மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைக் கடுமையாகச் சாடிய தமிழக முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய், சிறுமிகள் சீரழிக்கப்பட்ட வழக்கை முந்தைய ஆட்சி மூடி மறைத்ததாகக் குற்றம் சாட்டி ஆவேசமாகப் பேசினார். "தமிழ்நாட்டின் இளம் பெண்களைச் சீரழித்த வழக்கைப் முந்தைய ஆட்சியில் மூடி மறைத்துவிட்டனர்; இதில் கூடவா கூட்டு சேர்ந்து வாய் திறக்காமல் இருப்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பிய அவர், த.வெ.க ஆட்சியில் தான் அந்தப் குற்றவாளி கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார். மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பேசிய த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய், தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளை ஆவேசமாக விமர்சித்தார். "தமிழ்நாட்டின் இளம் பெண்களைச் சீரழித்த வழக்கைப் முந்தைய ஆட்சியில் மூடி மறைத்துவிட்டனர்; இதில் கூடவா கூட்டு சேர்ந்து வாய் திறக்காமல் இருப்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பிய அவர், த.வெ.க ஆட்சியில் தான் அந்தப் குற்றவாளி கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார். த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகம் இடைத் தேர்தலில் த.வெ.க சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆத்தூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது விஜய் பேசுகையில்: “இங்கே நான் ஒருத்தராக வரவில்லை, எப்போதும் போல உங்கள் வீட்டுப் பிள்ளையாக,உங்கள் வீட்டு மகனாக, உங்க வீட்டு அண்ணனாக, உங்க வீட்டு தம்பியாக நான் வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும், ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா, உங்கள் த.வெ.க ஆட்சிக்கு வரக்கூடாதா, ஒரு தனி கட்சியாக, சாமானியர்களுடைய ஒரு கட்சியாக, பெண்கள் பேராதரவுடன் இளைஞர்களின், பேராதரவுடன், குடும்பங்களின் பேராதரவுடன், பெண்களுடைய பாதுகாப்புக்காக, போதை பொருளை ஒழிக்க, ரொம்ப முக்கியமாக லஞ்சத்தை ஒழிக்க, ஊழலை ஒழிக்க உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? பிறகு ஏன் இந்த தி.மு.க தினமும்... மன்னிக்கணும் கொஞ்சம் டச் விட்டுப்போய் விட்டது. தீய சக்தி தி.மு.க” என்று விஜய் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது விஜய், “ஓம் சக்தி பராசக்தி” என்று கூறியதும் திரண்டு இருந்த தொண்டர்கள் தீய சக்தி தி.மு.க என்று கோஷம் விட்டனர். தொடர்ந்து பேசிய விஜய், “தீய சக்தி தி.மு.க நம்மை பார்த்து தினம் தினம் அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஒரே ஆபாச நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஏன் தான் இப்படி பேசுகிறார்களோ என்று எனக்கு தெரியவில்லை. இது எல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் சினிமாவில் வெற்றி பெற்றதற்கும் அரசியலில் வெற்றி பெற்றதற்கும் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் என்னுடைய உறவுகள் தான் காரணம். அந்த உறவுகளால் தான் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு. இரண்டரை வருடங்களுக்குள்ளே 35 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற முடிந்தது. ஒரு தனி பெரும் கட்சியாக நம்மால் வெற்றி பெற முடிந்தது. அன்றைக்கு ஜெயலலிதாவை இதே ஸ்டாலின் சார் தான் அவதூறாக பேசிய அந்த வீடியோ இன்னும் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள். இந்த மாதிரி எல்லாம் பேசியது அவர் மட்டுமல்ல அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இப்படித்தான் பேசுகிறார்கள். அந்த கட்சியில் இருக்கிற பெரிய பெரிய பொறுப்புகளில் இருக்கிறவர்களும் இப்படித்தான் பேசுகிறார்கள். இதையெல்லாம் மக்களாகிய நீங்கள் ரொம்ப உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இப்படி தி.மு.க ஒரு பக்கம் பேசிக் கொண்டிருந்தால் இதற்கு மறைமுகமாக ஆதரவு தருவது யார் தெரியுமா, யார் தெரியும் இல்லையா, ஒரு மூன்று நான்கு மாதம் ஆகிவிட்டது ரீகால் பண்ணுகிறேன். அதுதான் அ.தி.மு.க. அதாவது ஜெயலலிதாவையே தப்பா பேசினவர்களோடு ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஐடியா பண்ணப்பவே இந்த மற்றும் பலருடைய திட்டமெல்லாம் என்னவென்று முழுவதுமாக தெரிந்துவிட்டது. அப்போதே அவர்களுடைய முகமூடி எல்லாம் கிழிய ஆரம்பித்துவிட்டது. இதில் ஹைலைட்ஸ் என்னவென்றால் அவர்களுடைய முகமூடி கிழிந்ததும் தெரியாமலே கூவிக் கொண்டிருக்கிறார்கள். சரி யார் என்ன கூறினால் நமக்கு என்ன, நம்ம ரூட் ஒரே ரூட்டு தான். ஸ்ட்ரைட் ரூட் தான். அதனால் மதுராந்தகம் தொகுதி மக்களே இந்த இடைத்தேர்தலில் நம்முடைய த.வெ.க சார்பில் மரகதம் குமரவேலுக்கு தயவுசெய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். என்று பேசினார். மதுராந்தகத்தில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பேசிய முதலமைச்சர் விஜய் தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தார். அப்போது விஜய் பேசுகையில்: “என் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியவில்லை என்ற கடுப்பில், விரக்தியில் தி.மு.க-வினர் ஒரு அபாயகரமான ஆயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். எனது சொந்தத் தாயை, என்னை பெற்ற தாயை, எனது அம்மாவை அவர்கள் தப்பாக பேசும்போது கூட நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிற என்னுடைய அம்மா, அக்கா., தங்கைகள், எனக்கு துணையாக இருக்கிற தாய் அன்பு காட்டுகிற தமிழ்நாட்டுப் பெண்களை அவர்கள் அசிங்கமாக பேசும் போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தி.மு.க தலைமையும் இப்படி தான் பேசுகிறார்கள், தி.மு.க குடும்பத்தில் இருந்தும் இப்படித்தான் பேசுகிறார்கள். அந்த பழக்க தோஷத்தில் ஸ்டாலின் சாரும் அந்த குடும்பத்தில் இருக்கிறவர்களும் உக்காந்து ரசிக்கிறார்கள். இனிமேல் இதை யாரும் பொறுத்துக் கொள்ளவே முடியாது” என்று கூறினார். மதுராந்தகத்தில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இங்கே இன்னொரு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். நம்முடைய தமிழ்நாட்டு இளம் பெண்களை பச்சைப் பிள்ளைகளை ஒருத்தன் இத்தனை வருடங்களாக சீரழித்துக் கொண்டிருந்தான். அந்த வழக்கு போன தி.மு.க ஆட்சியில் வந்தும் அந்த வழக்கை அந்த அத்தியாயத்தை அந்த வழக்கின் வரலாற்றையே மூடி மறைத்து விட்டார்கள். இதற்காக உள்ளுக்குள்ளே என்ன டீலிங் நடந்தது. தமிழ்நாடே கேட்கிறது, வாயை திறங்கள் சார், ஸ்டாலின் சார் வாயை திறங்கள். உங்களோடு சேர்ந்து அந்த மற்றும் பலரும் வாயை திறக்காமல் இருக்கிறார்கள். இதில் கூடவா கூட்டு, இதுல கூடவா கூட்டு சேர்ந்து கொண்டு வாய் திறக்காமல் இருப்பீர்கள். என்னமோ இவர்கள் பெண்கள் பாதுகாப்புக்கு என்றே பிறந்த மாதிரி, இந்த தி.மு.க-வும் இந்த மற்றும் பலரும் பேசுகிறார்கள். இப்போது அவனைப் பற்றியும் வாயை திறக்கவில்லை. அந்த ஆளைப் பற்றியும் வாய் திறக்கவில்லை. இத்தனை வருடமாக மூடி மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தை விஜய் வந்தவுடன் தோண்டி எடுத்து அந்த நபரை உள்ளே தூக்கி வைத்து விட்டான். அந்த அதிர்ச்சியில் வாயைத் திறக்க திறக்காமல் இருக்கிறீர்களோ என்று எனக்கு தெரியவில்லை. எல்லாமே அவர்கள் பச்ச பிள்ளைகள், அவர்களுடைய வலியைப் பற்றி வெளியில வந்து பேச முடியவில்லை என்றால் அப்புறம் நீங்கள் என்ன அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தனை வருஷமாக நீங்கள் என்ன அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், அதனால் மக்களே இந்த இடைத்தேர்தலில் இந்த தீய சக்திக்கு மற்றும் பலருக்கும் சரியான ஒரு பாடம் புகட்டியாக வேண்டும்” என்று விஜய் பேசினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'எல்லாம் பச்சைப் புள்ளைங்க... இதுல கூடவா தி.மு.க-வும் மற்றும் பலரும் கூட்டணி போடுவீங்க?': மதுராந்தகம் பிரச்சாரத்தில் விஜய் ஆவேச கேள்வி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk