தமிழர்களின் மேற்கு ஆசியா உடனான தொடர்பு: பூம்புகார் அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்தும் உண்மை என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
தமிழர்களின் மேற்கு ஆசியா உடனான தொடர்பு: பூம்புகார் அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்தும் உண்மை என்ன?

காவேரிப்பூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகார், சங்க மற்றும் சங்கத்திற்குப் பிந்தைய இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. காவேரியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்தத் துறைமுக நகரம், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து வந்த வணிகர்களால் நிரம்பி வழிந்ததாக விவரிக்கப்படுகிறது. பூம்புகார், தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில், 800 கி.மீ. நீளமுள்ள காவேரி ஆறு வங்காள விரிகுடாவில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. புகைப்படம்: விக்கிமீடியா காமன்ஸ் எழுதியவர்:நிகிதா மோஹ்தா தமிழ்நாட்டின் பழமையான சோழர் துறைமுக நகரமான பூம்புகாருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட புதிய நீருக்கடி அகழ்வாராய்ச்சிகள், அந்நகரத்தின் கடல்சார் தொடர்புகளுக்கு மேலும் புதிய சான்றுகளை வழங்கியுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 18 நாள் ஆய்வில், மேற்கு ஆசியாவைச் சேர்ந்த "டார்பிடோ ஜாடி"யின் (torpedo jar) உடைந்த துண்டு, நான்கு சுடுமண் உறைக்கிணறுகள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட சுடுமண்பாண்டத் துண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகார், சங்க கால மற்றும் சங்கம் மருவிய கால இலக்கியங்களில் மிக முக்கியமாகப் போற்றப்படுகிறது. பல தசாப்தங்களாக நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள், இந்தியப் பெருங்கடல் வணிகத்துடன் பூம்புகார் கொண்டிருந்த தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளன. அதேவேளையில், பழங்கால நகரத்தின் பெரும் பகுதி தற்போது கடலுக்கு அடியில் மூழ்கியிருப்பதாக நம்பப்படுகிறது. பூம்புகார் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்தும் உண்மைகள் யாவை? காவிரியின் முகத்துவாரத்தில் ஒரு நகரம் வங்காள விரிகுடாவில் கலக்கும் 800 கி.மீ நீளமுள்ள காவிரி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள பூம்புகார் — காவிரிப்பூம்பட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்பகால சோழர்களின் தலைநகரமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. 2011-ஆம் ஆண்டின் தொல்லியல் அறிக்கை ஒன்றில், ஆர்.பூங்குன்றன், கே. ஸ்ரீதரன் மற்றும் பலர் இது குறித்து எழுதுதியதில், "பூம்புகாரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மரக்கட்டையின் கார்பன் பகுப்பாய்வு (carbon date) தெளிவுபடுத்துவது போல, இந்நகரம் கி.மு. 5-ஆம் அல்லது 4-ஆம் நூற்றாண்டிலிருந்தே நிலவியிருக்க வேண்டும். பூம்புகார் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது: மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் மற்றும் நாளங்காடி. மருவூர்ப்பாக்கம் கடற்கரையை ஒட்டியும், பட்டினப்பாக்கம் மேற்கிலும், நாளங்காடி இவை இரண்டிற்கும் இடையிலும் அமைந்திருந்தன. தமிழ்நாட்டின் மறைக்கப்பட்ட வணிக வலைப்பின்னல் சோழர் காலத்தில் இத்துறைமுகம் மிகவும் பரபரப்பாகவும் மக்கள் அடர்த்தியாகவும் இருந்ததாக விவரிக்கப்படுகிறது. இந்நகரத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்கள் சோழ நாட்டில் இருந்து வந்தவை என்பதைக் குறிக்கும் வகையில் புலி முத்திரையிடப்பட்டன. இந்தியா முழுவதிலிருந்தும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்தும் வந்த வணிகர்கள், தங்கள் பண்டங்களை விற்பனை செய்ய இந்நகரத்தில் திரண்டனர். "கங்கைப் பகுதியின் பொருட்கள், ஈழத்து உணவுப் பொருட்கள், ஜாவாவின் நறுமணப் பொருட்கள் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்பட்டன" என்று பூங்குன்றனும் ஸ்ரீதரனும் குறிப்பிடுகின்றனர். சமீபத்திய கண்டுபிடிப்புகள் இதற்கு மேலும் சான்றளிக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒரு கண்டுபிடிப்பு, 30 செ.மீ முதல் 35 செ.மீ வரை விட்டம் கொண்டதாகக் கணிக்கப்படும், மெல்லிய சுடுமண்ணால் ஆன மேற்கு ஆசிய "டார்பிடோ ஜாடி"யின் துண்டாகும். வரலாற்று ரீதியாக, மது மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற திரவப் பொருட்களைக் கடல் வர்த்தகப் பாதைகள் வழியே எடுத்துச் செல்லப் பயன்பட்ட இப்பாத்திரம், மேற்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் உலகத்துடன் பூம்புகார் கொண்டிருந்த கடல்சார் தொடர்புகளுக்குச் சான்றாக விளங்குகிறது. இருப்பினும், இக்கண்டுபிடிப்பு முற்றிலும் புதியது அல்ல. சீலா திரிபாதி, ஏ.எஸ்.கெளர் மற்றும் பலர் எழுதிய "காவிரிப்பூம்பட்டினப் பகுதியில் கடல்சார் தொல்லியல் ஆய்வுகள்" என்ற 1996-ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில், "மேற்கு வங்கத்தின் தாம்ரலிப்தி மற்றும் ஒடிசாவின் பாலூர் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட கப்பல்கள் பூம்புகாருக்கு வந்தன. அங்கிருந்தே அனைத்துக் கடல்சார் கப்பல்களும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், அரேபியா மற்றும் ரோமிற்குப் புறப்பட்டுச் சென்றன" என்று குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீலதா மேனன் தனது இன் சர்ச் ஆப் லாஸ்ட் சிட்டிஸ் (In Search of Lost Cities (2025) என்ற நூலில், "ரோம், எகிப்து, சீனா மற்றும் அரேபியாவில் இருந்து வந்த கப்பல்கள் நேரம் காலம் பாராமல் துறைமுகத்தில் வந்து நின்றனவும், புறப்பட்டுச் சென்றனவும்... குதிரைகள் உட்பட அனைத்து வகையான சரக்குகளும் ஏற்றப்பட்டு, இறக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு, சோழர்களின் சுங்க முத்திரையான புலி முத்திரை குத்தப்பட்டன" என்று எழுதியுள்ளார். பூம்புகாரின் பல்வேறு தொல்பொருட்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் உறைக்கிணறுகள், சேமிப்பு ஜாடிகள் மற்றும் களிமண் பகுதிகள் ஆகியவை அங்கு கண்டெடுக்கப்பட்ட பிற முக்கியப் பொருட்களில் அடங்கும். திரிபாதியும் கெளரும், "இக்கட்டுமானங்கள் அக்காலத்தைச் சேர்ந்த பொதுக் கட்டிடம், கப்பல் துறைமேடை (wharf) மற்றும் நீர்த்தேக்கம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகளாக இருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பெருங்கற்கால மண்பாண்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் கண்டுபிடிப்பு, பூம்புகாரின் பழங்கால மனித வாழ்விடம் தற்போதைய கடற்கரை எல்லையைத் தாண்டி விரிந்திருந்ததை நிரூபிக்கிறது. சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் மூலம், நன்னீரைப் பெறுவதற்காக உறைக்கிணறுகள் பாரம்பரியமாக உலர் நிலப்பகுதியிலேயே அமைக்கப்பட்டன என்பதால், அவை கடலடிப் பகுதியில் இருப்பது ஒரு புதைந்த பழங்கால ஆற்றுப் பாதையைக் (palaeochannel) குறிக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது கடற்கரை அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வின் காரணமாக காலப்போக்கில் மூழ்கியிருக்கலாம். கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் கரையைத் தாக்கிய பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு, நகரத்தின் பெரும்பகுதியை விழுங்கியதாக நம்பப்படுகிறது. இதில் மேனன் மற்றொரு தொன்மக் கதையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்: இத்துறைமுகத்தின் அரசன், தன் மகனின் இறப்பால் துயருற்று, வழக்கமான இந்திர விழாவைக் கொண்டாடத் தவறினான். விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பெற மழை, இடி, மின்னலின் கடவுளான இந்திரனை (வேந்தன் என்றும் அழைக்கப்படுபவர்) வழிபடும் திருவிழாவே இந்திர விழாவாகும். இதனால் கோபமடைந்த பூம்புகாரின் தேவி, கடல் முழு நகரத்தையும் விழுங்குமாறு செய்தாள் என்று குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் ஆய்வுகள், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பூம்புகாரைத் தாக்கிய மிகப்பெரிய சுனாமி, நகரம் கடலில் மூழ்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், முழு நகரமும் கடலில் மூழ்கி, கடல் உள்வாங்கிய பிறகு மீண்டும் கட்டப்பட்டிருக்கலாம் அல்லது நகரத்தின் ஒரு பகுதி மட்டுமே கடலால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு பார்வையாகும். "இரண்டாவதாகக் கூறப்பட்டதே அதிக சாத்தியக்கூறு கொண்டதாகத் தோன்றுகிறது" என்று பூங்குன்றனும் ஸ்ரீதரனும் எழுதியுள்ளனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை