அக்டோபர் மாதம் எந்த ஃபாரின் டெஸ்டினேஷனுக்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அக்டோபர் மாதம் இந்தியர்கள் செல்வதற்கு ஏற்ற நாடுகள் குறித்து பார்க்கலாம். இந்தியப் பயணிகளுக்கு அக்டோபர் மாதம் ஒரு சிறந்த காலகட்டமாகும். வானிலை குளிர்ந்து, பண்டிகைகள் வரிசைகட்டத் தொடங்குகின்றன. முழுமையான குளிர்காலம் தொடங்குவதற்கு முன் வெளிநாட்டுப் பயணம் செல்ல இதுவே சரியான நேரமாகும். அதிக செலவில்லாமல், அழகான மலைக் காட்சிகள், பழமையான கோயில்கள், கடற்கரையின் அழகிய சூரிய அஸ்தமனம் மற்றும் சுவையான உணவுகளை அனுபவிக்க குறைந்த செலவில் பயணம் செய்யக்கூடிய 5 இடங்கள் குறித்து பார்க்கலாம். முகநூலில் போட்ட பதிவு; இலங்கை தமிழருக்கு சவுதியில் மரண தண்டனை: இந்திய அரசு தலையிட இந்து முன்னணி கோரிக்கை இந்தியர்களுக்கு இங்கு செல்ல விசா தேவையில்லை. இலவச நுழைவு அனுமதி மற்றும் ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு சுமார் ரூ.1,200 நிலையான வளர்ச்சி கட்டணம் (Sustainable Development Fee) செலுத்தினால் போதுமானது. பார்க்க வேண்டிய இடங்கள்: பாரோ பள்ளத்தாக்கு (Paro Valley), டைகர்ஸ் நெஸ்ட் (Tiger's Nest) மலையேற்றம் மற்றும் திம்பூவின் உள்ளூர் சந்தைகள். குழுவாகப் பயணம் செய்வதும், உள்ளூர் வீடுகளில் தங்குவதும் செலவைக் கணிசமாக குறைக்கும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 30 நாட்கள் வரை விசா இல்லா நுழைவு வழங்கப்படுகிறது. இங்கு புக்கெட் கடற்கரைகள், பாங்காக்கின் கிராண்ட் பேலஸ் மற்றும் பட்டாயாவின் கடற்கரை பகுதிகளை நீங்கள் பார்த்து மகிழலாம். மேலும், பட்ஜெட் விடுதிகள் மற்றும் குறைந்த கட்டண விமானங்களைப் பயன்படுத்துவது பயணச் செலவைக் குறைக்க உதவும். மே 2026 முதல் இந்தியர்களுக்கான மின்னணு பயண அனுமதி (ETA) கட்டணத்தை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 30 நாட்கள் இந்தியர்கள் இலவசமாக தங்கலாம். மேலும் இலங்கையில் சிகிரியா பாறை, மிரிஸ்ஸா கடற்கரை மற்றும் எல்லா பகுதிக்கான இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணத்தை நீங்கள் அனுபவித்து மகிழலாம். குறுகிய தூரப் பயணங்களுக்கு டுக்-டுக் (Tuk-tuk) வாகனங்களைப் பயன்படுத்தலாம்; ரயில் பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது. பயணத்திற்கு முன் மின்- விசா பெற வேண்டும். இதன் கட்டணம் சுமார் ரூ. 2,398.39 ஆகும். இதில் 90 நாட்கள் வரை தங்க முடியும். வியர்நாமில் ஹனோயின் பழைய பகுதி , ஹாலோங் பே படகுச் சவாரி மற்றும் ஹோ சி மின் நகரின் கு சி சுரங்கங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்த்து மகிழலாம். நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு இரவு நேரப் பேருந்துகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தங்கும் விடுதி செலவு மிச்சமாகும். அங்கு சென்றடைந்தவுடன் எளிதாகப் பெறக்கூடிய விசா முறை நடைமுறையில் உள்ளது. உபுட் குரங்குகள் காடு, குடா கடற்கரையில் சர்ஃபிங் மற்றும் தனா லாட் கோயிலின் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை பார்த்து மகிழலாம். 'வாருங்' எனப்படும் உள்ளூர் சிறிய உணவகங்களில் சாப்பிடுவது, பட்ஜெட் வில்லாக்களில் தங்குவது மற்றும் ஸ்கூட்டர் வாடகைக்கு எடுத்து தீவைச் சுற்றிப் பார்ப்பது மிகவும் சிக்கனமானது ஆகும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Nagalekshmi Rajasekar is a Sub Editor at Indian Express Tamil, with five years of experience in the media industry. She brings strong editorial judgment and a people-centric approach to news storytelling, with a particular focus on international affairs and entertainment journalism. Experience: Since beginning her career in 2019, Nagalekshmi has worked across leading Tamil media organizations, steadily building expertise in content creation and news editing. Prior to joining Indian Express Tamil, she has contributed as a Content Writer at Maalaimalar and Kumudam, and served as a Sub Editor at DD Tamil. Her professional journey reflects a deep understanding of newsroom dynamics and audience-focused journalism. Expertise: Nagalekshmi is especially known for her strength in content writing, with the ability to present complex global developments in a clear and accessible manner. Her editorial interests also extend to women’s wellness, where she values responsible, empathetic, and informative storytelling. Qualification: She holds a postgraduate degree in Journalism from Manonmaniam Sundaranar University, which laid the foundation for her editorial skills and media ethics. With a people-friendly editorial style and a commitment to credible journalism, Nagalekshmi continues to contribute meaningfully to Tamil digital news media. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
இங்க மட்டும் வந்துட்டு போங்க; இந்தியர்கள் காலில் விழுந்து கதறும் நாடுகள்: ஏன் தெரியுமா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk