'பாஸ்.. நீங்க என்ன இந்தப் பக்கம்..' ஒயின்ஷாப்பில் மது அருந்திய குரங்கு.. படுத்துத் தூங்கிய சம்பவம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
'பாஸ்.. நீங்க என்ன இந்தப் பக்கம்..' ஒயின்ஷாப்பில் மது அருந்திய குரங்கு.. படுத்துத் தூங்கிய சம்பவம்!

செய்தியாளர் - ராஜ்குமார். ர ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம் ஓரமாஞ்சியில் உள்ள பிளாக் சௌக் பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைக்குள், நேற்று மாலை திடீரென ஒரு பெண் குரங்கு புகுந்ததாகத் சொல்லப்படுகிறது. கடைக்குள் குரங்கு வந்ததைப் பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அதனை வெளியேற்ற முயன்றுள்ளனர். ஆனால், குரங்கு அங்கிருந்து வெளியே செல்லாமல், கடைக்குள் இருந்த மதுபாட்டில் ஒன்றை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பாட்டிலில் இருந்த மதுவை குரங்கு குடித்துள்ளது. மது அருந்திய சிறிது நேரத்திலேயே, கடைக்குள்ளேயே படுத்து உறங்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வித்தியாசமான காட்சியைப் பார்ப்பதற்காக அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டுள்ளனர். குரங்கு கடைக்குள் படுத்துத் தூங்கும் காட்சிகளை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 🐒UNEXPECTED CUSTOMER!A monkey reportedly walked into a #WineShop in Ranchi’s Ormanjhi, drank from a bottle and then fell asleep inside. A rescue team later arrived and safely removed the unusual visitor. 😴 pic.twitter.com/tOJyAOSqDI குரங்கு தூங்கிக் கொண்டிருந்ததால் பிரச்னை முடிந்துவிட்டது என்று நினைத்தபோதுதான் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. சிறிது நேரத்துக்குப் பிறகு குரங்கு எழுந்த நிலையில், கடைக்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், அதனை வெளியேற்ற முயன்ற கடை ஊழியர் ஒருவரைக் கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், கடை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வனவிலங்கு மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்ததும், அருகில் உள்ள பிர்சா முண்டா உயிரியல் பூங்காவின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், குரங்கைப் பாதுகாப்பாகப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று மதுபாட்டிலை எடுத்து குடித்துவிட்டு அங்கேயே தூங்கியதாகக் கூறப்படும் சம்பவம், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை