தங்கம் விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், சிலர் தேவையான அளவுக்கு மட்டும் நகை வாங்கும் நிலையும் காணப்படுகிறது. GOLD RATE TODAY: தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் வகையில், விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதில் நேற்று உயர்வை சந்தித்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று ஒரு கிராமுக்கு ரூ.10 மட்டுமே உயர்ந்திருந்தாலும், 8 கிராம் கொண்ட ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது, இதனால் குறைந்த அளவு விலை மாற்றம் ஏற்பட்டாலும், அதிக எடையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மொத்த செலவில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அமைந்தது. குறிப்பாக திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு தங்கம் வாங்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் தங்கம் விலை குறையுமா அல்லது மேலும் உயருமா என்பதை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அதே நேரத்தில், தங்கத்தை முதலீட்டுக்கான ஒரு வழியாகக் கருதுபவர்களும் தினசரி விலை நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். தங்கம் விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், சிலர் தேவையான அளவுக்கு மட்டும் நகை வாங்கும் நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று (செப்.25) சற்று உயர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.. தொடர்ந்து தங்கம் விலை அதிகமாக இருந்து வருவது நகை வாங்கத் திட்டமிடும் பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது, தங்கத்தின் விலை தினசரி அடிப்படையில் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாறுபட்டு வருகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீட்டாளர்களின் போக்கு, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகள், உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புவிசார் அரசியல் நிலவரங்கள் ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலிப்பதால், உள்நாட்டில் தங்கம் விலை அவ்வப்போது உயர்வும் சரிவுமாக காணப்படுகிறது. இதனிடையே இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,0.0-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், நகைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் இறுதி தொகை தங்கத்தின் அடிப்படை விலையுடன் செய்கூலி, சேதாரம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் உள்ளிட்டவற்றைப் பொறுத்து மாறுபடும். எனவே, நகை வாங்கச் செல்லும் பொதுமக்கள் அன்றைய தங்க விலையுடன் நகையின் செய்கூலி மற்றும் பிற கட்டணங்களையும் சேர்த்து மொத்தத் தொகையை கவனிப்பது அவசியமாகும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
GOLD RATE TODAY: மீண்டும் குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk