மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இந்திய பொறியியல் சேவை தேர்வு 2026க்கான அறிவிப்பு வெளியீடு; 480 பணியிடங்கள்; பொறியியல் படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), இந்திய பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிக்கான தேர்வுகளை நடத்துவதைப் போல் ஆண்டுதோறும் இந்திய பொறியியல் சேவை பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது 480 பொறியியல் சேவை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி. 06.10.2026 இந்திய பொறியியல் சேவை (INDIAN ENGINEERING SERVICES) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 480 கல்வித் தகுதி: சிவில் (Civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் (Electrical), எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் (Electronics & Communication) ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு (பி.இ அல்லது பி.டெக்) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.01.2027 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் இராணுவத்தினர் (EXSM) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2026 ஆகும். தகுதியுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. இருப்பினும் பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
UPSC IES 2026: இந்திய பொறியியல் சேவை தேர்வு; 480 பணியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk