ஆய்வுகளின் முடிவுகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோவை மதுக்கரை ஏசிசி சிமெண்ட் ஆலையில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் தூசுகளால் அப்பகுதி முழுவதும் தூசுகள் படர்ந்து உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வீடுகள் மரம் செடி கொடிகள் வாகனங்கள் உணவு என அனைத்திலும் தூசுபடிந்து விடுவதாகவும் இது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறி அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த சிமெண்ட் ஆலையின் செயல்பாடுகள் குறித்து விரிவான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், சுற்று வட்டார பகுதிகளில் காற்றின் தரத்தை அறிவியல் முறையில் பரிசோதனை செய்து மாசு அளவை பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுப்புற நீர் நிலைகளின் தரத்தை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்க வேண்டும். தென்னை வாழை உள்ளிட்ட பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேளாண்மை துறை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும், அங்கு நிரந்தர தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஆய்வுகளின் முடிவுகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த அச்சங்கத்தினர் பதாகைகளை ஏந்தியும், மாஸ்க் அணிந்தும் அங்குள்ள தூசு படர்ந்த செடிகளுடன் மனு அளித்தனர். பி. ரஹ்மான். கோவை மாவட்டம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தூசுகளால் பாதிக்கப்படும் மக்கள்: மதுக்கரை சிமெண்ட் ஆலையில் ஆய்வு செய்ய கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk