ரூ.24 கோடி நஷ்டம்: 'ரூ.10,000 சம்பள பாக்கிக்காக ஜவுளிக்கடைக்கு தீ வைத்த ஊழியர்' - விபத்தாக கருதப்பட்ட வழக்கில் திருப்பம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
ரூ.24 கோடி நஷ்டம்: 'ரூ.10,000 சம்பள பாக்கிக்காக ஜவுளிக்கடைக்கு தீ வைத்த ஊழியர்' - விபத்தாக கருதப்பட்ட வழக்கில் திருப்பம்

பட மூலாதாரம், Rupesh Sonwane குஜராத் மாநிலம் சூரத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு ஒரு துணிச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயை அணைக்க தீயணைப்புத் துறையினருக்கு சுமார் 14 மணி நேரம் தேவைப்பட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்றே கருதப்பட்டது. ஆனால், பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இது விபத்து அல்ல; ஒருவரால் திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ என்பது தெளிவாகத் தெரியவந்தது. காவல்துறையின் கூற்றுப்படி, வினோத் சாவ்லே என்ற நபர், தனது முதலாளியிடம் இருந்து வர வேண்டிய நிலுவைச் சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட தகராறின் காரணமாக ஷ்யாம் சங்கின் ஜவுளி கடைக்குத் தீ வைத்துள்ளார். தீ வைத்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்குத் தப்பிச் சென்றார், ஆனால் இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பட மூலாதாரம், PTI சூரத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு (செப்டம்பர் 9 அதிகாலை), கும்பாரியா 3 ரஸ்தா அருகே அமைந்துள்ள ஷ்யாம் சங்கீனி ஜவுளி மார்க்கெட்டின் ஆறாவது தளத்தில் திடீரென தீப்பற்றியது. சூரத்தின் துணிச் சந்தைகளில் தீ விபத்து சம்பவங்கள் அடிக்கடி நடப்பது உண்டு; ஏனெனில், மார்க்கெட்டுகளில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய துணி மூட்டைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு இருக்கும். எனவே, ஷ்யாம் சங்கீனி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில் தீப்பிடித்ததும் ஒரு விபத்தாகவே இருக்கும் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் துணி பொட்டலங்கள் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தைத் தெளித்து தீ வைப்பது தெரியவந்தது. தீ வைத்த பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வினோத் பண்டிட் சாவ்லே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கூற்றுப்படி, "வினோத் பண்டிட் சாவ்லே இந்த மார்க்கெட்டில் உள்ள கடை எண் 639-இல் இயங்கும் 'ஜகதம்பா டெக்ஸ்டைல்ஸ்' உரிமையாளர் ஹனுமான் பிரசாத் என்பவரிடம் மாதம் 30,000 ரூபாய் சம்பளத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். வேலையை விட்டு நின்ற பிறகு, முதலாளியுடன் அவருக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் முதலாளி அவருக்குத் தர வேண்டிய நிலுவைச் சம்பளமான 10,000 ரூபாயைத் தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த வணிகருக்குப் பாடம் புகட்டும் நோக்கிலேயே வினோத் பண்டிட் சாவ்லே தீ வைத்துள்ளார்" End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், CCTV பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு "குற்றஞ்சாட்டப்பட்ட வினோத் பண்டிட் சாவ்லே, தான் வேலையை விட்டுச் சென்ற பிறகு தனக்கு வர வேண்டிய ₹10,000 நிலுவைத் தொகையைத் தராமல் ஏமாற்றிய தனது முதலாளிக்கு பாடம் புகட்டவே இந்தக் தீவைப்புச் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்" என்று சூரத் கூடுதல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) கரண்ராஜ் வகேலா ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "டிண்டோலியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் 150 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிய வினோத் பண்டிட் சாவ்லே, அதனை கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த துணிப் பார்சல்கள் மீது ஊற்றித் தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டுள்ளார். அதன்பிறகு, அவர் ராஜஸ்தானில் உள்ள காடுஷ்யாம் கோயில் மற்றும் அயோத்திக்கு சென்றுவிட்டார். இறுதியாக, சூரத் திரும்பிக் கொண்டிருந்த போது டிண்டோலி பூங்கா அருகே அவர் பிடிபட்டார்" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு ஜவுளிச் சந்தைக்கு வந்த அவர், கடை மூடப்படும் வரை ஐந்தாவது மாடியில் காத்திருந்தார். முதலாளி கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற பிறகு, நள்ளிரவில் தீ வைத்துள்ளார். மறுநாள் அவரது அடையாளம் தெரியவந்ததும், தனது அலைபேசியை அணைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்" என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம், Rupesh Sonwane தீ விபத்து ஏற்பட்ட மறுநாளன்று, சூரத் மாநகராட்சியின் துணை ஆணையர் தர்மேஷ் மிஸ்திரி ஊடகங்களிடம் கூறுகையில், "இரவு 12.50 மணிக்குத் தீயணைப்புத் துறைக்கு இந்தத் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. கட்டடத்தின் மேல் தளத்தில்தான் தீ விபத்து ஏற்பட்டது" என்று தெரிவித்தார். "அனைத்துத் தீயணைப்பு நிலையங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன" என்றும் கூறினார். இந்தத் தீயை அணைக்க சுமார் 14 மணி நேரத்திற்கும் மேலானது; இதில் அந்தத் தளத்தில் இருந்த அனைத்துக் கடைகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அதுமட்டுமின்றி, கீழே ஐந்தாவது தளத்தில் இருந்த சில கடைகளின் பொருட்களும் நாசமாயின. இச்சம்பவம் குறித்த விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளில் முகத்தில் கைகுட்டையைக் கட்டிக்கொண்டு வந்த ஒரு நபர், துணிப் பார்சல்கள் மீது ஏதோ ஒரு திரவத்தைத் தெளித்து, பின்னர் தீ வைப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், காவல்துறை அடையாளம் தெரியாத நபர் மீது முதற்கட்டத் தகவல் அறிக்கை பதிவு செய்தது; பட மூலாதாரம், ANI Video Grab காவல்துறையின் கூற்றுப்படி, "வினோத் சாவ்லேயின் முதலாளி, அவர் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் குறை கண்டுபிடித்து அடிக்கடி திட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் ஒரு மாதத்திற்கு முன்பே வேலையை விட்டு நின்றுவிட்டார். இருப்பினும், அவருக்குச் சேர வேண்டிய பத்தாயிரம் ரூபாய் சம்பள நிலுவை தரப்படாமல் இருந்தது. அந்தப் பணத்தைப் பெறுவதற்காக அவர் பலமுறை தொலைபேசியிலும் பேசியுள்ளார்; நேரில் சென்றும் முதலாளியைச் சந்தித்துள்ளார்; ஆனால், முதலாளி பணத்தைத் தராமல் இழுத்தடித்துள்ளார். எனவே, முதலாளிக்குப் பாடம் புகட்டுவதற்காகவே அவர் கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த துணிப் பொட்டலங்களுக்குத் தீ வைக்க முடிவெடுத்துள்ளார்." கூடுதல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) கரண்ராஜ் வகேலா கூறுகையில், "பொருட்களுக்குத் தீ வைத்த பிறகு, வினோத் சாவ்லே அந்த இடத்தை விட்டுத் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்" என்று தெரிவித்தார். "அவர் தனது சொந்த ஊருக்குச் செல்லாமல், ராஜஸ்தானுக்கு சென்றுவிட்டு பிறகு உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்திக்குச் சென்றுவிட்டார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு சூரத்திற்குத் திரும்பி வந்தார். அப்போது, காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், டிண்டோலி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்" என்றும் கூறினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வினோத் பண்டிட் சாவ்லா தரப்பு விளக்கத்தை பெற முயன்ற போது அவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை