பால் இல்லாமல் தயாரிக்கப்படும் அனலாக் பனீரை 'பனீர்' பெயரில் விற்க தடை.. கட்டுப்பாடு விதித்த FSSAI!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
பால் இல்லாமல் தயாரிக்கப்படும் அனலாக் பனீரை 'பனீர்' பெயரில் விற்க தடை.. கட்டுப்பாடு விதித்த FSSAI!

செய்தியாளர்: துர்கா தேவி ச பால் மூலம் தயாரிக்கப்படாத எந்தச் செயற்கைப் பொருட்களையும் பனீர் என விற்பனை செய்யக்கூடாது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) செப்டம்பர் 21 அன்று புதிய வரைவு விதியை வெளியிட்டுள்ளது. டெய்ரி அனலாக் பிரிவின்கீழ் பதிவு செய்த அனலாக் பனீரை, ’பனீர்’ என விற்பனை செய்யக்கூடாது என்றும், தங்களது லேபிள்கள், விளம்பரங்களிலும் பனீர் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்றும் FSSAI தெரிவித்துள்ளது. பொருளின் தன்மை மற்றும் கலவை குறித்து நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என இந்த திருத்தம் முன்மொழியப்பட்டிருக்கிறது. உண்மையான பனீர், பால், எலுமிச்சை அல்லது வினிகர் மூலம் தயாரிக்கப்படும். அனலாக் பனீர் எனக் குறிப்பிடப்படும் செயற்கையாகத் தயாரிக்கப்படும் பனீர், பாலுக்குப் பதிலாக பால் பவுடர், தாவர எண்ணெய்/கொழுப்பு, மாவுசத்து, எமல்சிஃபையர்கள் மற்றும் பல செயற்கை கலவைகளால் பனீர் போன்ற தோற்றத்தையும் அமைப்பையும் கொண்டு உருவாகிறது. உண்மையான பனீரில் பாலில் இருக்கும் புரதம், கொழுப்பு மற்றும் பிற சத்துக்கள் அடங்கியிருக்கும். அனலாக் பனீரில், பிராண்டுக்குப் பிராண்ட் மாறும்போது, அதன் புரதத் தரம், கொழுப்பு வகை போன்றவை மாறுபடும். இதில் கால்சியம், புரதம் போன்ற மற்ற சத்துக்களும் குறைவாகவே இருக்கும். நுகர்வோர் எந்த உணவுப் பொருட்களையும் வாங்கும்போது கவனமாக அதன் தன்மை, கலவைப் பொருட்கள் மற்றும் காலாவதி தேதி பார்த்து வாங்குவது அவசியமான ஒன்றாகும். அதேபோல், உண்மையான பனீர் மற்றும் அனலாக் பனீரின் வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். உண்மையான பனீர், நம் விரல் இடுக்குகளிலோ அல்லது சமைக்கும்போது உடைந்துவிடும். ஆனால், அனலாக் பனீர் அதன் தன்மை மாறாமல் ஒட்டிக்கொண்டே நிலையாக இருக்கும். சந்தைகளில், உண்மையான பனீரின் விலை கிலோ ரூ. 450 வரை இருக்கும். ஆனால் அனலாக் பனீர் கிலோ ரூ.120தான். இதனால், உணவகங்களில் இந்த பனீர் பெரும்பாலும் விற்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பொதுமக்கள் பனீர் போன்ற பால் பொருட்களை வாங்கும்போது, அதன் லேபிள்களைக் கவனமாகப் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தற்போது, FSSAI வெளியிட்டுள்ள இந்த திருத்த வரைவு விதி குறித்து பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் தங்களின் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் 60 நாட்களுக்குள் FSSAI-க்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை