தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இச்சம்பவம் தெலங்கானா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (BRS)அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 'மிதுனா ஆட்ஸ்' (Mithuna Ads) நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான கே. ஷோபா ரெட்டி, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர், தெலங்கானாவில் வெளிப்புற விளம்பர (Outdoor Advertising) வணிகம் தொடர்பான தனது நிறுவனத்தின் திட்டங்களை முன்வைக்கச் சென்றபோது, முதல்வருக்கு நெருக்கமான உதவியாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், விவாதங்களுக்காகத் தனியார் விருந்தினர் இல்லத்திற்கு (Guest House) வருமாறு அழைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். @revanth_anumula @TelanganaCMO CM Sir Please help me 🙏 pic.twitter.com/ffytZXCQef மேலும் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியைத் tag செய்து பதிவிட்ட அவர், ஒரு பெண் தொழிலதிபராக சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்புகளை அணுகும்போது இத்தகைய அணுகுமுறைகள் மிகுந்த மன உளைச்சலையும் அசௌகரியத்தையும் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க விவகாரங்களும் டெண்டர் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தனிப்பட்ட விருந்தினர் இல்லங்களில் அல்லாமல், முறையான, வெளிப்படையான மற்றும் கண்ணியமான அரசு அலுவலக வழிகளில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தெலங்கானா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (BRS)அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
"கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்தார்.." தெலங்கானா முதல்வரின் உதவியாளர் மீது பெண் தொழிலதிபர் குற்றச்சாட்டு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk