மேயர் பிரியா மீதான தாக்குதல்களைத் தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை விஜய் ஏன் அனுமதிக்கிறார்? கனிமொழி எம்.பி கேள்வி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
மேயர் பிரியா மீதான தாக்குதல்களைத் தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை விஜய் ஏன் அனுமதிக்கிறார்? கனிமொழி எம்.பி கேள்வி

ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் அரசியலில் நுழைவதே சவாலானது. மேயர் பிரியா ராஜனுக்கு எதிராகத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கப்படும் சர்ச்சைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் – கனிமொழி எம்.பி தி.மு.க எம்.பி கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு எதிராகத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கப்படும் சர்ச்சைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை மேயர் பிரியா ராஜன் சமூக வலைதளங்களில் தான் குறிவைக்கப்படுவதாகவும், தான் முடி வெட்டிக் கொண்டது உட்பட தனது அனைத்து செயல்பாடுகளும் விமர்சிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், மேயர் பிரியாவுக்கு ஆதரவாக தி.மு.க எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மேயர் பிரியா மீதான சமூக வலைதள தாக்குதல் குறித்து முதல்வர் விஜயிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க எம்.பி கனிமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தொடர்ந்து விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கப்படக் கூடாது. ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் அரசியலில் நுழைவதே சவாலானது; ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அரசியலில் நுழைவது அதைவிடக் கடினமானது. இத்தகைய தடைகளைத் தகர்த்து முன்னேறும் பெண்களைக் குறிவைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேயர் பிரியா ராஜன் அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கப்படும் சர்ச்சைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். "எந்தப் பெண்ணைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசுவதை அனுமதிக்க மாட்டேன்" என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். அப்படியிருக்க, மேயர் பிரியா மீதான இத்தகைய தாக்குதல்களைத் தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை அவர் ஏன் அனுமதிக்கிறார்? இவ்வாறு கனிமொழி பதிவிட்டுள்ளார். Every choice made by women in public life shouldn't be met with constant scrutiny and mockery. Breaking into politics in a patriarchal society is tough enough; doing so from an oppressed community is even harder. Targeting women who push through these barriers is completely… https://t.co/vv6dqhQ9kX முன்னதாக மேயர் பிரியா சமூக வலைதள விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ஏன் எப்போதும் நான் மட்டுமே? நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது. முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகச் சாதாரண விஷயங்கள் கூட ஒரு பிரச்சினையாக மாற்றப்படுகின்றன. நான் ஒரு பர்கர் சாப்பிட்டால் அது பிரச்சினையாகிறது; தலைமுடியை வெட்டிக்கொண்டால் அதுவும் பிரச்சினையாகிறது. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதோடு, விமர்சனத்திற்கும் உள்ளாகிறது. நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலோதான் இப்படி நடக்கிறதோ என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை, பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்பவர்களும் எங்கே மறைந்துவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்குத் தகுதியற்றவர்களோ அல்ல. பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணை, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அதற்கே உரிய கண்ணியமும் சுயமரியாதையும், தனது வாழ்க்கையைத் தனது விருப்பப்படி அமைத்துக்கொள்ளும் உரிமையும் உண்டு. மேயர் என்ற பதவியைத் தாண்டி, அந்தப் பெண்ணையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு மேயர் பிரியா பதிவிட்டுள்ளார். Why is it always me?Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.Sometimes I… Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை