நீலகிரியில் மனிதர்களை கொன்ற புலியை பிடிக்க யானைகள் அழைத்து வரப்பட்டது ஏன்?

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
நீலகிரியில் மனிதர்களை கொன்ற புலியை பிடிக்க யானைகள் அழைத்து வரப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், TNFD தமிழ்நாட்டில் நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் காட்டு யானைகளைப் பிடிக்க கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படுவதைப் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் மனிதர்களைத் தாக்கிக் கொன்ற ஒரு புலி பிடிப்பதற்கு கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படுவது பலரும் அறிந்திராத ஒன்று. சமீபத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். இந்தப் புலி 28 நாட்கள் கழித்து பிடிக்கப்பட்டது. புலிகளைத் தேடும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. இதற்காக தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து பொம்மன், உதயன், சீனிவாசன், கிரி ஆகிய நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன மனிதர்களைக் கொல்லும் புலிகள் 'ஆட்கொல்லி புலி' என்று பரவலாக அழைக்கப்படுகிறது. ஆனால் சட்டத்தில் அப்படியொரு வகைப்பாடு இல்லை என்கிறார் கூடலூர் மாவட்ட வன அலுவலரான தேவராஜ். மனிதர்களைக் கொல்லும் அனைத்து புலிகளும் பிடிக்கப்படுவதில்லை என்கிறார் தேவராஜ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மனித - விலங்கு மோதலில் புலிகள் பெரும்பாலும் தற்காப்புக்காகவே மனிதர்களைத் தாக்கும். புலிகளின் வயது மற்றும் நடத்தையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். முதல்முறை மனிதரைத் தாக்கும் சம்பவம் விபத்தாக விபத்தாக இருக்கலாம்'' என்கிறார். பட மூலாதாரம், TNFD ''அதனால் மனிதர்களைக் கொல்லும் அனைத்து புலிகளும் பிடிக்கப்படுவதில்லை. அதே வேளையில் அதிக அளவிலான மனிதர்கள் அல்லது கால்நடைகளைத் தொடர்ந்து தாக்குவது, ஒரே இடத்தில் பலரையும் தாக்குவது, மனிதர்களை இரையாகப் பார்க்கத் தொடங்குவது போன்ற காரணங்களின் அடிப்படையில் புலிகளைப் பிடிப்பது தீர்மானிக்கப்படுகிறது," என்றார் தேவராஜ். கூடலூரில் இந்தப் புலி ஒரே இடத்தில் இருவரைத் தாக்கிக் கொன்றதன் அடிப்படையிலும் பல்வேறு அறிவியல் சான்றுகள் மூலமும் அது மனிதர்களைக் கொல்ல பழகியது என்று நிறுவப்பட்டு அதனைப் பிடிக்க முடிவு செய்யப்பட்டது என்று கூறும் அவர், இவை 'மோதலில் சிக்கிய விலங்குகள் என வகைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், TNFD பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு புலிகளைப் பிடிப்பதற்கு வெவ்வேறு வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ். தொடர்ந்து பேசிய அவர், "முதலில் கூண்டில் பொறி வைத்து பிடிப்பது, இரண்டாவது மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பது என இவை இரண்டும்தான் பரவலாக உள்ளன. புலி சிக்கவே இல்லை மற்றும் மனிதர்களைத் தாக்குவது தொடர்ந்து நடைபெற்றால் இறுதியாகத்தான் புலியைச் சுட்டிப்பிடிப்பதற்கு முடிவு எடுக்கப்படும். ஆனால் அவை மிகவும் அரிதான நிகழ்வே. புலிகளைப் பிடிக்க காடுகளில் கூண்டு வைக்கப்படும். ஆனால் மயக்க ஊசியை நேரடியாக மட்டுமே செலுத்த முடியும். அதனை கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அலுவலர்கள்தான் மேற்கொள்வார்கள். இங்குதான் கும்கி யானைகளின் பங்களிப்பு முக்கியமாகிறது." அவரது கூற்றுப்படி, புலிகளை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முதலில் அவற்றை தெளிவாக கண்டறிய வேண்டும். புலிகள் நடமாடும் கடினமான மற்றும் புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்குள் மனிதர்கள் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபடுவது கடினம். அதனால் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. "கூடலூர் என்பது உயரமான மற்றும் அடர்ந்த புற்கள் நிறைந்த காட்டுப்பகுதி. அதனால் இங்கு நடந்தோ அல்லது வாகனத்தின் மூலமோ கண்காணிப்பில் ஈடுபடுவதும் புலிகளை கண்டறிவதும் கடினம். இது போன்ற இடங்களில் யானைகளால் எளிதில் செல்ல முடியும். பாதுகாப்பான சூழலில் இருந்து புலியின் இடத்தை அடையாளம் காணவும் முடியும். கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தும் கருவிகளுடன் யானைகளின் மீது அமர்ந்து கொள்வார்கள். புலிகள் தென்பட்டால் உயரத்திலிருந்து மயக்க ஊசிகளைச் செலுத்தவும் உதவியாக இருக்கும்." என்றும் அவர் தெரிவித்தார். காட்டுப் பகுதிக்குள் புலியை அடையாளம் காண்பது கடினம் என்பதால் தான் புலியைப் பிடிப்பதற்கு நீண்ட நாட்கள் எடுத்ததாக கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் பிபிசி தமிழிடம் கூறினார். பட மூலாதாரம், TNFD கடந்த காலங்களில் கும்கி யானைகள் மீதிருந்து மயக்க ஊசி செலுத்தி புலிகள் பிடிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் ஊட்டி அரசு கலைக் கல்லுாரியின் காட்டுயிர் உயிரியல் துறைத்தலைவர் ராமகிருஷ்ணன். யானைகள் மீது செல்வது வனத்துறையினருக்கு பாதுகாப்பானது மட்டுமல்லாமல் புலிகளின் நடமாட்டத்தை யானைகளால் உணர்ந்து சரியாக வழிகாட்டவும் முடியும் என்று ராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு யானைகளால் செல்ல முடியும். அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிகளில் புலிகள் தாக்கும் ஆபத்தும் உள்ளது. அதனால் யானைகள் மீது செல்வது ஒரு விதத்தில் பாதுகாப்பான அணுகுமுறையும் கூட. இது வழக்கமான நடைமுறைதான்.'' என்றார் பட மூலாதாரம், Ramakrishnan ''கும்கி யானைகளால் கரடு முரடான வழித்தடத்திலும் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியும். யானைகளால் புலிகளின் நடமாட்டத்தை உணரவும் முடியும். யானைப் பாகன்கள் அதனை உணர்ந்து சரியான இடத்திற்கு வழிநடத்திச் செல்லவும் முடியும்." என்று கூறினார். காட்டுப் பகுதிகளில் புலிகள் மற்றும் யானைகளின் வாழ்க்கை முறையை விவரித்துப் பேசிய அவர், "தென்னிந்திய காடுகளில் இருக்கும் இருபெரும் விலங்கும் யானைகளும் புலிகளும் தான். இந்த இரண்டு விலங்குகளும் ஒரே நிலப்பரப்பில்தான் வாழ்கின்றன. ஆனால் இரண்டின் பாதைகளும் எங்கும் கடப்பதில்லை. காடுகளில் பெரும்பாலான சூழல்களில் புலிகள் தனியாகவும் யானைகள் கூட்டமாகவும் இயங்குகின்றன. பெரிய யானைகளைப் புலிகள் பெரிதாக தாக்குவதில்லை. ஆனால் ஆறு மாதம் வரையிலான இளம் யானைகளை புலிகள் வேட்டையாடும். சில சமயங்களில் யானைக் குட்டிகளை புலிகள் கொன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதனால் பெரிய யானைகள் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து பழக்கப்பட்டவை. புலிகள் தாக்க வந்தால் பெரிய யானைகள் அவற்றை விரட்டியடிக்கும். புலிகளின் இருப்பை யானைகளால் உணர முடியும். அதனால் தான் பயிற்சி பெற்ற கும்கி யானைகள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன." என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம், TNFD நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உள்பட்ட ஓவேலி வனச்சரகத்தில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் புலியைப் பிடிப்பதற்கான உத்தரவுகள் தமிழ்நாடு முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக் காப்பாளரால் பிறப்பிக்கப்பட்டன.புலியை பிடிக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டன. பட மூலாதாரம், TNFD வனத்துறை தரவுகளின்படி கூடலூர் சுற்றியுள்ள வனப்பகுதியில் 305 கண்காணிப்புக் கேமராக்களும், 13 பொறி கூண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. மேலும் மூன்று வெப்ப உணரி ட்ரோன்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக வனத்துறை தெரிவிக்கிறது. புலிகளைத் தேடி மயக்க ஊசி செலுத்தும் பணியில் ஈடுபட தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. "புலியின் நடமாட்டம் முதுமலை பகுதியில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கூடுதலாக ஒரு பொறி கூண்டு கூடலூர் எல்லை பகுதியான ஹலாலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக" கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியிட்ட வனத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு 2 நாட்கள் கழித்து செப்டம்பர் 18-ஆம் தேதி ஹலாலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் புலி ஒன்று சிக்கியது. இந்தப் புலி தான் சந்தேகிக்கப்படும் ஆட்கொல்லி புலியா என வனத்துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டது. பிடிபட்ட புலி 12 வயதுக்கு மேல் இருப்பதாகவும் அதனுடைய சிங்கப்பற்கள் தேய்மானம் அடைந்து இருப்பதாகவும் வனத்துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது. "உடல் நலிவுற்ற நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அதனை அடர்வனப்பகுதியில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரியவருகிறது. அதன் அடிப்படையில் புலியானது தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ மேலாண்மைக்காக சென்னை வண்டலூரில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை