Chennai News Live Updates: “சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம்” - கரூர் சம்பவத்தை நினைவுகூர்ந்த விஜய்

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️
Chennai News Live Updates: “சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம்” - கரூர் சம்பவத்தை நினைவுகூர்ந்த விஜய்

Tamil Nadu Latest News Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்! பெட்ரோல் மற்றும் டீசல் விலை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.97.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. “சட்டமன்றம் பட்டிமன்றமாகிவிட்டது” - இபிஎஸ் மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவை செயல்பாடுகளை விமர்சித்தார். “சட்டமன்றம் பட்டிமன்றமாகிவிட்டது. பேரவையில் வெட்டி பேச்சுதான் பேசுகிறார்கள். சினிமாவைப் போல சட்டப்பேரவை நடக்கிறது. மின்கட்டணம் உயர்வு பெரிய பிரச்சினையாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார். மேலும், மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாகவும் ஆளுங்கட்சியை விமர்சித்து அவர் கருத்துகளை முன்வைத்தார். ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு - அரசியல் தலைவர்கள் மாறி மாறி குற்றச்சாட்டு ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள நிலையில், அவரது கைது குறித்து முதல்வர் விஜய் கூறிய கருத்து தொடர்பாகவும் அவர் விமர்சனம் முன்வைத்தார். இதனிடையே, வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 7 உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய இருவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஜாமீன் மனுக்கள் செப்டம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. மின்தடை முதல் மின்கட்டணம் வரை - அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் தமிழகத்தில் மின்சாரம் தொடர்பான விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய விவாதமாகியுள்ளது. மதுரையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல் குமார், ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின்சாரம் மாற்றப்பட்டபோது சுமார் 5 விநாடிகள் மட்டுமே மின்தடை ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில், மின்தடை குறித்து அமைச்சர் மற்றும் மின்வாரியம் வெவ்வேறு காரணங்களை கூறுவதாக செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார். இதனிடையே, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஆண்டு இதே நாளான 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். “சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம். கடந்த வருடம் இதே நாள் என் வாழ்நாளிலும், நம் கரூர் சொந்தங்களின் வாழ்விலும், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனதிலும் ஆறாத ரணமாகவும், தீராத வலியாகவும், வேதனையான நிகழ்வாகவும் அமைந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும், ஆதரவாகவும், அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் நாளை (செப்டம்பர் 28) மதுரையில் தொடங்கப்பட உள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார். அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். இதற்காக முதல் கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், திட்டம் தொடங்கும் நாள் வரை பிறந்த குழந்தைகளுக்கு 107 மையங்கள் மூலம் செப்டம்பர் 28 முதல் மோதிரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், தவெக அணியில் இடம்பெறுவது தொடர்பான கட்சியின் முடிவை விளக்கிப் பேசுகையில், “நாம் தவெக அணியில் இடம்பெறாமல் போயிருந்தால், வலதுசாரி சக்திகள் ஆக்கிரமிப்பதற்கான சூழல் இருந்தது. தவெக அதற்குத் தயாராக இல்லை. தவெகவை அப்படி விட்டுவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வோடு விசிக இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். தவெகவின் அரசியல் அணுகுமுறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டே விசிக இந்த முடிவை எடுத்ததாக திருமாவளவன் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யை விமர்சிக்கும் வகையில், “நூறு விஜய் வந்தாலும், எடப்பாடி தொகுதியில் ஒன்றும் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி தொகுதியை மையமாக வைத்து விஜய் தொடர்பாக எழுந்துள்ள அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல், விஜய்யும் கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை