ஜெம் வீரமணி வழக்கு| தன்னை விமர்சித்த முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
ஜெம் வீரமணி வழக்கு| தன்னை விமர்சித்த முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி!

முதல்வர் விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், NDA கூட்டணி MLA-களை வாங்கும் தூயசக்தி அரசியலை கேள்வி எழுப்பி, திமுக-பாஜக ஒன்று அல்ல, சட்டமன்றத்தில் பாஜக பெயரே நீக்கப்படும் நிலை மக்களுக்கு தெரியும் என வாதிடுகிறார். ஜெம் வீரமணி வழக்கில் தாம் ஏற்கனவே விளக்கம் அளித்ததாகவும், அதை அரசியல் ஆக்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் கூறியிருப்பதை நினைவூட்டுகிறார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், “எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவார்கள். இப்போது என்ன ஆச்சு, பாஜகவே மூச்சுவிட திணறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல. எப்போது தொகுதி மறுவரையறை மசோதா திரும்ப வரும், எப்போது பாஜகவுடன் சேரலாம் என திமுக காத்துக்கொண்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக வென்றுவிட்டால், ஜனவரி மாதத்தில் தவெக ஆட்சி கலையும் என திமுக பேசுகிறது. திமுக, பாஜக, அதிமுக எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நம் மீது எந்தக் குற்றச்சாட்டு வைக்க முடியவில்லை என்ற விரக்தியில், தமிழக பெண்களை அசிங்கமாக திமுக பேசுகிறது. இதனை ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பார்த்து ரசிக்கிறார்கள். தமிழகத்தில் இளம்பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருவன் இத்தனை ஆண்டுகளாக சீரழித்துக்கொண்டு இருந்துள்ளான். அந்த வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளார்கள். இதுபற்றி தமிழகமே கேள்வி கேட்கிறது, வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார். இந்த விவகாரத்தில் அதிமுகவும் வாயை திறக்கவில்லை. இதில் கூடவா கூட்டு? என்று விஜய் திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் தாக்கிப் பேசினார். முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின், “வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்? அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி,… pic.twitter.com/KlxqhEb0oE கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே? பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். “ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்! இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?” என பதிவிட்டுள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை