பொதுமக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறி, அந்தப் பகுதியில் குட்டை தூர்வாரும் பணியைத் தொடங்குவதற்காக சூலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.என். சுகுமார் வருகை தந்தார் பூமி பூஜையின்போது தள்ளுமுள்ளு: தவெக எம்.எல்.ஏ சுகுமார் மீது பொதுமக்கள் தாக்குதல்! கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், தவெக எம்.எல்.ஏ எம்.என். சுகுமார் மீது பொதுமக்கள் கல்வீசியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குட்டையைத் தூர்வாரி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்புவதற்கு அப்பகுதி மக்கள் ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்து தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர். பொதுமக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறி, அந்தப் பகுதியில் குட்டை தூர்வாரும் பணியைத் தொடங்குவதற்காக சூலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.என். சுகுமார் வருகை தந்தார். அவரை வழிமறித்த அப்பகுதி பொதுமக்கள், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து அவரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ உடன் வந்த கட்சியினரின் முன்னிலையில் அவர் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை நிறைவேற்றினார். கோவை சூலூர் அருகே கழிவுநீர் நிரப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தூர்வார வந்த தவெக எம்.எல்.ஏ சுகுமார் மீது கல்வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. pic.twitter.com/LS5XvlpVBT பூமி பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும் எம்.எல்.ஏ தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. அந்தச் சமயத்தில் திடீரெனக் கூட்டத்திலிருந்து எம்.எல்.ஏ மீது கல் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. மக்களின் அடிப்படை எதிர்ப்பை மீறி நடைபெற்ற இந்த நிகழ்வு அப்பகுதியில் தற்பொழுது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
கழிவுநீர் நிரப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு: சூலூர் த.வெ.க. எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் கல்வீச்சு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk