பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ எப்போது ஓடும்? பிரதமர் மோடியின் தேதிக்காக காத்திருக்கும் சென்னை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ எப்போது ஓடும்? பிரதமர் மோடியின் தேதிக்காக காத்திருக்கும் சென்னை

Poonamallee to Vadapalani metro பிரதமர் அலுவலகத்திடமிருந்து (PMO) உறுதிப்படுத்தப்பட்ட தேதி வராததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவன (CMRL) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 11 நிலையங்கள் தயார்... ரயிலும் தயார்! 14.64 கி.மீ. சென்னை மெட்ரோவை திறக்க பிரதமர் மோடி எப்போது வருகிறார்? சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ள முதல் வழித்தடம், பாதுகாப்பு அனுமதி கிடைத்து பல மாதங்கள் கடந்தும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுக்காக திறப்பு விழா தேதி காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) 2-ம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ. வழித்தடம் பயணிகள் சேவைக்கு தயாராக உள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதமே வணிக ரீதியிலான ரயில் சேவையைத் தொடங்குவதற்கான நிபந்தனையுடன் கூடிய தற்காலிக அனுமதி கிடைத்தது. அதன்பிறகு, பாதுகாப்பு ஆணையர் விதித்த நிபந்தனைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிறைவேற்றியது. இதையடுத்து, மே மாதத்தில் சில தளர்வுகளுடன் இறுதி அனுமதியும் கிடைத்தது. இதில் ரயில்களின் வேகம் மற்றும் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இதுவரை பொதுமக்களுக்கான சேவை தொடங்கப்படவில்லை. பிரதமர் அலுவலகத்திடம் இருந்து தேதி வருமா? திறப்பு விழாவுக்கான தேதியை பிரதமர் அலுவலகத்தின் உறுதிப்படுத்தலுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் காத்திருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “செப்டம்பர் இறுதியில் திறப்பு விழா நடைபெறலாம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 21-ம் தேதி வரை எந்தத் தகவலும் வரவில்லை. எனவே, அக்டோபர் முதல் வாரத்தில் திறப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக கருதுகிறோம்” என்று அதிகாரி ஒருவர் தி டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரதமர் சென்னை வருகை தரும் போது, மெட்ரோ திறப்பு விழாவையும் அவரது மற்ற நிகழ்ச்சிகளுடன் இணைத்து நடத்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும், செவ்வாய்க்கிழமை வரை பிரதமரின் சென்னை வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. தேர்தலால் தாமதமான திறப்பு விழா சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்தின் முதல் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் திறந்து வைக்கும் வகையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக திறப்பு விழா தாமதமானது. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மெட்ரோ வழித்தடத்தையும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மெட்ரோ வழித்தடத்தையும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் ஒரே நேரத்தில் திறந்து வைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தூர் மெட்ரோவின் 11 கி.மீ. முன்னுரிமை வழித்தடம்-2 செப்டம்பர் 5-ம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்றார். இதன் மூலம் இந்தூரில் பயணிகள் பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தின் மொத்த நீளம் சுமார் 17 கி.மீ. ஆக அதிகரித்தது. 2-ம் கட்டத்தில் 118.9 கி.மீ. மெட்ரோ சென்னை மெட்ரோவின் 2-ம் கட்டத் திட்டத்தில் மொத்தம் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மொத்த நீளம் 118.9 கி.மீ. தற்போது திறப்புக்காக காத்திருக்கும் பூந்தமல்லி புறவழிச்சாலை–வடபழனி வழித்தடம், 4-ம் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை சுமார் 26.1 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும். பாதுகாப்பு அனுமதிகள் கிடைத்துவிட்ட நிலையில், தற்போது பிரதமரின் திறப்பு விழா தேதி எப்போது உறுதி செய்யப்படும் என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. தேதி உறுதியான பிறகே 14.64 கி.மீ. நீளமுள்ள இந்த முதல் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை