ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை முடித்து மறைத்தது திமுக தான் என முதலமைச்சர் விஜய் சாடிய நிலையில், ஆகஸ்ட் 19-ல் வழக்கை மூட வாதிட்டதே த.வெ.க அரசு வழக்கறிஞர் தான் என நீதிமன்ற உத்தரவு நகல்களுடன் தி.மு.க எம்.பி வழக்கறிஞர் வில்சன் பதிலடி கொடுத்துள்ளார். மே 2026-ல் உள்துறையைப் பொறுப்பேற்ற விஜய், ஆகஸ்ட் 18 வரை வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆகஸ்ட் 19-இல் வழக்கை மூடி வைக்க அரசு வழக்கறிஞரே வாதிட்ட நிலையில் போக்சோ நீதிபதி தான் மேல்விசாரணைக்கு உத்தரவிட்டார் என்றும் வில்சன் சாடியுள்ளார். மதுராந்தகம் பிரச்சாரத்தில் ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக அரசு மூடி மறைத்துவிட்டதாக முதலமைச்சர் விஜய் கடுமையாகச் சாடிய நிலையில், அவருக்கு தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். மே 2026-ல் உள்துறையைப் பொறுப்பேற்ற விஜய், ஆகஸ்ட் 18 வரை வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆகஸ்ட் 19-இல் வழக்கை மூடி வைக்க அரசு வழக்கறிஞரே வாதிட்ட நிலையில் போக்சோ நீதிபதி தான் மேல்விசாரணைக்கு உத்தரவிட்டார் என்றும் வில்சன் சாடியுள்ளார். மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இங்கே இன்னொரு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். நம்முடைய தமிழ்நாட்டு இளம் பெண்களை பச்சைப் பிள்ளைகளை ஒருத்தன் இத்தனை வருடங்களாக சீரழித்துக் கொண்டிருந்தான். அந்த வழக்கு போன தி.மு.க ஆட்சியில் வந்தும் அந்த வழக்கை அந்த அத்தியாயத்தை அந்த வழக்கின் வரலாற்றையே மூடி மறைத்து விட்டார்கள். இதற்காக உள்ளுக்குள்ளே என்ன டீலிங் நடந்தது. தமிழ்நாடே கேட்கிறது, வாயை திறங்கள் சார், ஸ்டாலின் சார் வாயை திறங்கள். உங்களோடு சேர்ந்து அந்த மற்றும் பலரும் வாயை திறக்காமல் இருக்கிறார்கள். இதில் கூடவா கூட்டு, இதுல கூடவா கூட்டு சேர்ந்து கொண்டு வாய் திறக்காமல் இருப்பீர்கள். என்னமோ இவர்கள் பெண்கள் பாதுகாப்புக்கு என்றே பிறந்த மாதிரி, இந்த தி.மு.க-வும் இந்த மற்றும் பலரும் பேசுகிறார்கள். இப்போது அவனைப் பற்றியும் வாயை திறக்கவில்லை. அந்த ஆளைப் பற்றியும் வாய் திறக்கவில்லை. இத்தனை வருடமாக மூடி மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தை விஜய் வந்தவுடன் தோண்டி எடுத்து அந்த நபரை உள்ளே தூக்கி வைத்து விட்டான். அந்த அதிர்ச்சியில் வாயைத் திறக்க திறக்காமல் இருக்கிறீர்களோ என்று எனக்கு தெரியவில்லை. எல்லாமே அவர்கள் பச்ச பிள்ளைகள், அவர்களுடைய வலியைப் பற்றி வெளியில வந்து பேச முடியவில்லை என்றால் அப்புறம் நீங்கள் என்ன அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தனை வருஷமாக நீங்கள் என்ன அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், அதனால் மக்களே இந்த இடைத்தேர்தலில் இந்த தீய சக்திக்கு மற்றும் பலருக்கும் சரியான ஒரு பாடம் புகட்டியாக வேண்டும்” என்று விஜய் தி.மு.க-வையும் மு.க.ஸ்டாலினையும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு, 'வீர வசனம் வேண்டாம் முதல்வர் விஜய், ஆகஸ்ட் 19-ம் தேதி வீரமணி வழக்கை முடித்து வைக்க வாதாடியது உங்க அரசு வழக்கறிஞர் தான்” என்று கூறி ஆதாரங்களுடன் எக்ஸ் தளத்தில் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். Corrigendum: The order of the Ld. POSCO Special Court is dated 19.6.2026 as shown in the web copy of the order. The certified copy issued by the Court contains a typographical error on the date as 19.10.2026.I have attached the entire copy of the certified copy of the order… https://t.co/VhvJGUpTrEpic.twitter.com/ugeDloYeR6 இது தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், எழும்பூர் விபச்சார தடுப்பு பிரிவு காவல் உதவி ஆணையர் யாஸ்மின் 25.11.2025-ல் தாக்கல் செய்த விசாரணை முடிப்பு அறிக்கையின் நகலையும், சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதி 19.10.2026-ல் பிறப்பித்த உத்தரவின் நகலையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பதிவிட்டிருப்பதாவது: “முதலமைச்சர் விஜய் இன்றைய தமது தேர்தல் பிரச்சார உரையில் ஜெம் கிரானைட் வீரமணியின் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கொடூரங்கள் தொடர்பான வழக்கு தி.மு.க ஆட்சிக் காலத்தில் முடித்து வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். எந்தவொரு குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேபோல, கடமையைச் செய்யத் தவறிய எந்தவொரு காவல்துறை அதிகாரியும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய அந்தப் போலிஸ் அறிக்கை 20.2.2026-ல் மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் மாஜிஸ்திரேட்டை அணுகலாம் என்ற நிபந்தனையுடன் தான் அது வழங்கப்பட்டது. இருப்பினும், முதலமைச்சர் விஜய் உள்துறை அமைச்சகத்தின் தலைவராக மே 2026-ல் பொறுப்பேற்ற பிறகு, ஆகஸ்ட் 18, 2026 வரை, அந்தச் சர்ச்சைக்குரிய போலிஸ் அறிக்கையைத் திரும்பப் பெறவோ அல்லது மேல்விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்யவோ இல்லையே ஏன்? முதலமைச்சர் விஜய் சார், 19.08.2026 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை முடித்து வைக்க வேண்டுமென்று உங்கள் அரசு வழக்கறிஞர் மட்டுமே வாதிட்டார்; ஆனால், அந்த வாதங்களை போக்சோ நீதிமன்ற நீதிபதி ஏற்கவில்லை. போக்சோ நீதிபதி மட்டுமே 4 வாரங்களுக்குள் மேல்விசாரணை நடத்த உத்தரவிட்டார். எனவே இதற்காக நீங்கள் எந்த ஒரு பெரிய காரியத்தையும் செய்துவிடவில்லை என்பதால், இதற்குச் சொந்தம் கொண்டாடவோ அல்லது இதை அரசியலாக்கவோ வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாப்பக்கப்பட வேண்டும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தேவையில்லாமல் வீர வசனம் பேச வேண்டாம்” என்று வில்சன் காட்டமாக பதிவிட்டுள்ளார். ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி (84) சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 2025-ல் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வீடியோ அடங்கிய பென் டிரைவ் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லையெனக் கூறி காவல்துறையினர் தொடக்கத்தில் இவ்வழக்கை முடித்து வைக்க முயன்றனர். ஆனால், 2026 ஆகஸ்ட் 19-ல் சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேல்விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 29, 2026 அன்று வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் பல சிறுமிகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டது கண்டறியப்பட்டு, இதுவரை 7-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வழக்கை மேலும் விரிவாக விசாரிக்கத் தமிழகக் காவல் துறை கூடுதல் ஆணையர் பி.சி. தேன்மொழி தலைமையில் 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்துள்ளது. மேலும், 2024-இலேயே இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், வீரமணியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 9 வரை நீட்டிக்கப்பட்டு, பணப் பரிவர்த்தனைகள் மற்றும் காவல் துறை தரப்பில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்தும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'வீர வசனம் வேண்டாம் முதல்வரே; ஆக. 19-ம் தேதி வீரமணி வழக்கை முடித்து வைக்க வாதாடியது உங்க அரசு வழக்கறிஞர் தான்': தி.மு.க எம்.பி வில்சன் வெளியிட்ட ஆதாரம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk