பூதாகரமாகும் SIR விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே எதிர்ப்பு? மறுதேர்தல் கோரும் எதிர்க்கட்சிகள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
பூதாகரமாகும் SIR விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே எதிர்ப்பு? மறுதேர்தல் கோரும் எதிர்க்கட்சிகள்!

செய்தியாளர் - ராஜ்குமார்.ர வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்கள், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து பட்டியலைத் திருத்துவதற்காக Special Intensive Revision எனப்படும் SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படக்கூடும் என்றும், SIR நடைமுறையில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக இன்று வெளியான தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பெயர்களைச் சேர்ப்பது, நீக்குவது, மீண்டும் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் என்றும், இது அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த விவகாரத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். SIR மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை முன்வைத்து, மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதுமட்டுமின்றி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கைது மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இதேபோல், சிவசேனா யுபிடி தலைவர் உத்தவ் தாக்கரேவும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அந்தத் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டிலும் இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையர்கள் இருவர் 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியாகியிருக்கும் தகவல், SIR-க்கு பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்குவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும், அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், SIR நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றதாக கூறப்படும் அனைத்து விவகாரங்களையும் நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கிடையே, தேர்தல் ஆணையம் இன்று விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் உறுப்பினர்கள் தங்களது கருத்துகள், கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்வது வழக்கமான நடைமுறை என்றும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பான விவாதத்தின் ஒரு பகுதியாகவே இவை இருப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மூன்று தேர்தல் ஆணையர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இருப்பது இயல்பானது என்றும், கடந்த ஓராண்டில் SIR உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ முடிவுகளும் முழு தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளாகவே எடுக்கப்பட்டதாகவும் ECI தெரிவித்துள்ளது. அனைத்து உத்தரவுகளும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஒருபுறம், தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே SIR தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்ததாக வெளியாகியிருக்கும் தகவலை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மறு தேர்தல் கோரிக்கை எழுப்பி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை