இந்தியாவின் முதல் எல்.என்.ஜி ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சபர்மதி ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். எழுதியவர்: அனிஷ் மோண்டல் இந்திய ரயில்வேயில் தூய்மையான மற்றும் மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்துவதையும், டீசல் சார்பை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட ஒரு முக்கிய கட்டமாக, நாட்டின் முதல் எல்.என்.ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு - Liquefied Natural Gas) ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (செப். 27) சபர்மதி ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க அகமதாபாத் ரயில்வே கோட்டத்தின் தகவல்படி, தேசியப் போக்குவரத்து அமைப்பான இந்திய ரயில்வே, ரயிலின் உந்துசக்திப் பெட்டிகளில் எல்.என்.ஜி அடிப்படையிலான எரிபொருள் அமைப்பைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தப் புதிய இருமுனை எரிபொருள் தொழில்நுட்பம், எரிபொருள் கிடைப்பதைப் பொறுத்து ஒரே என்ஜினை எல்.என்.ஜி மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயக்க அனுமதிக்கிறது. 2,000 கி.மீ சோதனை ஓட்டம் நிறைவு இத்திட்டத்தின் கீழ், தலா 1,400 எச்.பி (HP) திறன் கொண்ட இரண்டு டிரைவிங் விசை கார்கள், எல்.என்.ஜி - டீசல் என இருமுனை எரிபொருள் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட இவ்விரு டி.பி.சி-க்களிலும் 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கள ஆய்வுகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. புதிய தொழில்நுட்பத்தின் செயல் திறன் மற்றும் நம்பகத்தன்மையைச் சோதிக்க இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அமைப்பு டீசலுக்குப் பதிலாக சுமார் 40 சதவீதம் வரை எல்.என்.ஜி-யைப் பயன்படுத்த முடியும். எல்.என்.ஜி ரயில் எவ்வாறு இயங்கும்? இந்த ரயில் முழுமையாக எல்.என்.ஜி-யை மட்டுமே நம்பியிருக்காது. இதன் என்ஜின் எல்.என்.ஜி மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய 'டூயல் ஃபியூவல்' அமைப்பைக் கொண்டது. எரிபொருள் இருப்பைப் பொறுத்து என்ஜின், எல்.என்.ஜி மற்றும் டீசலுக்கு இடையே மாறிக் கொள்ளும். இதன் மூலம் எல்.என்.ஜி கிடைக்காத சூழலிலும் ரயில் சேவையைத் தடையின்றித் தொடர முடியும். மேலும், எல்.என்.ஜி பயன்பாடு காரணமாக மறுமுறை எரிபொருள் நிரப்புவதற்கு முன்பாகவே ரயிலால் நீண்ட தூரம் பயணிக்க முடியும். மாசு உமிழ்வைக் குறைக்க உதவி எல்.என்.ஜி பயன்பாடு டீசல் நுகர்வைக் குறைத்து என்ஜினிலிருந்து வெளியேறும் புகையைக் குறைக்கும் என்று இந்திய ரயில்வே எதிர்பார்க்கிறது. இந்தத் தொழில்நுட்பம் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள்கள் போன்ற மாசுபடுத்திகளைக் குறைக்க உதவுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்தை ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டிற்கு ரூ.23.9 லட்சம் வரை சேமிப்பு டீசலை விட எல்.என்.ஜி விலை குறைவு என்பதால், இது எரிபொருள் செலவையும் கணிசமாகக் குறைக்கும். சோதனைத் தரவுகளின் அடிப்படையில், ஒரு டி.பி.சி மூலம் இந்திய ரயில்வே ஆண்டிற்குச் சுமார் ரூ.11.9 லட்சம் வரை சேமிக்க முடியும் எனக் மதிப்பிட்டுள்ளது. 8 பெட்டிகளைக் கொண்ட ஒரு ரயிலுக்கு ஆண்டிற்குச் சுமார் ரூ.23.9 லட்சம் வரை சேமிப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு எல்.என்.ஜி சேமிக்க முடியும்? ஒவ்வொரு டி.பி.சி-யிலும் சுமார் 2,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட எல்.என்.ஜி டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டேங்கில் தோராயமாக 950 முதல் 1,000 கிலோ வரை பயன்படுத்தக்கூடிய எல்.என்.ஜி-யைச் சேமிக்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பின் படி, ஒரு டி.பி.சி-யில் முழுமையாக நிரப்பப்பட்ட எல்.என்.ஜி டேங்க் மூலம் நாளொன்றுக்கு சுமார் 444 கி.மீ தூர இயக்கத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்க முடியும். இது அடிக்கடி எரிபொருள் நிரப்பும் தேவையைச் சரிசெய்யும். என்ஜின் திறனில் எந்த மாற்றமும் இல்லை வழக்கமான டீசல் என்ஜினின் ஆற்றல், நம்பகத்தன்மை மற்றும் இயக்கச் செயல்திறனைப் பராமரிக்கும் வகையிலேயே இந்த எல்.என்.ஜி டூயல் ஃபியூவல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயிலின் வேகத்திலோ அல்லது செயல்திறனிலோ எந்தக் குறைபாடும் இல்லாமல் எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைந்த மாசு உமிழ்வை வழங்குவதே இந்தத் தொழில்நுட்பத்தின் நோக்கமாகும். "இந்திய ரயில்வே எல்.என்.ஜி டூயல்-ஃபியூவல் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது தூய்மையான ஆற்றல், எரிபொருள் திறன், குறைந்த இயக்கச் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய ஒரு முக்கிய முயற்சியாகும். எதிர்காலத்தில் மேலும் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் இந்த தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும்" என்று ரயில்வே தெரிவித்துள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஆண்டுக்கு ரூ.23.9 லட்சம் சேமிப்பு; இந்தியாவின் முதல் எல்.என்.ஜி ரயிலை தொடங்கி வைக்கும் அமித் ஷா
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk