கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி; விஜய் வருகையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் வரை காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. இந்த சம்பவம் நடைபெற்று நாளை 27 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சி.பி.ஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டாக்டர்கள், போலீசார், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரும் கரூர் சி.பி.ஐ அலுவலகத்திலும், தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ அலுவலகத்திலும் ஆஜராகினர். இவர்களை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அதனைத் தொடர்ந்து விஜய், மூன்று முறை விஜய், டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அதுபோல் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஒரு முறை டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இச்சம்பவத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள், பல்வேறு கட்சிகள் நிதி உதவி அளித்தனர். கடந்த ஓராண்டாக விசாரணை நடந்து வரும் இந்த வழக்கில், இப்போதுவரை சி.பி.ஐ குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.இந்நிலையில் இந்த துயர சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினர் பல்வேறு அரசியல் கட்சியினர் இறந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்க உள்ளனர். அதன்படி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் படத்திற்கு அஞ்சலி செய்யும் நிகழ்வு நாளை காலை கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெறவிருக்கிறது. இதற்கிடையே கரூரில் நடக்கும் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் பங்கேற்று நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டி 41 பேருக்கு மலரஞ்சலி செலுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பதவி ஏற்ற பின்னர் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி கரூருக்கு வந்தார். அப்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 31 பேருக்கு அரசு பணிகளுக்கான ஆணைகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசியபோது, கரூர் சம்பவத்தில் இறந்த 41 பேரின் நினைவாக வேலுசாமிபுரத்தில் ஒரு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்றும் கூறினார். ஆனால், இடைத்தேர்தலால் விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் விஜய்யின் வருகையை எதிர்பார்த்திருந்தனர் குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
கரூர் கூட்டநெரிசலில் இறந்த 41 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை முதலாம் ஆண்டு நினைவஞ்சலி; விஜய் வருகை இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk