முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய அணியின் 4 நபர் அடங்கிய இந்தக் கலப்பு தொடர் ஓட்டக் குழுவில், 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமில்லாமல், தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும். தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE Sportsperson Scheme’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் இருவரும் தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இச்சாதனையைப் படைத்துள்ளனர். இவர்களது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைத்திட வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? “இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும்” – ராகுல்காந்தி பேட்டி! “தவெக அரசின் விளம்பர மோகத்தால் சீரழியும் மக்கள் நலத் திட்டங்கள்” – டிடிவி தினகரன் விமர்சனம்! தெருக்களின் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும் – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டுப் போட்டி: தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk