தேவதாசி முறை: கவிஞர் அ.வெண்ணிலா, ஜெயமோகன் பேச்சுக்கு அருள்மொழி விமர்சனம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
தேவதாசி முறை: கவிஞர் அ.வெண்ணிலா, ஜெயமோகன் பேச்சுக்கு அருள்மொழி விமர்சனம்

சென்னையில் நடைபெற்ற ‘தேவநாயகி’ ஆய்வரங்கில் தேவதாசி முறை குறித்து கவிஞர் அ.வெண்ணிலா ஆற்றிய உரைக்கு, திராவிடர் கழகச் செயலாளர் அருள்மொழி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் வரலாற்றுப் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டதாக அவர் சாடியுள்ளார். சென்னையில் 'நாயகி' அமைப்பின் சார்பில் நடைபெற்ற 'தேவநாயகி' முழுநாள் ஆய்வரங்கில், தேவதாசி முறை குறித்து எழுத்தாளர் கவிஞர் அ.வெண்ணிலா ஆற்றிய உரையும், அதற்குத் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளரும் வழக்குரைஞருமான அருள்மொழி தெரிவித்துள்ள விமர்சனங்களும் சமூக மற்றும் அரசியல் தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சென்னையில் நடைபெற்ற 'தேவநாயகி' முழுநாள் ஆய்வரங்கில் தேவதாசி முறை மற்றும் வரலாற்றுச் சான்றுகள் குறித்து எழுத்தாளர் கவிஞர் அ.வெண்ணிலா ஆற்றிய உரையும், அதற்குத் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளரும் வழக்குரைஞருமான அருள்மொழி தெரிவித்துள்ள எதிர்வினையும் சமூக-வரலாற்றுத் தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சென்னையில் 'நாயகி' அமைப்பின் சார்பில் நடைபெற்ற 'தேவநாயகி' முழுநாள் ஆய்வரங்கில், தேவதாசி முறை குறித்து எழுத்தாளர் கவிஞர் அ.வெண்ணிலா ஆற்றிய உரையும், அதற்குத் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளரும் வழக்குரைஞருமான அருள்மொழி தெரிவித்துள்ள விமர்சனங்களும் சமூக மற்றும் அரசியல் தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கவிஞர் அ.வெண்ணிலாவின் உரை மற்றும் ஆய்வுக் கருத்துக்கள்: நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் அ.வெண்ணிலா, "தேவரடியார் முறை என்பது பாலியல் தொழிலை அடிப்படையாகக் கொண்டது அல்ல; அது 1500 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடும் இறைநெறியும் சார்ந்த உயரிய அமைப்பாக விளங்கியது. சங்க காலம் முதல் சோழர் காலம் வரை சமூகத்தில் தேவரடியார் பெண்கள் மிகுந்த மரியாதையுடனும், தன்னாட்சியுடனும், சொத்துரிமை மற்றும் படிப்பறிவு கொண்டவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். சோழ அரசர்கள் தங்கள் மகள்களைக் கூட இறை சேவைக்கு நேர்ந்துவிட்ட வரலாற்றுச் சான்றுகள் கல்வெட்டுகளில் உள்ளன. ஆனால், நமது பண்பாடும் மரபும் தெரியாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பதிவுகளாலும், ஐரோப்பியப் பார்வையாலும்தான் இம்முறை தவறாகச் சித்தரிக்கப்பட்டு இழிவான முத்திரை குத்தப்பட்டது" என்று தெரிவித்தார். மேலும், "தமிழர்கள் மறக்க நினைக்கும் அல்லது மறந்துபோன ஒரு அமைப்பாக இது மாற்றப்பட்டிருப்பது துயரமளிக்கிறது" என்றும் அவர் தனது தரவுகள் சார்ந்த உரையில் குறிப்பிட்டார். வழக்குரைஞர் அருள்மொழியின் முகநூல் பதிவு மற்றும் கேள்விகள்: இந்த ஆய்வரங்கில் பார்வையாளராகப் பங்கேற்ற வழக்குரைஞர் அருள்மொழி, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அ.வெண்ணிலாவின் உரையை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது பதிவில், "1500 ஆண்டுகள் சிறப்புடன் இருந்த ஒரு அமைப்பை அழித்துவிட்டோம் என்ற பார்வையிலும், தேவதாசி முறை ஒழிப்பதே தவறு என்ற தொனியிலும் அ.வெண்ணிலாவின் உரை அமைந்திருந்தது அதிர்ச்சியளிக்கிறது. பிரிட்டிஷ்காரர்களால்தான் தேவதாசிகள் மீது இழிவான முத்திரை விழுந்தது என்று கூறுவது வரலாற்று உண்மையை மறைப்பதாகும். தேவதாசி முறையால் பெண்கள் சந்தித்த உடலியல் மற்றும் சமூகச் சுரண்டல்களைப் புறந்தள்ளிவிட்டு, அதை வெறும் கலையாகவும் மரியாதைக்குரிய வாழ்க்கையாகவும் மட்டுமே சித்தரிப்பது நேர்மையான ஆய்வாகாது. தேவதாசி முறையை எதிர்த்துப் போராடி, அக்கொடுமையை ஒழிக்கச் சட்டம் கொண்டுவரக் காரணமாயிருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் வாழ்வையும் போராட்ட வரலாற்றையும் பற்றிப் பேச ஒரு அமர்வு கூட இந்த ஆய்வரங்கில் ஒதுக்கப்படவில்லை. அந்தச் சமூகத்தில் பிறந்து அக்கொடுமையை எதிர்த்த தலைவர்களின் குரலுக்கு இடமளிக்காத ஒரு கூட்டம் எப்படி ஒரு நடுநிலையான ஆய்வரங்கமாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரங்கில் ஜெயமோகன், ஸ்வர்ணமால்யா, சாந்தினிபீ, லஷ்மி பாலகிருஷ்ணன் போன்ற பலர் பல்வேறு பார்வைகளில் பேசினாலும், இக்கருத்தரங்கின் முதன்மை நோக்கம் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் குறைகூறுவதாகவே அமைந்திருந்தது என அருள்மொழி சுட்டிக்காட்டியுள்ளார். இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் சமூகச் சிந்தனையாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை