நடிகர் சந்தானம் இளையராஜாவின் பாடல்களை தன் வாழ்வில் பயன்படுத்தி நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இளையராஜாவின் பாடல்கள் வெறும் இசை மட்டுமல்ல, அவை காதலைச் சொல்லும் தூதுவனாகவும் திகழ்கின்றன என்பதை நகைச்சுவை நடிகர் சந்தானம் தனது நிஜ வாழ்க்கைப் பின்னணியில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு கூறியுள்ளார். நகைச்சுவை நடிகர் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சிக்குப் பிறகு, திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், பாஸ் என்கிற பாஸ்கரன், வேலாயுதம், வீரம் போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி தில்லுக்கு துட்டு உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அவர் தமிழ் சினிமாவில் நாயகனாக வலம் வருகிறர். இந்நிலையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவின் பாடல்களை தன் வாழ்வில் பயன்படுத்தி நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த டைப்பிங் கிளாஸ் அனுபவத்தைப் சந்தானம் பகிர்ந்து கொண்டார். சந்தானம் டைப்பிங் கிளாஸ் அருகே உள்ள வீட்டிற்கு ஒரு புதிய பெண் வந்திருந்தார். அவர் தெலுங்கு மொழி பேசக்கூடியவர் என்பதால், அவரிடம் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அப்போது நண்பர் ஒருவர், தெலுங்கில் பேசினால்தான் அந்தப் பெண்ணிடம் பழக முடியும் என்று யோசனை சொன்னார். ஆனால் எனக்கு தெலுங்கு சுத்தமாகத் தெரியாது. அப்போது என் நண்பன் இளையராஜா சார் பாடல் கேட்டால் தெலுங்கு கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார். நண்பனின் யோசனையின்படி, இளையராஜாவின் தெலுங்கு பாடல்களைக் கேட்டேன்., "கொடியிலே மல்லிகைப்பூ" பாடலின் தெலுங்கு வடிவமான "தேகலோ பூவு சரணம் வரும்" பாடலைக் கேட்கத் தொடங்கினேன். அந்தப் பாடலில் வரும் "மனசு தடுமாறும்" என்ற வரியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் தனியாக இருப்பதை பார்த்து, "தெலிசி தெலியந்தா... இது தெலிசி கெஜரிந்தா" என்று பாடிக்கொண்டே ஜன்னல் வழியாகப் பார்த்தேன். அப்போது திடீரென்று அந்தப் பெண்ணின் அப்பா என்ட்ரி ஆகிவிட்டார். "எப்புடோ ஜருகிந்தா... அது இப்புடே தெலிசிந்தானே" என்று கோபத்துடன் ஜன்னல் வழியாகவே கம்பால் அடிக்க முயன்றார். இந்தச் சம்பவம் டைப்பிங் கிளாஸ் போகும் போதெல்லாம் நினைவுக்கு வருகிறது என்று சந்தானம் கூறியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் இளையராஜாவின் பாடல்கள் காதல் உணர்வுகளைத் தூண்டுவதுடன், சில சமயங்களில் எதிர்பாராத சிக்கல்களையும் உருவாக்கும் என்பதை நகைச்சுவையுடன் கூறியுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. I’m ELAYARAJA D, a seasoned media professional with over 9 years of experience in digital journalism. Currently Working as a Senior Sub-Editor at The Indian Express (Tamil) since Dec 2020, I specialize in reporting on Entertainment, Sports, and Tamilnadu news. My Media journey began in 2015 as a Playout Operator and Video Editor In JM Entertainment Network (Local TV Channel) in Trichy Upto 2017. Then spent Three years as a Sub Editor In Dineseithigai Online Media (Malayalam Express Group) Upto Dec 2020 and have extensive experience Sports reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from Periyar EVR College, Trichirapalli and a Master’s in Visual Communication from Thiru.Vi.Ka Arts College Thiruvarur. Contact: d.elayaraja@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தெலுங்கு பெண்ணுடன் காதல்; இளையராஜா பாடலை தெலுங்கில் பாடி அசத்திய சந்தானம்: இறுதியில் பெண்ணின் அப்பா வைத்த ட்விஸ்ட்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk