விஜய் அரசும் வீரமணி வழக்கை மூடிவிட முயற்சி செய்தது: மார்க்சிஸ்ட் சண்முகம் குற்றச்சாட்டு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️
விஜய் அரசும் வீரமணி வழக்கை மூடிவிட முயற்சி செய்தது: மார்க்சிஸ்ட் சண்முகம் குற்றச்சாட்டு

ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் அ.தி.மு.க, தி.மு.க, த.வெ.க ஆகிய மூன்று கட்சிகளுக்குமே உண்மையை வெளிக்கொண்டுவர ஆர்வமில்லை என்றும், உயர் நீதிமன்ற மேற்பார்வையில் நேர்மையான அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், "கடந்த ஆகஸ்ட் 19-ல் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கை முடித்துக் கொள்ளவே த.வெ.க அரசு முயன்றது; நீதிபதியின் உத்தரவாலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டியதோடு, வழக்கில் தொடர்புடைய ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கை தீவிரமாக விசாரித்து, அதற்குத் துணைபோன அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், "கடந்த ஆகஸ்ட் 19-ல் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கை முடித்துக் கொள்ளவே த.வெ.க அரசு முயன்றது; நீதிபதியின் உத்தரவாலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டியதோடு, வழக்கில் தொடர்புடைய ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் விரிவான விசாரணை நடத்தி, துணைபோன அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் சி.பி.எம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (25.09.2026) நடைபெற்றது. ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் விரிவான விசாரணை நடத்தி, துணைபோன அனைவரையும் கைது செய்யக்கோரி சென்னையில் #CPIM ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்கள் சந்திப்பு! More: https://t.co/LX2bxeIsT5pic.twitter.com/xFcDV7WmEP இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளளிடம் பேசிய சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: “செம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான குழந்தைகளை அவர்கள் இத்தகைய பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள், இது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாபெரும் குற்றத்தை மூடி மறைப்பதற்கு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும் முயற்சித்தார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தோண்ட தோண்ட பூதம் வருவதைப் போல தினந்தோறும் புதிய புதிய விவரங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் புதிய புதிய நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற செய்திகள் எல்லாம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதில் இன்னும் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், எவ்வளவு பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும். இப்போதும் இந்த விஷயம் வெளியே வந்திருப்பது என்பது போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பத்மா சண்முகசுந்தரம் உத்தரவின் காரணமாக தான் இப்போது இந்த பிரச்னை வெளி உலகத்திற்கு வந்து, இப்போது இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது. த.வெ.க-வைச் சார்ந்தவர்கள் அல்லது தமிழக அரசு ஏதோ தானாகவே முன்வந்து இந்த பிரச்னைகளை எல்லாம், இந்த வழக்கை நேர்மையான முறையில் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக முயற்சிக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் இப்போது இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கை என்பது இந்த வழக்கை முடித்துக் கொள்வது என்கிற முறையில் தான் காவல்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆகவே இந்த வழக்கில் த.வெ.க ஆட்சியைச் சார்ந்தவர்கள் தங்களால் தான் இந்த வழக்கு இந்த அளவுக்கு தீவிரப்படுத்தப்படுகிறது என்று சொல்வதற்கான எந்த அடிப்படையும் இல்லை என்பதை முதலில் நான் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். ஆகவே, இந்த வழக்கு தீவிரப்படுத்தப்படுவதற்கும் பலர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கும் அடிப்படையாக இருப்பது என்பது நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி தான் இதற்கு அடிப்படையான காரணம் என்று நான் திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன். இரண்டாவது இது 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கில் காவல்துறையிடம் பலமுறை புகார் செய்யப்பட்டு ஒவ்வொரு முறையும் அந்த புகாரை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், தொடர்ந்து அந்த குற்றவாளிகள் குற்றத்தை செய்வதற்கும் மேலும் மேலும் புதிய புதிய நபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபடுவதற்குமான முறையில் தமிழக காவல்துறையின் காவல்துறை உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவோடு தான் இந்த குற்றவாளிகள் தப்பித்து இருக்கிறார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். ஆகவே, அ.தி.மு.க அரசு, தி.மு.க ஆட்சி, இப்போது த.வெ.க ஆட்சி உட்பட இந்த வழக்கை அவர்கள் முறையாக விசாரிப்பதற்காக எந்தவிதமான ஆர்வமும் இந்த மூன்று கட்சிகளுக்குமே கிடையாது. காவல்துறை உயர் அதிகாரிகள் அருண் ஐ.பி.எஸ், கண்ணன் ஐ.பி.எஸ், யாஸ்மின் உதவி காவல் ஆணையர் உட்பட பல அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த குற்றத்தில் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்கிற அடிப்படையில் தான் அவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அதையே அதிகாரத்தில் தொடர்வார்கள் என்று சொன்னால் சாட்சிகளை கலைக்கவும் ஆதார ஆவணங்களை அழிப்பதற்கும் அவர்களுக்கு எல்லா விதமான வாய்ப்புகளும் இருக்கிறது. ஆகவே இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று இப்போது விசாரணை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய விசாரணை குழுவின் மூலமாக ஆரம்ப ஆதாரங்கள் இருக்கிறது என்ற அடிப்படையில் தான் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். ஆகவே, அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இரண்டாவது இது தொடர்ச்சியாக நடந்திருக்கிற குற்றம் என்கிற முறையில், பல பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், பல காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், பல புரோக்கர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வரக்கூடிய நிலையில் வழக்கமான காவல் துறை மூலமாக இந்த விசாரணை நடத்துவது என்பது இந்த வழக்கை விரைவாக விசாரிப்பதற்கோ முழுமையாக அனைத்து குற்றவாளிகளையும் இந்த விசாரணை வளையத்திற்கு கொண்டு வருவதற்கோ உதவியாக இருக்காது. ஆகவே உயர்நீதிமன்றத்தினுடைய மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்த விரும்புகிறேன். அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் நேர்மையான அதிகாரிகள் இடம் பெற வேண்டும். உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் அடிப்படையில் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் எவ்வளவு பெரிய உயர் அதிகாரியாக இருந்தாலும் எவ்வளவு பெரிய முதலாளிகளாக இருந்தாலும் அனைவரும் கட்டாயமாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்படுகிற வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த பிரச்சனையில் உறுதியாக போராடும்” என்று பி.சண்முகம் கூறினார். ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி (84) சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 2025-ல் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வீடியோ அடங்கிய பென் டிரைவ் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லையெனக் கூறி காவல்துறையினர் தொடக்கத்தில் இவ்வழக்கை முடித்து வைக்க முயன்றனர். ஆனால், 2026 ஆகஸ்ட் 19-ல் சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேல்விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 29, 2026 அன்று வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் பல சிறுமிகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டது கண்டறியப்பட்டு, இதுவரை 7-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வழக்கை மேலும் விரிவாக விசாரிக்கத் தமிழகக் காவல் துறை கூடுதல் ஆணையர் பி.சி. தேன்மொழி தலைமையில் 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்துள்ளது. மேலும், 2024-இலேயே இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், வீரமணியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 9 வரை நீட்டிக்கப்பட்டு, பணப் பரிவர்த்தனைகள் மற்றும் காவல் துறை தரப்பில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்தும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை