“நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
“நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் விளையாட்டுப் பிள்ளைகளால் நடத்தப்படும் த.வெ.க. கூட்டணி ஆட்சியில், விவசாயிகளுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது. டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை, இந்த பொய்க்கால் குதிரை அரசு முறையாக கொள்முதல் செய்வதில்லை என்று புகார்கள் எழுந்தன. அதே நேரம் அரையும், குறையுமாக கொள்முதல் செய்த நெல்மணிகளை சேமிப்புக் கிடங்குகளில் முறையாக பாதுகாக்காததால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்ததாகச் செய்திகள் வருகின்றன. இவைகளையெல்லாம் மிகுந்த அக்கறையோடு சுட்டிக் காட்டினால், குறைகளைக் களைய முறையான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிரச்சனைகளை திசை திருப்பும் விதத்தில் இந்த த.வெ.க. அரசு அலட்சியப் போக்கோடு நடந்துகொள்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இடப் பற்றாக்குறை காரணமாக வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் நெல் மூட்டைகள் முறையாக தார்பாய் கொண்டு மூடாததால், கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் நனைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது வருந்தத்தக்கதாகும். இதுபோன்று மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகளை அரிசியாக்கி புழுத்துப்போன நிலையில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் நிலை ஏற்படும். த.வெ.க. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் நெல்மணிகள் சேதமடைகிறது. கொள்முதல் செய்த நெல்மணிகளும் முறையான பராமரிப்பு இல்லாததால் மழையில் நனைந்து வீணாகிப் போகிறது. சொல் புத்தியும் இல்லாமல், சுய புத்தியும் இல்லாமல் ஏனோ, தானோ என்று செயல்பட்டு தமிழக விவசாயிகளையும், ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் வாட்டி வதைக்கும் த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – அன்புமணி “மயிலாடுதுறையில் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுதிக்க கூடாது!” – திருமாவளவன் “ஜெம் வீரமணி வழக்கில் தவரு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்!” – வானதி சீனிவாசன் “தவெக அரசு கள் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்” : சீமான் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை