ஒரு குழந்தை பாதுகாக்கப்பட வேண்டியதே தவிர, வன்முறைக்கு உள்ளாக்கப்படவோ, அமைதியாக்கப்படவோ அல்லது வேறொருவரின் வக்கிர குணத்தின் வடுக்களைச் சுமக்க வைக்கப்படவோ கூடாது. தமிழகம் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தொழிலதிபர் ஆர். வீரமணி மீது பதிவாகியுள்ள போக்சோ (POCSO) வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் வலியுறுத்தியுள்ளார். இந்திய அளவில் பெரிய கிரானைட்ஸ் தொழில் அதிபர்களில் ஒருவராக இருக்கும் ஆர்.வீரமணி, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை தொடர்ந்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ வழக்கில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த பாலியல் வழக்கு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பு, ஒரு குழந்தையின் வலியை விலைக்கு வாங்க முடியாது. அவளது குரலை அடக்க முடியாது. நீதியைப் பேரம் பேச முடியாது. மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை யாரும் தொட முடியாது என்று நம்புவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது. ஒரு குழந்தையின் மீதான பாலியல் வன்கொடுமையை விட கொடூரமான, கோழைத்தனமான அல்லது மன்னிக்க முடியாத செயல் வேறு எதுவும் இல்லை. ஒரு குழந்தை பாதுகாக்கப்பட வேண்டியதே தவிர, வன்முறைக்கு உள்ளாக்கப்படவோ, அமைதியாக்கப்படவோ அல்லது வேறொருவரின் வக்கிர குணத்தின் வடுக்களைச் சுமக்க வைக்கப்படவோ கூடாது. எனது கோபம் முழுமையானது, சந்தேகத்திற்கு இடமற்றது மற்றும் சமரசமற்றது. இந்த வழக்கில் 70 கோடி ரூபாய் போன்ற செல்வம், செல்வாக்கு அல்லது அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள், உண்மையைப் புதைக்கவும், பாதிக்கப்பட்டவரை அமைதியாக்கவும் அல்லது நீதியைத் தடுக்கவும் பயன்படுத்தப்பட்டால், அது எனக்கு அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது, அதுவும் அதே அளவு ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அம்பலப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ஆர்.வீரமணி வழக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படித் தண்டனையிலிருந்து தப்பித்தார்? என்னவொரு அவமானம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தப்பிக்க வழியே இருக்கக்கூடாது. சட்டம் தனது முழு பலத்துடன் இறங்கி, குற்றவாளியையும் குற்றத்தில் ஈடுபட்டவர்களையும் தாமதமின்றி தண்டிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். A child’s pain cannot be bought. Her voice cannot be silenced. Justice cannot be negotiated. And the powerful must never be allowed to believe they are untouchable.There is nothing more monstrous, more cowardly or more unforgivable than the sexual abuse of a child. A child is… pic.twitter.com/ZnEFsxcswB இதற்கிடையில்,ஆர். வீரமணி சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கில் சென்னை பெருநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவு தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய கணேசன் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினரின் கூற்றுப்படி, கணேசனின் மொபைல் போனில் வீரமணி மற்றும் ஒரு சிறுமி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ கண்டெடுக்கப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து, வீரமணியுடன் தொடர்பிலிருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட நடைமுறைகள் முடிந்த நிலையில், கணேசன், சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் இம்மூன்று பிரதிவாதிகளையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால், தப்பிக்க வழியே இருக்க கூடாது: வீரமணி வழக்கில் குஷ்பு ஆவேசம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk