டாஸ்மாக் விவகாரம்: ஆகாஷ் பாஸ்கரனுக்கு உச்சநீதிமன்றத்தில் பின்னடைவு? என்ன நடந்தது?

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
டாஸ்மாக் விவகாரம்: ஆகாஷ் பாஸ்கரனுக்கு உச்சநீதிமன்றத்தில் பின்னடைவு? என்ன நடந்தது?

டாஸ்மாக் முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என challenging செய்த ஆகாஷ் பாஸ்கரனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து, அவர் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகலாம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்ததால், ஆகாஷ் பாஸ்கரனுக்கு சட்டரீதியான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக உத்தரவிட்டதை எதிர்த்து திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2025 மே மாதம் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து பல ஆவணங்களை பறிமுதல் செய்தது. அமலாக்கத் துறையின் இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதற்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது ஆனால், அமலாக்கத்துறை சார்பில், ஆவணங்கள் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டதாகவும், வேண்டுமானால் உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிதாக நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அமலக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரன் தனது தரப்பு வாதங்களை அமலக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம் என உத்தரவிட்டதோடு இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீக்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, அந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி,வி.மோகனா ஆகிய அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை