒரு தாயாக இருப்பதை நான் மிகவும் விரும்புவேன், ஆனால் அதே நேரத்தில் உயிரியல் ரீதியாக என் வாழ்வின் நீட்சியாகவும் அதை முயன்று பார்க்க விரும்புகிறேன்," என்று பகிர்ந்துகொண்டார். ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகாவின் உறவு சுருதிஹாசன், சித்திரக் கலைஞர் (illustrator) மற்றும் காட்சிப் பதிவுக் கலைஞரான (visual artist) சாந்தனு ஹசாரிகாவுடன் காதல் உறவில் இருந்தார். மே 2024-இல் தங்களது பிரிவை உறுதி செய்வதற்கு முன்பு, இருவரும் சுமார் நான்கு ஆண்டுகள் காதலித்து வந்தனர். மே 2024-இல் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடியபோது, நீண்ட நாள் காதலரான சாந்தனுவுடனான பிரிவை சுருதி உறுதிப்படுத்தினார். முதல்முறையாகத் தனது உறவுநிலை குறித்துப் பேசிய சுருதி, தான் தற்போது தனிமையில் (single) இருப்பதாகத் தெரிவித்தார். பயனர் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப்ற்றிக் கேட்டபோது, "இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பது எனக்குப் பிடிப்பதில்லை, ஆனால் நான் முற்றிலும் தனிமையில் தான் இருக்கிறேன். எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி, வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன். இது போதுமா?" என்று பதிலளித்தார். இதற்கிடையில், தொழில்முறைப் பாதையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தமிழ் ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படமான 'கூலி' (2025) படத்தில் ஸ்ருதி கடைசியாகக் காணப்பட்டார். அடுத்தபடியாக, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'ஆகாசம்லோ ஒக்க தாரா' என்ற பான்-இந்தியத் திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
திருமணம் வரை சென்று வந்துவிட்டேன்; இனி குழந்தையை தத்தெடுத்து தாயாக விரும்புகிறேன்: ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk