லண்டன் பயணத்தில் முதல்வருடன் செல்லாதது ஏன்? தொழில்துறை அமைச்சர் சார்பில் விளக்கம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️
லண்டன் பயணத்தில் முதல்வருடன் செல்லாதது ஏன்? தொழில்துறை அமைச்சர் சார்பில் விளக்கம்

வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்ற வெளிநாட்டுப் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இது குறித்து விமர்சிக்க தொடங்கினர். தமிழ்நட்டின் முதல்வராக கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் விஜய், சமீபத்தில், தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தார். ஆனால் இந்த பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தணா கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து எம்.எல்.ஏ கனிமொழி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 10-ந் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின்போது லண்டனில் உள்ள புகழ் பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயதில் பங்கேற்க இருந்த நடிகரும் ரேஸருமான அஜித்குமாரை சந்தித்தார். மேலும் இந்த மோட்டார் ரேஸ் போட்டியையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், முதல்வரின் லண்டன் பயணத்தில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். அதே சமயம் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்ற வெளிநாட்டுப் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இது குறித்து விமர்சிக்க தொடங்கினர். இந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனாவுக்கு அந்த நேரத்தில் கழுத்து எலும்பு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அதனால்தான் அவர் பிரிட்டன் செல்லவில்லை என்றும் எம்.எல்.ஏ கனிமொழி பதிவிட்டுள்ளார். இது குறித்து கனிமொழி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு பெண்ணாக, நான் இதை நேரில் பார்த்ததால் செல்ல விரும்புகிறேன். எனது தங்கை அமைச்சர் கீர்த்தனாவுக்கு நடைபெற்ற கழுத்து எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பின் அவரை காமாட்சி மருத்துவமனையில் சந்தித்தேன். மருத்துவர்கள் அவரை 20 நாள்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், மாநிலத்தின் மீதான அர்ப்பணிப்பு உணர்வால், வெறும் 4 நாள்களில் அவர் பணிக்குத் திரும்பியுள்ளார். மருத்துவமனைப் படுக்கையிலும் முதல்வரின் பிரிட்டன் பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வந்தார். ஒவ்வொரு நாளும் அவருடைய முதல் கேள்வி தனது வலிகளைப் பற்றியது அல்ல; மாறாக தொழில் நிறுவனங்களுடனான சந்திப்புகள் அனைத்து உரிய நேரத்தில் நடக்கின்றனவா என்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஓய்வெடுக்கும்படி நான் கூறியபோதும் அவர் கேட்கவில்லை. அவர் விஷயத்தில் என்னை மிகவும் பாதித்தது இதுதான்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கீர்த்தனாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறியபோது, எதிர்க்கட்சியினர் அதற்கான காரணத்தையோ, உடல்நலம் தேறுவது அல்லது அவர் எந்தச் சூழலில் இருக்கிறால் என்பதைப் பற்றியோ சிந்திக்கக்கூட இல்லை. அவர்கள் உடனடியாக ஒரு காரணத்தை மட்டுமே யோசித்தனர். அது மாதவிடாய். ஒரு பெண் பணியில் இல்லையென்றால் அதற்கு மாதவிடாய் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என நினைக்கும் உடனடியான எதிர்வினை, அப்பெண்ணைப் பற்றியது அல்ல மாறாக அது உங்களின் பிற்போக்குத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. பெண்களை அவர்களின் மாதவிடாய் சுழற்சியை வைத்து மட்டுமே வரையறுக்க முடியாது. நாங்கள் தலைவர்கள், தொழில்முறை நிபுணர்கள், தாய்மார்கள் மற்றும் மகள்கள். நோய், காயம் மற்றும் கடமை ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் சுமந்துகொண்டு நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம்.ஒரு பெண்ணின் பணியில் குறை காண முடியாதபோது, அவரது உடலைக் தாக்குவதற்காக, காரணமின்றி அவர் பணியில் இல்லாத நாள்களை உடலியல் மாற்றங்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவது மோசமான பழமைவாதிகளின் பழக்கம். 4 நாள்களுக்குப் பிறகு, உடல்நிலை தேறி வந்தாலும், வலி நிவாரணிகளை உட்கொண்டு, கட்டுப் போட்டிருந்தாலும் இடைவேளையின்றி நிறுவனங்களைச் சந்திப்பதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதிலும் கீர்த்தனா மும்முரமாக இருந்தார். A post shared by Kanimozhi RD (@kanimozhisanthosh_tvk) அவரைப் பற்றி தவறாகப் பேசுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலை மாற வேண்டும். கடினமான சூழலில் கூட தொடர்ந்து தலைமை பண்பை கொண்டிருக்கும் பெண்களை நாம் கொண்டாட வேண்டுமே தவிர, அவர்களின் மாதவிடாய் சுழற்சி குறித்து விவாதிக்கக் கூடாது. பெண்கள் அதைவிடத் தகுதியானவர்கள். தமிழ்நாடும் சிறந்ததையே பெறத் தகுதியானது. கீர்த்தனா என்னை மன்னித்துவிடுங்கள். இதைத் தனிப்பட்ட விஷயமாகவே வைத்திருக்க நீங்கள் விருப்பப்பட்டது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இதைப் பதிவிட வேண்டியிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை