மரக்கன்றுகள் நடுவது திட்ட வடிவத்திலேயே சேர்க்கப்படும். மேலும், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச நவுகள் (Medians) பகுதியில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்படும். இந்தியாவின் அதிவிரைவு நெடுஞ்சாலைகளில் புதிய விதிகள்: நான்கு வழித்தடமா அல்லது ஆறு வழித்தடமா? இந்தியாவில் அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டுமானத்தை ஒரே மாதிரியான தரநிலைகளில் மேற்கொள்ளும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) புதிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலையின் அகலம், போக்குவரத்து அளவு, நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள், சாலை குறியீடுகள், சுங்க வசூல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு இதில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 2036-37-க்குள் 50,000 கி.மீ. நீளத்துக்கு அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய விதிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் வாசிக்க அதிவேக நெடுஞ்சாலைகள் என்பது வாகனங்கள் தடையின்றி, தொடக்கம் முதல் இறுதி வரை வேகமாக பயணிக்கும் வகையில் அமைக்கப்படும் அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது எக்ஸ்பிரஸ்வே-க்கள் ஆகும். 2025 டிசம்பர் நிலவரப்படி இந்தியாவில் இதுபோன்ற அதிவேக நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 3,052 கி.மீ. ஆக இருந்தது. போக்குவரத்து அளவைப் பொறுத்து 4 வழியா, 6 வழியா? புதிய விதிகளின்படி, ஒரு அதிவேக நெடுஞ்சாலையை எத்தனை வழித்தடங்களில் அமைக்க வேண்டும் என்பது அந்தச் சாலையில் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து அளவைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். தற்போதைய போக்குவரத்து 15,000 பி.சி.யு (PCU) வரை இருந்தால், நான்கு வழிச் சாலையாகவும், 15,000 முதல் 25,000 PCU வரை இருந்தால் நான்கு வழிச் சாலையாகவும் ஆனால் ஆறு வழி கட்டமைப்புடனும் அமைக்கப்படும். போக்குவரத்து 25,000 முதல் 40,000 பி.சி.யு வரை இருந்தால், அது ஆறு வழிச் சாலையாகவும், ஆறு வழி கட்டமைப்புடனும் உருவாக்கப்படும். நீண்ட தூரப் போக்குவரத்து எந்தவித உள்ளூர் இடையூறுமின்றி சீராகச் செல்வதை உறுதி செய்ய உரிய வளைவுகள் (Ramps) அமைக்கப்படும். சாலைகள் குறுக்கிடும் இடங்களில் தரைமட்ட சந்திப்புகள் முற்றிலும் தவிர்க்கப்படும். பி.சி.யு (PCU) என்பது பல்வேறு வகையான வாகனங்களின் போக்குவரத்து அளவை ஒரே அளவுகோலில் கணக்கிட பயன்படுத்தப்படும் அலகாகும். எதிர்கால போக்குவரத்தையும் கணக்கிட வேண்டும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் போது, தற்போது சாலையில் செல்லும் வாகனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள போக்குவரத்து, புதியதாக உருவாகும் போக்குவரத்து, சாலை அமைக்கப்பட்டதால் அதிகரிக்கும் போக்குவரத்து மற்றும் வேறு சாலைகளில் இருந்து திரும்பி வரும் போக்குவரத்து என அனைத்து வகைகளையும் சரியான போக்குவரத்து மாதிரிகள் மூலம் கணக்கிட வேண்டும். சரக்கு வாகனங்களின் போக்குவரத்து வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்ய வேண்டும். சுங்க வசூல் தரவுகள் உள்ளிட்ட பிற ஆதாரங்களின் மூலமும் இந்தக் கணக்கீடுகள் சரிபார்க்கப்பட வேண்டும். சரக்கு போக்குவரத்து மற்றும் வாகன சேதக் காரணியை கணக்கிடுவதற்கு ஜிஎஸ்டி தளங்கள், சுரங்கத் துறை மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெறப்படும் தரவுகளையும் சரிபார்க்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. உள்ளூர் வாகனங்களால் வேகம் பாதிக்கக் கூடாது அதிவேக நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்கள், உள்ளூர் போக்குவரத்து அல்லது குறுக்குச் சாலை போக்குவரத்தால் வேகம் குறையாமல் செல்லும் வகையில் அணுகல் வசதிகள் திட்டமிடப்பட வேண்டும். அதிவேக நெடுஞ்சாலையில் எந்தவொரு சாலையும் நேரடியாகச் சந்திக்கும் வகையிலான சந்திப்புகள் இருக்கக் கூடாது. நெடுஞ்சாலைக்குள் நுழையவும், வெளியேறவும் முறையாக வடிவமைக்கப்பட்ட ரேம்புகள் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட கனரக விவசாய இயந்திரங்கள் அதிகமாக இயக்கப்படும் பகுதிகளில், கீழ்ப்பாதைகளின் உயரத்தை 4.50 மீட்டர் வரை அமைக்கலாம் என புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில், அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும். இந்தச் சாலைகளுடன் வடிகால் மற்றும் நடைபாதை வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். வெளியேறும் பாதைக்கு முன்கூட்டியே அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு வெளியேறும் பாதை குறித்த தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கும் வகையில் சாலை குறியீடுகளுக்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி வெளியேறும் இடத்துக்கு 5 கி.மீ. மற்றும் 2 கி.மீ. முன்பாக முழு அகல மேல்நிலைப் பலகைகள் அமைக்க வேண்டும். அதேபோல், 1 கி.மீ. மற்றும் 500 மீட்டர் முன்பாக திசை குறித்த முன் அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். சாலை வழித்தடக் குறியீடுகள் மற்றும் பிற குறியீடுகள் 150 மி.மீ. அகலத்திலும், சாலையின் ஓரத்தைக் குறிக்கும் கோடுகள் 200 மி.மீ. அகலத்திலும் இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தடையில்லா சுங்க வசூலுக்கு ஏற்ப கட்டமைப்பு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது வாகனங்கள் சுங்கச்சாவடியில் நின்று பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லாத தடையற்ற சுங்க வசூல் முறைக்கு (MLFF) மாறி வருகிறது. இதற்கேற்ப எதிர்கால அதிவேக நெடுஞ்சாலைகளின் திட்ட வடிவமைப்பிலேயே இந்த வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியற்ற நுழைவுகளைத் தடுக்கும் வகையில், சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பின் வெளிப்புற எல்லையில் 1 மீட்டர் உயர ஆர்.சி.சி (RCC) கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். அதிவேக நெடுஞ்சாலைகளின் நடுப்பகுதியில் (Median) நடப்படும் செடிகளுக்கு தண்ணீர் வழங்க சொட்டு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், மரக்கன்றுகள் நடுவது திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலேயே சேர்க்கப்பட வேண்டும், என புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இதன் மூலம், நாட்டில் அடுத்த கட்டமாக உருவாக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளில் சாலை அகலம் முதல் போக்குவரத்து கணக்கீடு, பாதுகாப்பு, சுங்க வசூல், சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால விரிவாக்கம் வரை பல அம்சங்களுக்கும் ஒரே மாதிரியான தரநிலைகளை பின்பற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
இந்தியாவின் அதிவேக சாலைகள் இனி 4 வழியா? 6 வழியா? புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk