தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய்யின் அரசு எப்போதுமே சமரசம் செய்துகொண்டது கிடையாது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஏடிஜிபி மீதான நடவடிக்கையை முதல்வர் விஜய் மேற்கொண்டுள்ளார். மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெள்ளிக் கிழமை (செப்.25) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக உரையாற்றினார். முதல்வர் விஜய் கலந்துகொண்ட இந்த மேடையில், திமுக அரசு மீது பல்வேறு தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசியதாவது; ”தேர்தலுக்கு முன்பு வெறும் 12 கூட்டங்களில்தான் முதல்வர் விஜய் பரப்புரை செய்தார். ஆனால், திமுக தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரின் மகன் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்தனர்; 15 அமைச்சர்கள் வீழ்த்தப்பட்டனர். திமுக வரலாற்றிலேயே அதன் தலைவரும் பொதுச்செயலாளரும் தோற்றதே இல்லை. ஆனால், இவர்கள் அனைவரும் சாமானியர்களிடம் வீழ்ந்துள்ளனர். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய்யின் அரசு எப்போதுமே சமரசம் செய்துகொண்டது கிடையாது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஏடிஜிபி மீதான நடவடிக்கையை முதல்வர் விஜய் மேற்கொண்டுள்ளார். திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி மீதான புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? திமுக குடும்பத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு எஃப்ஐஆர் கூட போட முடியுமா? வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்காததற்கு யார் காரணம்? உங்களுடைய குடும்ப அழுத்தமா? இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து நேரில் பதில் சொல்ல வேண்டும். மேலும், வீரமணி மீதான வழக்கை முடிக்க 70 கோடி முதல் 80 கோடி ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ வழக்கு குறித்து நானும், நிர்மல் குமாரும் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக கோருவது முழுமையான ஜனநாயகம் அற்ற செயலாகும். 1931-க்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை விஜய் கொண்டுவந்தார். ஆனால், திமுக இதைக் கொண்டுவராமல் பாஜக மீது பழிபோட்டு தப்பித்துவிட்டது. தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி எடப்பாடியில் வெற்றி பெற்றவர் பழனிசாமி. பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காத நாங்கள், மரகதம் குமரவேலுவுக்காக பணம் கொடுத்திருப்போம் என்று கூறுவது பொய். தவெக வேட்பாளர் அருண் குமாரை விலைக்கு வாங்கி, தேர்தல் முடிந்தவுடன் அவரை அதிமுகவில் இணைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. மரகதம் குமரவேலுக்குப் பெயர் சூட்டியவர் எம்.ஜி.ஆர்; சீட் வழங்கியவர் ஜெயலலிதா. தற்போது அவர் திமுகவை உண்மையாக எதிர்த்து நிற்கும் ஒரே தலைவரின் கட்சியில் இணைந்துள்ளார். மதுராந்தகம் தொகுதியில் தவெக பெறக்கூடிய இந்த வெற்றியானது, எதிர்வரும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அரசியல் மாற்றத்துக்கான அடித்தளமாக மாற வேண்டும்" இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பிரச்சாரத்தில் பேசினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெம் வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா கேள்வி
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk