டிரம்பின் தடை அறிவிப்பை அவர் முன்னிலையில் விமர்சித்த நியூயார்க் மேயர் மம்தானி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
டிரம்பின் தடை அறிவிப்பை அவர் முன்னிலையில் விமர்சித்த நியூயார்க் மேயர் மம்தானி

பட மூலாதாரம், Reuters நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, பத்திரிகை சுதந்திரத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஊடகக் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேயர் இல்லமான கிரேசி மேன்ஷனின் புல்வெளியில் அதிபர் டிரம்புடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், குறிப்பிட்ட சில ஊடக நிறுவனங்களுக்கு டிரம்ப் விதித்த தடையை தான் ஆதரிக்கவில்லை என்று மம்தானி தெளிவுபடுத்தினார். தனது நிர்வாகத்தின் கீழ், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் செய்தி சேகரிக்க முழுமையான அணுகல் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக டிரம்ப் நியூயார்க் வந்திருந்தார். தனது பயணத்தை மேயர் மம்தானியுடனான அதிகாரப்பூர்வ இருதரப்பு சந்திப்புடன் அவர் தொடங்கினார். பின்னர், இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். டிரம்பின் ஊடகத்தடை குறித்து மம்தானியிடம் கேட்கப்பட்ட போது, "அனைத்து பத்திரிகையாளர்களையும் இங்குள்ள புல்வெளிக்கு வர அனுமதிக்கிறோம் என்று அதிபரிடம் நான் தெளிவாகக் கூறியுள்ளேன். எந்தவொரு நபர் அல்லது நிறுவனத்தின் கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அவர்களுடன் நாம் தொடர்ந்து உரையாடலைப் பேண வேண்டும் என்று நான் நம்புகிறேன்"என அவர் கூறினார். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு மம்தானிக்கு அருகில் நின்றிருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஊடகங்கள் மீதான தனது கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தினார். அதன்பின்னர், சிஎன்என், எம்எஸ்என் நவ் மற்றும் பொலிடிகோ ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடையைப் பற்றி செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த டிரம்ப் , "இந்த ஊடக நிறுவனங்கள் என்னைப் புறக்கணிப்பதாகப் பேசின. ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அதனால், நான் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை" என்று தெரிவித்தார். ஊடகங்களுக்கு சில பொறுப்புகள் இருப்பதால் தான் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஊடகங்களில் தனக்கு ஒருபோதும் சாதகமான செய்தி கிடைப்பதில்லை என்றும், செய்திகள் எப்போதும் எதிர்மறையாகவே உள்ளன என்றும் டிரம்ப் தெரிவித்தார். "தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றேன். நான் நிறைய நல்ல பணிகளைச் செய்திருக்கிறேன். எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். "நமது நாட்டின் வரலாற்றிலேயே சிறந்த பொருளாதார புள்ளிவிவரங்கள் நம்மிடம் உள்ளன. நம்மிடம் 21 டிரில்லியன் டாலர்கள் வரவுள்ளன. இது இதுவரை இல்லாத மிகப்பெரிய தொகை. நாம் செய்ததைப் போல் யாரும் இதுவரை செய்ததில்லை. எனக்கு ஒருபோதும் சாதகமான செய்தி கிடைப்பதில்லை. எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது" என்று அவர் கூறினார். இதற்குப் பிறகு, தேர்தலில் தான் பெற்ற மிகப்பெரிய வெற்றி மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான தனது கூற்றுகளையும் டிரம்ப் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Jim Watson/AFP via Getty Images உண்மையில், டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை சிஎன்என், எம்எஸ்என் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய ஊடக நிறுவனங்களை வெள்ளை மாளிகையில் 'தடை செய்வதாக' அறிவித்திருந்தார். இந்த ஊடக நிறுவனங்கள் "போலியான செய்திகளையும்" "பொய்களையும்" எழுதி அல்லது செய்தியாக வெளியிட்டு வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். தனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் குறிப்பிட்ட எந்தவொரு செய்தியையோ அல்லது அறிக்கையையோ அவர் மேற்கோள் காட்டவில்லை. டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில், "போலிச் செய்திகளை வெளியிடும் சிஎன்என், எம்எஸ்என் நவ் (பார்வையாளர்கள் மற்றும் நம்பகத்தன்மை இல்லாததால் சமீபத்தில் எம்எஸ்என்என்பிசி என்ற பெயரை எம்எஸ்என் நவ் என மாற்றிக்கொண்டது), மற்றும் பொலிடிகோ (நேர்மையற்ற ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க அரசிடமிருந்து நேரடியாக 8 மில்லியன் டாலர் மதிப்பிலான தவறான மற்றும் அபத்தமான சந்தாவைப் பெற்றது. அவற்றை 'செயல்பாட்டில்' வைத்திருக்க இதுவரை பெறப்பட்ட மிகப்பெரிய தொகை இதுதான். இது எனக்கு ஊழல் போலத் தெரிகிறது) ஆகியவற்றை வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக தடை செய்யும் வகையில் அறிவிப்பை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில், அவர்கள் தொடர்ந்து 'போலிச் செய்திகளை' வெளியிட்டு வருகின்றனர்" என்று பதிவிட்டார். "அமெரிக்க அதிபர், டிரம்ப் நிர்வாகம் அல்லது அமெரிக்கா குறித்து செய்தி வெளியிடும்போது, ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து போலியான செய்திகளையும் பொய்களையும் எழுதவோ அல்லது வெளியிடவோ அனுமதிக்கக் கூடாது. மற்ற போலிச் செய்தி ஊடக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டார். டிரம்பின் இந்த நடவடிக்கையை அமெரிக்க பத்திரிகை சுதந்திரத்தின் மீதான "சட்டவிரோத தாக்குதல்" என்று சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பணியாற்றும் தனது செய்தியாளர் குழுவுக்கு சிஎன்என் முழு ஆதரவு அளிப்பதாகவும், அவர்களின் "நியாயமான மற்றும் துல்லியமான செய்தி வெளியீட்டிற்கு" உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சிஎன்என் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்க அரசியலமைப்பின் கீழ், அரசு அல்லது அதிபரின் தலையீடு இல்லாமல் நிர்வாகம் தொடர்பான செய்திகளைச் செய்தியாக்க எங்களுக்கு உரிமை உள்ளது. டிரம்ப் அறிவித்துள்ள தடை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது அரசியலமைப்பு வழங்கியுள்ள இந்த உரிமையில் சட்டவிரோதமான தலையீடாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது. சிஎன்என், பொலிடிகோ மற்றும் எம்எஸ்என் நவ் ஆகியவை டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக தெரிவித்துள்ளன. திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், "பத்திரிகைகள் என்ன செய்திகளை வெளியிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கக் கூடாது" என்ற கொள்கையைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக அவை தெரிவித்துள்ளன. தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு பற்றி டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். "எதிர்பார்த்தபடியே, போலிச் செய்தி அளிக்கும் சிஎன்என், பொலிடிகோ (அமெரிக்க அரசு அவர்களை உயிருடன் வைத்திருக்க வழங்கிய 80 லட்சம் டாலர் பங்களிப்பைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்) மற்றும் எம்எஸ் நவ் (முன்பு எம்எஸ்டிஎன்சி என்று அழைக்கப்பட்டது) ஆகியவை வெள்ளை மாளிகையையும், உங்கள் அதிபரான என்னையும் அணுக அனுமதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளன" என்று அப்பதிவில் கூறியுள்ளார். "அவர்களுக்கு ஆதரவாக ஒரு நீதிபதி உள்ளார். அவர் ஜிம் அகோஸ்டாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர். தற்போது ஜிம் அகோஸ்டா பொதுவெளியில் இருந்து மறைந்துவிட்டதைப் போலத் தெரிகிறது. அந்த நீதிபதியின் பெயர் டிம் கெல்லி. துரதிர்ஷ்டவசமாக, அவரை நியமித்தது டிரம்ப் தான்" என்று அவர் தெரிவித்துள்ளார். "எந்த சந்தேகமும் இல்லாமல், எப்போதும் போல, இந்தத் தீர்ப்பை நாங்கள் மேல்முறையீடு செய்வோம். போலிச் செய்திகளை வெளியிடும் மற்றும் எதிர்மறையான செய்திகளை மட்டுமே வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் அனுமதி அளிக்கப்படக்கூடாது என்று நான் நம்புகிறேன். இந்த ஊடக நிறுவனங்கள், அடையாளம் தெரியாத 'ஆதாரங்களை' அடிப்படையாகக் கொண்டு பொய்யான செய்திகளை வெளியிடுவதன் மூலம் நமது தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை