செங்கல்பட்டு மாவட்டம், ஆத்துரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பேசினர். அப்போது மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் பேசுகையில், “திமுகவும், அதிமுகவும் நான் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்ததாக குற்றச்சாட்டை வைத்துள்ளனர். நான் ஏன் பதவியை ராஜினாமா செய்தேன் என அனைவருக்கும் தெரியும். திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கொள்கைக்கு மாறாக ஆட்சியமைக்கத் திட்டம் தீட்டினர். அது பிடிக்காமல் தான் நான் கட்சியை விட்டு வெளியில் வந்தேன். அதிமுகவில் இருந்து வெளியே வந்த போது நான் மனஉளைச்சலுக்கு ஆளானேன். நான் மேலே ஏறும் போது எனக்கு கை கொடுத்து, நான் இருக்கிறேன் என்று சொன்னவர் முதலமைச்சர் விஜய். மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக்கொள்ள வேண்டும், மதுராந்தகத்தின் வளர்ச்சிக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன். அதனால் தான் தவெகவில் இணைந்தேன். கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் விஜய், எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்? நான் ஏன் பெட்டி வாங்கப் போகிறேன்?” தவெகவின் கொள்கையே ஊழலற்ற ஆட்சி என்பதுதான் அப்படி இருக்கும் போது எனக்கு ஏன் பெட்டி கொடுக்க போகிறார். கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றிப் பெற்றவர் முதலமைச்சர் விஜய். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிப் பெற்றவர் தளபதி விஜய். சொல்பவர்களுக்கு தெரியும் யார் குதிரைபேரம் செய்கிறார்கள் என்று? தெரிவித்துள்ளார். இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி? “திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்! மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் – அமைச்சர் ஆனந்த்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“திமுகவும், அதிமுகவும் கொள்கைக்கு மாறாக ஆட்சியமைக்கத் திட்டம் தீட்டியதால் கட்சியைவிட்டு வெளியேறினேன்” – மரகதம் குமரவேல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk