நீட் பிஜி 2026 தேர்வின் தகுதிப் புள்ளி 262 மதிப்பெண்களாகக் குறைந்து கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளதுடன், முதல்முறையாக விடைக்குறிப்பும் வெளியிடப்படவுள்ளது. தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (NBEMS) நீட் பி. ஜி 2026 தேர்வு முடிவுகளை செப்டம்பர் 24 அன்று வெளியிட்டது. இதில் பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்(EWS) பிரிவினருக்கான தகுதிப் புள்ளி 262 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த தகுதிப் புள்ளியாகும். 2021 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான தரவுகளின்படி, கடந்த ஆண்டின் தகுதிப் புள்ளியான 276 உடன் ஒப்பிடும்போது இது 14 மதிப்பெண்கள் குறைவாகும். மேலும், இது 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் தகுதிப் புள்ளிகளான 291 மற்றும் 275 ஐ விடவும் குறைவாகும். இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் முடிவுகளில் தகுதிப் பெர்சண்டைல் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது, அதற்குரிய தகுதிப் புள்ளிகள் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஆண்டுகளைப் போலவே பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவினருக்கான தகுதிப் பெர்சண்டைல் 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் மாற்றுத்திறனாளி (PwBD) விண்ணப்பதாரர்களுக்கான தகுதிப் புள்ளி 45 ஆவது பெர்சண்டைலில் 244 மதிப்பெண்களாகவும், எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி( SC, ST, OBC) மற்றும் அவற்றில் உள்ள மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான தகுதிப் புள்ளி 40 ஆவது பெர்சண்டைலில் 226 மதிப்பெண்களாகவும் உள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். மதிப்பெண்கள் கிடைக்கப் பெற்றுள்ள மூன்று பிரிவுகளிலுமே இந்த வீழ்ச்சி தெளிவாகத் தெரிகிறது. பொது மற்றும்பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் முந்தைய ஆண்டை விட 14 மதிப்பெண்கள் குறைந்துள்ளது. பொது மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதிப் புள்ளி 255 இல் இருந்து 11 மதிப்பெண்கள் குறைந்து 244 ஆக மாறயுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி பிரிவினருக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 235 இல் இருந்து 9 மதிப்பெண்கள் குறைந்து 226 ஆகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்ட மொத்த மதிப்பெண்களில் செய்யப்பட்டுள்ள மாற்றத்திற்கு இடையே இந்தத் தகுதிப் புள்ளி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்டுள்ள முந்தைய ஆண்டுகளில் தேர்வு 800 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நிலையில், நீட் பிஜி 2026 தேர்வானது 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. தகுதிப் புள்ளிகள் மாறுவதற்குக் காரணங்கள் விண்ணப்பதாரர்களின் செயல்பாடு மற்றும் தேர்வு தொடர்பான பிற காரணிகளைப் பொறுத்து தகுதிப் புள்ளிகள் உயரவோ அல்லது குறையவோ கூடும். வினாத்தாளின் கடினத்தன்மை இதில் முக்கியக் காரணியாக விளங்வுகிறது. வினாத்தாள் எளிதாக இருக்கும் பட்சத்தில், அதிகமான விண்ணப்பதாரர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறக்கூடும், இது தகுதிப் புள்ளியை உயர்த்தும். வினாத்தாள் கடினமாக இருந்தால், சராசரி மதிப்பெண்கள் குறைந்து தகுதிப் புள்ளியும் கீழ இறங்கும். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையும் போட்டியைத் தீர்மானிக்கின்றன. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது போட்டி அதிகரிக்கிறது; அதேபோல் இடங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்களின் சேர்க்கையை மாற்றியமைக்கின்றன. எனினும், முந்தைய ஆண்டுகளில் கண்டது போல, கலந்தாய்வுச் சுற்றுகளுக்குப் பிறகு காலியாக இருக்கும் இடங்களின் அடிப்படையில், தகுதிப் புள்ளிகளைக் குறைக்கத் தேர்வு முகமை நடவடிக்கைகளை எடுக்க முடியும். முந்தைய ஆண்டுகளில் சில பிரிவினருக்குத் தகுதிப் புள்ளிகள் எதிர்மறை மதிப்பெண்களாகக் கூட பதிவாகியுள்ளன. முதல்முறையாக வெளியாகும் விடைக் குறிப்பு இந்த ஆண்டின் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக நீட் பிஜி தேர்வின் விடைக்குறிப்பு மற்றும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த பதில்கள் வெளியிடப்படவுள்ளன. தேர்வுச் செயல்பாட்டில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் இந்த விவரங்களை முதல்முறையாகக் கிடைக்கச் செய்யவுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் உள்நுழைவு பக்கத்தின் மூலம் கேள்வி ஐடி, சரியான விடை, தாங்கள் அளித்த விடை மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் அளிக்கப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றை அறிய முடியும். விடைக் குறிப்பு என்பது தேர்வு முடிவுகளில் இருந்து ஒரு தனிப்படியாகும். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட போதிலும், அக்டோபர் 1, 2026 அல்லது அதற்குப் பிறகு விடைக் குறிப்பு கிடைக்கப்பெறும் என்று தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் பி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முடிவுகள் வெளியான பிறகும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பதில்களை அதிகாரப்பூர்வ விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
நீட் பிஜி 2026: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த தகுதி மதிப்பெண்; என்.பி.இ தரவு வெளியீடு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk