யுவன் இசையில் டியூன் ரெடி; கனடாவில் இருந்து டெலிபோனில் பாடல் சொன்ன கங்கை அமரன்: இந்த பாட்டு சூப்பர் ஹிட்டு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
யுவன் இசையில் டியூன் ரெடி; கனடாவில் இருந்து டெலிபோனில் பாடல் சொன்ன கங்கை அமரன்: இந்த பாட்டு சூப்பர் ஹிட்டு

சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வரும் கங்கை அமரன், நேர்காணல்களில் திரைத்துறை ஜாம்பவான்களுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட கலைஞர்களின் முக்கியமானவராக இருக்கும் கங்கை அமரன், தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ஒரு படத்தில் கனடாவில் இருந்து பாடலை டெலிபோனில் சொல்ல, அதை வெங்கட் பிரவு இங்கு எழுதிக்கொண்டு அந்த பாடலை ரெக்கார்ட் செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் கங்கை அமரன். இயக்குனர் பாக்யராஜூவின் ஆரம்பக்கால படங்களுக்கு இசையமைத்த இவர், தன் அண்ணன் இளையராஜாவின் இசையில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், நேர்காணல்களில் திரைத்துறை ஜாம்பவான்களுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கங்கை அமரன், தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் இடம் பெற்ற கோடான கோடி பாடல் எப்படி உருவானது என்பது குறித்து பேசியுள்ளார். 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கிய 2-வது படம் சரோஜா. மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், வைபவ், பிரேம்ஜி, வேகா, சம்பத்ராஜ் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, படத்தின் பாடல்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு பாடல் தான் கோடான கோடி வந்து குளிப்போம் விளையாடி என்ற பாடல். இந்த பாடலுக்கு யுவன் இசையமைத்தவுடன், வெங்கட் பிரபு, தனது அப்பாவான கங்கை அமரனுக்கு போன் செய்து பாடல் வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது கங்கை அமரன் கனடாவில் இருந்துள்ளார். பாடல் வேண்டும் என்று கேட்டவுடன், இப்போது நான் ப்ரியாகத்தான் இருக்கிறேன். டியூன் சொல்லு என்று கேட்டு, வெங்கட் பிரபு டியூன் சொல்ல சொல்ல, டெலிபோனில் பாடல் வரிகளை கூறியுள்ளார் கங்கை அமரன். இவ்வாறு எழுதப்பட்ட இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தகவலை கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. I’m ELAYARAJA D, a seasoned media professional with over 9 years of experience in digital journalism. Currently Working as a Senior Sub-Editor at The Indian Express (Tamil) since Dec 2020, I specialize in reporting on Entertainment, Sports, and Tamilnadu news. My Media journey began in 2015 as a Playout Operator and Video Editor In JM Entertainment Network (Local TV Channel) in Trichy Upto 2017. Then spent Three years as a Sub Editor In Dineseithigai Online Media (Malayalam Express Group) Upto Dec 2020 and have extensive experience Sports reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from Periyar EVR College, Trichirapalli and a Master’s in Visual Communication from Thiru.Vi.Ka Arts College Thiruvarur. Contact: d.elayaraja@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை