தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக, திமுக, இடதுசாரிகள், அதிமுக மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அந்தந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நட்சத்திர போச்சாளர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தவெக சார்பில் மதுராந்தகத்தில் போட்டியிடும் வேட்பாளர் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3 மணி அளவில் பரப்பிரை மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம். QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி: தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து! இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? “இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும்” – ராகுல்காந்தி பேட்டி! “தவெக அரசின் விளம்பர மோகத்தால் சீரழியும் மக்கள் நலத் திட்டங்கள்” – டிடிவி தினகரன் விமர்சனம்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை!
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk