பட மூலாதாரம், Getty Images (இந்த முக்கியச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களில், தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட நௌஃபர் மௌலவியும் அடங்குவார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்ற ஒன்பது பேர் விடுவிக்கப்பட்டனர். 2009-ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் குண்டுவெடிப்புகள், இலங்கையில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். இறந்தவர்களில் 45 வெளிநாட்டினரும் அடங்குவர். பட மூலாதாரம், Getty Images இந்த தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று புலனாய்வாளர்கள் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மையினர். அவர்களில் ஒருவர் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். கொலை, பயங்கரவாதச் சதி மற்றும் துப்பாக்கிகளை வைத்திருத்தல் உள்ளிட்ட 23,000க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பட மூலாதாரம், Getty Images இலங்கையில் 2019ம் ஆண்டு 277 பேரின் உயிர்களை காவுக்கொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. End of அதிகம் படிக்கப்பட்டது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையிலுள்ள பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நாடாளுமன்றத் தெரிவு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டவரும், சுமார் 45 சிறுவர்களும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
இலங்கை: 277 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் - நீதிமன்ற தீர்ப்பு விவரம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk