'ஏவுகணைகள் சரியான நேரத்தில் வருகின்றன' - நேபாள பிரதமர் பாலேன் ஷாவின் ஐ.நா. உரைக்கு பாராட்டுகள் ஏன்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
'ஏவுகணைகள் சரியான நேரத்தில் வருகின்றன' - நேபாள பிரதமர் பாலேன் ஷாவின் ஐ.நா. உரைக்கு பாராட்டுகள் ஏன்?

பட மூலாதாரம், Getty Images ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வல்லரசு நாடுகளின் மீதுதான் பொதுவாக அனைவரது கவனமும் இருக்கும். ஆனால், இந்த முறை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா (பாலேன் ஷா) கவனம் பெற்றுள்ளார். செப்டம்பர் 24 அன்று, ஐ.நா. பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் 36 வயதான நேபாள பிரதமர் தனது உரையில் பேசிய கருத்துகள் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன. அவர் பேசிய இந்த இரண்டு வரிகள்தான் அதிகம் கவனம் பெற்றுள்ளன. "நாம் வெப்பமாக்காத காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும், நாம் தொடங்காத போர்களின் விளைவுகளையும் நாம் அனுபவித்து வருகிறோம்." "போருக்கான சிறப்பான கட்டமைப்பைக் கொண்ட உலகை நாம் உருவாக்கியுள்ளோம்; ஆனால் உணவுக்கான கட்டமைப்பு மோசமாக உள்ளது." மத்திய கிழக்கு நிறுவனத்தின் துருக்கி திட்டத்தின் நிறுவன இயக்குநர் கோனுல் டோல், பாலேன் ஷாவின் இந்தக் கருத்துகளை பகிர்ந்து "உலகின் தற்போதைய நிலையை இதைவிட வலிமையாக விவரிப்பது கடினம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நியூயார்க் சென்ற பாலேன் ஷா, உலகம் இரண்டு முக்கிய போர்களுக்கு இடையில் சிக்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொண்டுவரும் நேபாளத்தின் துயரத்தை தனது உரையில் நினைவுபடுத்தினார். இது ஒட்டுமொத்த உலகத்திற்கான ஓர் எச்சரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். End of அதிகம் படிக்கப்பட்டது ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் குறைந்தது 1,400 பேர் உயிரிழந்தனர்; மேலும் 6,000 பேர் இன்னும் காணவில்லை. பட மூலாதாரம், @UN_Spokesperson பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவுகூர்ந்த பாலேன் ஷா, "கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சரியான நேரத்தில் வந்து சேர்கின்றன. துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் அனைத்து தடைகளையும் கடந்து சரியான நேரத்தில் வந்து சேர்கின்றன. ஆனால், நேபாளத்தில் ஒரு விவசாயியால் தனக்குத் தேவையான நேரத்தில் சந்தை விலையில் உரத்தையோ எரிபொருளையோ வாங்க முடியவில்லை. போருக்கான தளவாடங்கள் சிறப்பாகச் செயல்படும் உலகத்தை நாம் உருவாக்கியுள்ளோம்; ஆனால் உணவுக்கான தளவாட அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது." என்றார் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய பாலேன் ஷா மேலும், "இன்று இங்கு நின்றுகொண்டு வளர்ச்சி, ஜனநாயகம், அமைதி, இளம் நாட்டின் நம்பிக்கைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அதற்குப் பதிலாக மிகப்பெரிய உயிரிழப்பு மற்றும் அழிவு குறித்து பேச வேண்டியிருக்கிறது. இனி ஒருபோதும் வீடு திரும்ப முடியாத தங்கள் அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்று காத்திருக்கும் குடும்பங்கள் குறித்து பேச வேண்டியிருக்கிறது. சேறு, பாறைகள் மற்றும் வெள்ளநீருக்கு இடையே, உடல்கள் ஒருபோதும் மீட்கப்படாமல் போகக்கூடிய தங்கள் உறவினர்களைத் தேடும் சமூகங்கள் குறித்து பேச வேண்டியிருக்கிறது. வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள், சாலைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் உயிர்கள் குறித்து பேச வேண்டியிருக்கிறது.'' என்றார். "போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் நேபாளத்துக்கு ஏற்பட்ட உள்ளூர் பேரழிவு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகத்திற்கான ஓர் எச்சரிக்கையும் கூட. அந்த எச்சரிக்கையை நாம் உண்மையிலேயே கவனத்தில் கொண்டோமா என்று இன்று நான் கேட்கிறேன்." "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எவரெஸ்ட் சிகரத்தின் பின்னணியில் நின்றுகொண்டு, காலநிலை பேரழிவை ஏற்படுத்தியுள்ள நெருக்கடிக்கு வழிவகுத்த இந்த பிரச்னை (கால நிலை மாற்றம்) குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் மனிதகுலத்தை எச்சரித்தார்." "ஆனால், பூமியின் உச்சியில் இருந்து எழுந்த அந்த எச்சரிக்கைக் குரல் உலகில் போதுமான அளவு எதிரொலிக்கவில்லை. நேபாளத்தில் நாங்கள் அந்த அழைப்பைக் கேட்டோம். எங்கள் சமூகங்கள் அந்த அழைப்பைக் கேட்டன. விஞ்ஞானிகளும் அந்த அழைப்பைக் கேட்டனர். அவர்கள் இந்த ஆபத்து குறித்து ஆதாரங்களுடன் உலகிற்கு மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தனர்." ஆனால், "உலகத் தலைவர்களான நாம், பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவைப்படும் வேகம் மற்றும் அளவில், இந்த எச்சரிக்கைகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றத் தவறிவிட்டோம்" என்று அவர் கூறினார். "கடந்த மாதம், இந்த அலட்சியத்தின் துயரமான விளைவுகளை நாம் நேரில் பார்த்தோம். காலநிலை மாற்றத்திற்கு எல்லைகள் கிடையாது. பனிப்பாறைகளும் வெள்ளமும் கடவுச்சீட்டில் விசா முத்திரையுடன் எல்லைகளைக் கடப்பதில்லை." என அவர் கூறினார். "நான் இங்கு குறை கூறுவதற்காக வரவில்லை; சில பரிந்துரைகளைப் பகிர்ந்துகொள்வதற்காக வந்துள்ளேன். முதலில், இந்தப் பேரழிவுக்குப் பிறகு நேபாளத்திற்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நேபாளத்தின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் உடனடியாகவும் தாராளமாகவும் உதவிகளை வழங்கின. ஆனால், இந்தப் பேரழிவு நேபாளத்தின் எல்லைகளுக்கு அப்பால் ஏன் முக்கியமானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் நேபாளத்தின் பங்கு 0.1 சதவீதத்துக்கும் குறைவு. இந்த நெருக்கடியை நாங்கள் உருவாக்கவில்லை. ஆனால், இதற்கான பெரும் விலையை நாங்கள் செலுத்தி வருகிறோம்." என்றார் அவர். "எங்கள் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. எங்கள் மலைச்சரிவுகள் நிலையற்றதாகி வருகின்றன. எங்கள் ஆறுகளின் நீரோட்டம் கணிக்க முடியாததாக மாறி வருகிறது. ஒவ்வொரு பெரிய பேரழிவும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றத்தை அழித்துவிடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது." "நேபாளத்தைப் பொறுத்தவரை, காலநிலைப் பேரழிவு என்பது மனிதாபிமான நெருக்கடி மட்டுமல்ல; வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள மிகத் தீவிரமான அவசரநிலையும் ஆகும்." பட மூலாதாரம், Getty Images ''இந்தப் பருவமழைக் காலத்தில் நேபாளத்தில் ஒரு ஏழை விவசாயி தனது வயலில் விதைகளை விதைக்கச் சென்றபோது, அவருக்கு உரம் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. நாங்கள் புதிய நெடுஞ்சாலையை அமைக்க விரும்பியபோது, தார் கிடைக்கவில்லை. மாலையில் ஒரு குடும்பம் இரவு உணவு சாப்பிட அமர்ந்தபோது, அவர்களிடம் சமையல் எரிபொருள் இல்லை." என அவர் மேலும் கூறினார். "ஒருபுறம் பனிப்பாறைகள் உருகுகின்றன, பயிர்கள் அழிகின்றன, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வெள்ளம் வருகிறது. மறுபுறம், அவற்றின் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஏழை மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் உள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் எல்லைகளைக் கடந்து சரியான நேரத்தில் வந்து சேர்கின்றன. ஆனால், நேபாள விவசாயி தனக்குத் தேவையான நேரத்தில் சந்தை விலையில் உரத்தையோ எரிபொருளையோ வாங்க முடியாமல் பாதிக்கப்படுகிறார். இது நேபாளத்தின் பிரச்னை மட்டுமல்ல. வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிடம் கேளுங்கள். எங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாட்டிடம் கேட்டாலும் இதேபோன்ற கதையைத்தான் கேட்பீர்கள். நாம் ஏற்படுத்தாத உலகளாவிய வெப்பமயமாதலால் உருவான காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் அனுபவித்து வருகிறோம். அதேபோல், நாம் தொடங்காத போர்களின் தாக்கத்தையும் நாம் அனுபவித்து வருகிறோம்." என்றார் பாலேன் ஷா. பட மூலாதாரம், Getty Images பாலேன் ஷாவின் உரை நேபாளத்திலும் சர்வதேச அளவிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளது. தி காத்மாண்டு போஸ்ட் நாளிதழ் அவரது உரையைப் பாராட்டி, "ஷாவின் அணுகுமுறையும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு, அவர் காலநிலை நீதிக்காகக் குரல் கொடுத்ததுடன், உலகின் மிகப்பெரிய பசுமைக்குடில் வாயு வெளியேற்ற நாடுகளிடமிருந்து இழப்பீடு கோரியிருந்தார். ஆனால், நியூயார்க்கில் அவர் முதலில் இந்தியா மற்றும் சீனாவின் பெயர்களைக் குறிப்பிட்டு, வெள்ளத்துக்குப் பிறகு அவை வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்" என்று குறிப்பிட்டது. "சமூக ஊடகங்களில் தனது பிம்பத்தை கவனமாக உருவாக்கியவர் என்று அறியப்படும் ஷா, உலகின் மிகப்பெரிய அரங்கில் இதற்கு முற்றிலும் மாறான அணுகுமுறையை எடுத்தார்" என்றும் தி காத்மாண்டு போஸ்ட் குறிப்பிட்டது. புகழ்பெற்ற நேபாள பத்திரிகையாளர் கனக் மணி தீக்ஷித், பாலேன் ஷாவைப் பாராட்டி சமூக ஊடகமான எக்ஸ்-ல், "பிரதமர் பாலேன் ஷாவின் உரை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ராசுவாவில் ஏற்பட்ட பேரழிவு, அதற்குக் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய காரணங்கள் மற்றும் அதன் பரந்த தாக்கங்கள் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார். இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அழைப்பு, உலகளாவிய அரங்கில் தெரிவிக்கப்பட வேண்டிய முக்கியமான செய்தியாக இருந்தது." என குறிப்பிட்டுள்ளார். "ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் ஆற்றிய உரை, சுற்றுச்சூழல் நெருக்கடியின் மீது சர்வதேச சமூகத்தின் கவனத்தை வெற்றிகரமாக ஈர்த்துள்ளது" என்று நேபாளத்தின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ரமேஷ் நாத் பாண்டே எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். "உண்மைகளைத் திறம்படவும் தெளிவாகவும் முன்வைத்ததன் மூலம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்கான செயல்திட்டத்தை பிரதமர் உலகளாவிய அரங்கில் முன்வைத்துள்ளார். புதிய தலைமுறை தலைமைத்துவம், உலகம் முழுவதும் நேபாளத்தின் குரல் மீண்டும் கேட்கப்படும் வகையில், அந்நாட்டை மதிக்கப்படும் நாடாக மாற்றுவதில் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளது." பட மூலாதாரம், Getty Images டப்ளின் பல்கலைக்கழக ஆய்வாளரான மகேஷ் குஷ்வாஹா, பாலேன் ஷாவின் உரையைப் பாராட்டி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். "ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று பாலேன் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. அவரது உரையில் இடம்பெற்ற சில முக்கியமான விவகாரங்களை சர்வதேச ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இனி இந்த விவகாரங்கள் பல்வேறு தரப்பினரிடையே விவாதிக்கப்படும். இந்த உரையோ அல்லது அதற்குக் கிடைத்துள்ள வரவேற்போ நேரடியாக எந்த நடவடிக்கையாகவும் மாறாது. ஆனால், ஒரு நாட்டின் நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துச் செல்வது முக்கியம். அந்தப் பணியை பாலேன் சிறப்பாகச் செய்துள்ளார். எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாகச் செய்திருக்கலாம். அவரது உரையில் கவனிக்கத்தக்க பல அம்சங்கள் இருந்தன. நேபாளத்துக்கு உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தது, மோதலை ஏற்படுத்தும் வார்த்தைகளை தவிர்த்தது, நேபாளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய காலநிலை நெருக்கடியின் அளவையும் அது உலகிற்கு ஏன் முக்கியமானது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தது, காலநிலை விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவுடன் இணைந்து செயல்படுவதற்கான நடைமுறை முயற்சிகளை முன்வைத்தது, இறுதியாக தெற்காசிய நாடுகளின் பின்னணியில் அதிகரித்து வரும் உலகளாவிய நிலையற்ற தன்மையைச் சுட்டிக்காட்டியது ஆகியவை அவரது உரையின் முக்கிய அம்சங்களாக இருந்தன. சமீபத்திய பேரழிவுகளுக்கான இழப்பீட்டை நேரடியாக 'கோருவது' அல்லது அவற்றுக்கு ஒரு தொகையை நிர்ணயிப்பதற்குப் பதிலாக, அவற்றை எதிர்கொள்ள நிதி திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பாகச் சிறந்த முடிவாக இருந்தது." என்று அவர் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை