முடிவுக்கு வரும் வல்லரசுகளின் மோதல்: உலக நாடுகளுக்கு சீனா கொடுத்த அதிர்ச்சி! இந்தியாவுக்கு சிக்கலா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
முடிவுக்கு வரும் வல்லரசுகளின் மோதல்: உலக நாடுகளுக்கு சீனா கொடுத்த அதிர்ச்சி! இந்தியாவுக்கு சிக்கலா?

சீனா–அமெரிக்கா இடையேயான நீண்டகால மோதலை முடிவுக்கு கொண்டு வர ஜி ஜின்பிங், டிரம்ப் சந்திப்பு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இரு வல்லரசுகளும் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என்ற சீனாவின் முன்வைப்பு, இதை ஏற்ற டிரம்பின் நிலைப்பாடு உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவை நம்பிய இந்தியாவுக்கு இது புதிய தந்திர சிக்கலை உருவாக்குகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கம்யூனிஸ்ட் நாடான சோவியத் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் வல்லரசுகளாக உருவெடுத்தன. சுமார் 40 ஆண்டுகள் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்த பனிப்போர் 1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது. இதனால் உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா திகழ்ந்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மற்றொரு வல்லரசாக சோவியத்தின் இடத்தில் மற்றொரு கம்யூனிச நாடான சீனா உருவாகியுள்ளது. சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் சீனாவை கடுமையாக விமர்சித்து வந்தார். சீனாவுக்கு கூடுதல் வரிகளை விதித்த டிரம்ப், சீன நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரிகளை விதித்தது. இந்த சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்தித்து பேசவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்துப் பேசுவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றிருந்தார். அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமான நிலையத்துக்கே நேரில் சென்று வரவேற்றார். 1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் வெளிநாட்டுத் தலைவரை விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வரவேற்பது இதுவே முதல் முறை என்பதால் இது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து இருவரும் விமான நிலையத்திலேயே சிறிது நேரம் உரையாற்றிய நிலையில், அது குறித்த விவரங்களை சீன அரசின் செய்தி நிறுவனமான 'சின்ஹுவா' (Xinhua) வெளியிட்டுள்ளது. அதில் சீனாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவோ அல்லது போட்டியாளர்களாகவோ (Rivals) இல்லாமல், கூட்டாளிகளாகவே (Partners) இருக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் ட்ரம்பிடம் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தை டிரம்ப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இருவரும் இன்று சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர். அதில் பல்வேறு முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. US President Donald Trump welcomed Chinese President Xi Jinping to Washington for a three-day visit where the superpowers' tensions over trade, technology and Tehran will play out against a backdrop of pomp and ceremony https://t.co/cyNjpzpPiz pic.twitter.com/BkHpaYSLnM இதனிடைய சீன அதிபரின் கருத்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்துவந்த மோதலில் சில நாடுகள் அமெரிக்காவுக்கும், சில நாடுகள் சீனாவுக்கும் ஆதரவாக செயல்பட்டு வந்தன. இந்த சூழலில் அமெரிக்காவும் சீனாவும் பகையை மறந்து கூட்டாளியாக மாறும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் மாறுவது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு நிலவி வரும் நிலையில், சீனா பாகிஸ்தானுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட குவாட் ராணுவ அமைப்பிலும் இணைந்துள்ளது. இந்த சூழலில் சீனாவும் அமெரிக்காவும் நெருங்கி வருவது இந்தியாவின் நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை